Friday, April 22, 2011

இரத்தப்படலம் - சிறப்பு செய்திகள்

இரத்தப்படலம் - சிறப்பு செய்திகள் 

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நேற்று திரு வாண்டுமாமா அவர்களுக்கு பிறந்த நாள். அவருக்கு தாமதமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். இன்று ஓர் அவசர வேலையில் (அட, காத்தவ் உடன் இல்லைங்கோவ்) இருப்பதால் இரண்டே இரண்டு செய்திகளை மட்டுமே வெளியிட இந்த சிறப்பு செய்தி பதிவு. செய்திகள் இரண்டுமே இரத்தப்படலம் இதழுடன் சம்பந்தப்பட்டு இருப்பதால் தலைப்பு இரத்தப்படலம் - சிறப்பு செய்திகள் என்று இருக்கிறது. செய்திகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே பார்ப்போமா?

இரத்தப்படலம் சிறப்பு செய்தி 1: இரத்தப்படலம் புத்தகம் - ஆன்லைனில் வாங்க:

bloodpadalamபல அன்பர்கள் இன்றைக்கும் இரத்தப்படலம் இடழ் எங்கே கிடைக்கும் என்று கேட்டுக்கொனே இருக்கிறார்கள். ஆன்லைனில் கிடைக்குமா? சென்னையில் கிடைக்குமா? திண்டிவனம் பக்கத்துல கிடைக்குமா? என்றெல்லாம் பல கேள்விகள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லும் தகவலே இந்த பதிவின் முதல் செய்தி: நீங்கள் இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் இதழை ஆன்லைனில் உடுமலை.காம் தளத்தில் வாங்கலாம். அதற்க்கான லிங்க் இதோ:

   http://udumalai.com/?prd=Raththa%20padalam&page=products&id=9013

இங்கே நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் இரண்டு.

ஒன்று: விலை இருநூறு ருபாய் மட்டுமே. ஐநூறோ, நானூறோ இல்லை. இவர்கள் கலைசேவை செய்கிறார்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளவும் இல்லை. தட்ஸ் ஆல்.

இரண்டு: நீங்கள் ஆர்டர் செய்த மூன்று வேலை நாட்களிலேயே உங்கள் விலாசம் தேடி இந்த புத்தகம் வந்துவிடும்.

ஆர்டர் செய்வது எப்படி ?

1)   புத்தகங்களை எப்படி வாங்குவது
மிகச்சுலபம். முதலில் நமது தளத்தில் பயனர் கணக்கு தொடங்குங்கள். பின்னர் வேண்டிய புத்தகங்களை 'Buy now' பொத்தானை கிளிக் செய்து தேர்வு செய்யுங்கள். இறுதியாக கடன் அட்டை/வங்கிக்கணக்கு மூலம் பணம் செலுத்துங்கள். குறிப்பிட்ட நாட்களுக்குள் புத்தகம் உங்களை வந்தடையும்
2)   என்னிடம் கடன் அட்டை (credit card) / வங்கிக்கணக்கு இல்லை. அப்பறம் எப்படி வாங்குவது?
இன்னும் சுலபம். உங்களுக்கு தேவையான புத்தகங்களின் பட்டியலுடன் +91 99946 80084 என்ற எண்ணுக்கு அழையுங்கள். உங்கள் முகவரியும் தெரிவித்தால் போதும். தபால்காரரிடம் புத்தகம் பெற்றுக்கொண்டு பணம் செலுத்தும் முறையில் (VPP) புத்தகங்களை அனுப்பி வைக்கிறோம். அதுவும் 500 ரூபாய்க்கு மேல் வாங்கினால் தபால் செலவு ஏதும் இல்லாமலேயே அனுப்பி வைக்கிறோம். நீங்கள் வெறும் புத்தகங்களின் விலையை மட்டும் செலுத்தினால் போதுமானது இம்முறை எந்த மாநிலத்திற்கும் இந்தியாவிற்குள் மட்டும் பொருந்தும். அயல் நாட்டிலுள்ள தமிழர்கள் எங்களை அழையுங்கள். வாங்கும் வழிமுறைகள் கூறுகிறோம்
3)   தபால் செலவு எவ்வளவு?
இந்தியாவிற்குள் எங்கும் கிலோவிற்கு 20 ரூபாய் மட்டும். அயல் நாடுகளில் கிலோவிற்கு 500 ரூபாய் மட்டும். அயல் நாடுகளுக்கு மொத்தமாக வாங்கினால் தபால் செலவு குறையும். எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் விபரங்களைத் தருகிறோம்.
4)   வேறு வழிகளில் பணம் செலுத்த முடியுமா?
தாராளமாக. எங்களை தொடர்பு கொண்டு வேண்டிய புத்தகங்களின் பட்டியலைக் கூறுங்கள். நாங்கள் புத்தகத்தின் விலையையும் தபால் செலவையும் கூறுகிறோம். நீங்கள் பணம் செலுத்தியவுடன் எங்களுக்கு தெரிவியுங்கள். நாங்கள் புத்தகத்தை அனுப்பி வைக்கிறோம்.
Our Bank Details:
ICICI Bank Account Number :   6215 050 11095
Branch: Udumalpet
Name: Udumalai Book Centre
IFSC/RTGS/NEFT Code: ICIC0006215
We also have SBI, HDFC bank accounts. Please ask for Details
5)   நேரில் வந்து வாங்கலாமா?
எங்களது புத்தகக்கடை உடுமலைப்பேட்டையில் உள்ளது. எந்த கிழமையும் எந்நேரமும் வந்து வாங்கலாம்.
6)  நேரில் கொண்டுவந்து கொடுத்து பணம் பெற்றுக் கொள்வீர்களா?
சென்னையில் ரூ.1500க்கு மேல் புத்தகங்கள் வாங்கினால் புத்தகங்களை உங்கள் வீடு தேடி வந்து கொடுத்து பணம் பெற்றுக் கொள்கிறோம் அதுவும் தபால் செலவு ஏதும் இல்லாமலே.
குறிப்பு:
1) காசோலைகள் ஏற்றுக்கொள்வதில்லை. 2) சென்னை மற்றும் ஒட்டியுள்ள புறநகர்களில் மட்டுமே டெலிவரி செய்ய இயலும்
மற்றபடி கோயம்புத்தூர் திருப்பூர் தாராபுரம் பழனி ஒட்டன்சத்திரம் பொள்ளாச்சி மூணார் வால்பாறை ஆகிய ஊர்களில் 1000 ரூபாய்க்கு மேல் வாங்கினால் அந்த ஊர்களின் பேருந்து நிலையத்திற்கு வந்து புத்தகங்களை அளித்து பணம் பெற்றுக்கொள்ள முடியும்.
chennai@udumalai.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் புத்தகங்களின் பட்டியல் மற்றும் உங்கள் முகவரியையும் அனுப்பலாம். அல்லது +91 99946 80084 என்ற எண்ணில் அழைத்தும் ஆர்டர் செய்யலாம்.
7) இப்போது சென்னை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களிலும் டெலிவரி செய்ய இயலும்!
நீங்கள் விரும்பும் புத்தகங்களை சென்னை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களிலேயே வந்து கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்கிறோம். வெளிநாடுகளில் வசிப்போர் அல்லது வெளிநாட்டுக்கு செல்வோர்க்கு இத்திட்டம் உதவியாக இருக்கும். குறைந்தப்பட்ச ஆர்டர் மதிப்பு 1000 ரூபாய் மட்டும். வந்து கொடுப்பதற்கு ரூ 50 மட்டும் புத்தகங்களின் விலையை விட அதிகமாக கொடுத்தால் போதுமானாது. உங்களுக்கு தேவையான புத்தகப்பட்டியல் மற்றும் வந்து புத்தகம் கொடுக்கும் நேரத்தை ஒரு நாள் முன்பாகவே +91 91503 01778 என்ற எண்ணிற்கு அழைத்து கூறினால் போதுமானது. விரைவில் திருச்சி விமான நிலையத்திற்கு இச்சேவையை அளிக்கவிருக்கிறோம்
8)   எனக்கு தேவையான புத்தகம் உங்கள் தளத்தில் இல்லை. என்ன செய்வது ?
எங்கள் தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் வேண்டிய புத்தகத்தின் பெயரும் உங்கள் தொலைப்பேசி எண்னையும் கொடுத்து விடுங்கள். கிடைத்ததும் தெரியப்படுத்துகிறோம். அல்லது
இந்த பக்கத்தில் உங்களுக்கு வேண்டிய புத்தகத்தின் விபரங்களை தெரிவியுங்கள். பின்னர் தொடர்பு கொள்கிறோம்.

Vetri Vizhaஇரத்தப்படலம் சிறப்பு செய்தி 2: நடிகர் கமல் ஹாசன் நடித்த இரத்தப்படலம் படம் ஆதித்யா சேனலில்

பதிவுலக அன்பர் கருந்தேள் அவர்களின் ஆத்மார்த்த நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பல சிறப்பு வேடங்களில் நடித்தது நமக்கெல்லாம் தெரிந்ததே. அவர் இரத்தப்படலம் முதல் பாகம் கதையில் நடித்தது பலருக்கும் தெரியாது. ஆகையால் இந்த ஞாயிற்று கிழமை காலை பத்து மணிக்கு உங்கள் (ச்சே, இந்த விளம்பரங்களை பார்த்து, பார்த்து அப்படியே எழுத வருகிறது) ஆதித்யா சேனலில் இரத்தப்படலம் கதையினை உள்ளடக்கிய வெற்றி விழா படத்தை பார்க்க தவறாதீர்கள்.

அன்றைய அளவில் படம் எடுக்கப்பட்டு இருந்தாலும்கூட சமீபத்தில் எடுக்கப்பட்ட XIII படம் அளவுக்கு மொக்கையாக இருக்காது என்பதற்கு நான் உத்திரவாதம். நம்பி பார்க்கலாம்.

விரைவில் உங்கள் அனைவருக்கும் பிடித்தமான கிசு கிசு செய்திகளுடன் வந்து உங்களை சந்திக்கிறேன்.

பூங்காவனம்,  
எப்போதும் பத்தினி.

Thursday, April 14, 2011

இளைய தளபதி விஜய்'யின் வேலாயுதம் படக்கதை

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நெடு நாட்களாக பதிவிடாமல் இருந்தமைக்கு மன்னிக்கவும். சீக்ரெட் ஏஜென்ட் காத்தவ் தொடர்ந்து பல வேலைகளை எனக்கு கொடுத்ததால் என்னால் பதிவுலகம் பக்கமே வர இயலவில்லை (காத்தவ் டியர், கொஞ்சம் சும்மா இருங்களேன், இன்றைக்கு நம்ம கிங் விஸ்வாவின் பிறந்த நாள். அதனை சிறப்பிக்கும் வகையில் இன்றாவது ஒரு பதிவு இடுகிறேன்?  பிளீஸ்...அதெல்லாம் பதிவுக்கு பிறகு) இதனை "அதெல்லாம் கல்யாணத்துக்கு பிறகு" என்று எண்பதுகளின் ஹீரோயின் கூறும் ஸ்டைலில் படியுங்கள் – எடிட்டர்.

நம்முடைய வலையுலக ரிபோர்ட்டர் கிசுகிசு கோபால் சமீப காலங்களில் தமிழ் காமிக்ஸ் வலையுலகில் நடந்து வரும் சுவையான தகவல்களை கிசு கிசு வடிவில் அளித்து வந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரும் பல கிசு கிசுக்களை ரெடியாக வைத்திருக்கிறார். அந்த கிசு கிசுக்களை பதிவிடலாமா வேண்டாமா என்று கருத்து தெரிவியுங்கள். பின்னர் விரைவில் காமிக்ஸ் உலக கிசு கிசுக்களை இங்கே பார்க்கலாம் (இங்கே என்றால் இந்த வலை ரோஜாவில், நான்சென்ஸ்).

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஹிந்தியில் ஷா ருக் கான் நடித்து டான் படம் ரீமேக் செய்யப்பட்டபோது அதனை விளம்பரப்படுத்தும் வகையில் அந்த படத்தின் முழு கதையும் காமிக்ஸ் வடிவில் படக்கதையாக வெளியிடப்பட்டது, படத்தின் போட்டோக்களுடன் (Photo Comics). முழு வண்ணத்தில் 120 பக்கங்களுடன் வந்த அந்த காமிக்ஸ் புத்தகம் ஒரு மாபெரும் வெற்றி பெற்றது. அதனைப்போலவே தமிழிலும் ஒரு படத்தின் காமிக்ஸ் கதையை புத்தகமாக வெளியிடுவதே குறிக்கோளாக இயக்குனர் மிஷ்கின் கொண்டுள்ளார். அந்த வகையில் சென்ற மாதம் நக்கீரன் பதிப்பகம் வெளியிட்ட சினிக்கூத்து புத்தகம் இளைய தளபதி விஜய் நடிக்கும் (சரி, சரி, கூல் டவுன்) வேலாயுதம் படத்தின் படக்கதையை ஒரு தனி புத்தகமாக வெளியிட்டார்கள். அந்த புத்தகமே இந்த பதிவின் அச்சாணி.

பதினைந்து ருபாய் விலையுள்ள அந்த புத்தகத்தை கஷ்டப்பட்டு வாங்கினேன் (பின்னே, சூடான விற்பனை அல்லவா, அதாங்க ஹாட் சேல்ஸ்). அந்த அற்புத, வரலாற்று சிறப்பு மிக்க பக்கங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன், அதன் விளைவே இந்த பதிவு. அட்டைப்படத்தையும், முதல் பக்கத்தையும் பார்த்தது ரசியுங்கள் (சுறா ரசிகர் மன்ற விசிலடிச்சான் குஞ்சுகள் முதல் பக்கத்தில் இருந்க்கும் அந்த பன்ச் டையலாக்கை படித்து விட்டு தங்கள் அலுவலகத்தில் விசிலடித்து மற்றவர்களை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம், குறிப்பாக பிரான்ஸ் கிளை).

சினிக்கூத்து மார்ச் மாத ஸ்பெஷல் இதழ் - வேலாயுதம் படக்கதை - அட்டைப்படம் சினிக்கூத்து மார்ச் மாத ஸ்பெஷல் இதழ் - வேலாயுதம் படக்கதை - முதல் பக்கம்
Velayudham Padakkadhai Cover Velayudham Punch Dialogue

நெடு நாள் வாசகர்கள் இந்த பன்ச் டையலாக்கை படித்து விட்டு நம்முடைய தளத்தில் ரெகுலராக கமென்ட் இடும் ஆத்தா குருவை நினைக்காமல் இருந்தால் சரி. லேட்டாக வந்தவர்களுக்கு ஆத்தா குரு பற்றிய சிறு பின் குறிப்பு: எல்லாரும் பிறக்கும்போது அம்மா என்று தான் சொல்லுவார்கள், ஆனால் ஆத்தா குரு மட்டும் சற்று வித்தியாசமாக ஆத்தா என்று கூறினான், அதில் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட்டு விட்டது. அதில் இருந்து ஆத்தா குரு என்ன பேசினாலும் அதில் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் வந்து விடுகிறது.

சரி, சரி. ரொம்ப மொக்கை போடாமல் விஷயத்திற்கு வருவோம். இதோ நான் மிகவும் கஷ்டப்பட்டு ஸ்கான் செய்த அந்த வேலாயுதம் படக்கதை பக்கங்கள்:

சினிக்கூத்து மார்ச் மாத ஸ்பெஷல் இதழ் - வேலாயுதம் படக்கதை – ஆ….ரம்பம்  - முதல் பக்கம்

Velayudham Padakkadhai 01

நன்றாக பாருங்கள், அவர்களே வெளியிட்டுள்ளார்கள் படக்கதை என்று. இந்த ஆரம்பம் என்ற வார்த்தையில் இடையில் கொஞ்சம் கேப் (ஆ……..ரம்பம்) வந்தது நம்முடைய தவறு அல்ல. ஒக்கே, லெட்ஸ் கோ டு தி படக்கதை.

சினிக்கூத்து ஸ்பெஷல் இதழ் - வேலாயுதம் படக்கதை – ஆ….ரம்பம்  - 2ம் பக்கம் சினிக்கூத்து ஸ்பெஷல் இதழ் - வேலாயுதம் படக்கதை – ஆ….ரம்பம்  - 3ம் பக்கம்
Velayudham Padakkadhai 02 Velayudham Padakkadhai 03

என்னங்க, வேலாயுதம் படக்கதையை படித்து விட்டீர்களா? என்னாது என் மேலே கொலை வெறியில் இருக்கிறீர்களா? ஹலோ, அப்போ கொஞ்சம் என்னோட நிலையையும் யோசித்து பாருங்க மக்கள்ஸ். நீங்களாவது சும்மா இணைய தளத்தில் வந்து பார்த்து விட்டு கடுப்பாகி கொலை வெறி கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் நானோ பதினைந்து ருபாய் கொடுத்து இந்த புக்கை வேறு வாங்கி தொலைத்தேன். வெட்டியாக அதை பிரித்து பார்த்து கடுப்பாகிவிட்டேன். இப்போ சொல்லுங்கள், நான் பட்ட கஷ்டம் எப்படி பட்டது என்று.

இந்த பதிவை ஏப்ரல் மாதம் முதலாம் தேதியில் தான் வெளியிட இருந்தேன். ஆனால் திடீரென்று நம்ம கிங் விஸ்வாவின் நினைவு வந்தது. இன்று அவரது பிறந்த நாள் என்பதால் இதோ அவருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பிளஸ் இந்த பதிவை அவருக்கு டெடிகேட் செய்கிறேன்.

பூங்காவனம், 
எப்போதும் பத்தினி.

Related Posts Widget for Blogs by LinkWithin