நம்முடைய வலையுலக ரிபோர்ட்டர் கிசுகிசு கோபால் சமீப காலங்களில் தமிழ் காமிக்ஸ் வலையுலகில் நடந்து வரும் சுவையான தகவல்களை நம்முடைய வலைப் பூவில் பகிர்ந்து கொள்ள சம்மதித்து அவருடைய கைங்கர்யமான கிசு கிசு கார்னர்-1 , கிசு கிசு கார்னர்-2 , கிசு கிசு கார்னர்-3 மற்றும் கிசு கிசு கார்னர்-4 வாசகர்களிடையே பெற்ற வரவேற்பினால் இதோ அதன் அடுத்த கட்டம்: கிசு கிசு கார்னர்-5.
சமீபத்தில் திருமண பந்தத்தில் மூழ்கி இல்லற வாழ்வை இனிதே அனுபவித்து வரும் தென்னம்பாளயத்தார், இந்த தீபாவளியை தல தீபாவளியாக கொண்டாட இருப்பது தெரிந்த மருத்துவர் விஜய்'ன் தந்தையும் வருங்கால தமிழக கவர்னருமாகிய எஸ்.சந்திரசேகரா* (பின்னே, மருத்துவர் விஜய் வருங்கால முதல்வர் என்றால் அவரது தந்தை குறைந்த பட்சம் ஒரு தமிழக கவர்னர் ஆக கூட இருக்கக் கூடாதா என்ன? ) உடனடியாக தென்னம்பாளயத்தாரை தொடர்பு கொண்டு இந்த தீபாவளியை "இளைய தளபதி தீபாவளியாக" கொண்டாடும்படியாக கேட்டுக் கொண்டார்.
அதாவது, தல தீபாவளி என்றால் அது அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களை குறிக்கும். அதனால் அரசியல் கருத்துக்களை அஞ்சாமல் அள்ளி வீசும் தென்னம்பாளயத்தார் எங்கே தல தீபாவளி கொண்டாடி அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் புகழை பரப்பி விடுவாரோ என்று பயந்தே தல தீபாவளியாக கொண்டாடாமல் "இளைய தளபதி தீபாவளியாக" கொண்டாடும்படியாக கேட்டுக் கொண்டார்.
ஆனால், ஒபாமாவுக்கே உப்புமா கொடுக்க மறுத்த தென்னம்பாளயத்தார் மருத்துவர் சின்ன கொய்யா கேட்டுக் கொண்டதற்கு இணங்க பெரிய கொய்யா பேச்சுக்கா செவி சாய்ப்பார்? அதனால் அவர் வழக்கத்தை மாற்றாமல் இந்த தீபாவளியை தல தீபாவளியாக மட்டுமே கொண்டாடுகிறார். இதனால் மனம் நொந்த மருத்துவர் சின்ன கொய்யா விஜய் தன்னுடைய படமாகிய வேட்டைக்காரனை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யாமல் தள்ளிப் போட்டு விட்டார். இதற்க்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் (குடும்ப உத்தரவு - ஆதவன் ரிலீஸ், பாடல் மறுபடியும் ஷூட்டிங்) உண்மையான காரணம் தென்னம்பாளயத்தார் தல தீபாவளி கொண்டாடுவதுதானாம்.
மருத்துவர் விஜய் ரசிகர்கள் மனம் மகிழ இதோ அசல் படத்தின் போட்டோவும், அசலான அசல் படத்தின் போட்டோவும். தல ரசிகர்கள் மன்னிக்கவும்.
இப்படியாக என்பது வருட தமிழ் சினிமா வரலாற்றில் தனி ஒரு மனிதரின் தல தீபாவளி ஒரு படத்தின் ரிலீஸ்'ஐயே தள்ளிப் போட்ட சம்பவம் முதன் முறையாம். அதனால், தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக நடந்த இந்த சம்பவத்தை உங்களுக்கு தீபாவளி ஸ்பெஷல் தகவலாக அளிப்பதில் பூங்காவனத்துக்கு பெருமை.
*வருங்கால தமிழக கவர்னருமாகிய எஸ்.சந்திரசேகரா* என்று இருப்பதை வருங்கால தமிழக கவர்னருமாகிய வருங்கால மருத்துவர் எஸ்.சந்திரசேகரா என்று வாசிக்கவும். ஏனென்றால், மருத்துவர் விஜய் அரசியலில் குதித்த உடனே அவரின் தந்தைக்கும் ஏதாவது ஒரு தனியார் பல்கலைக் கழகம் மருத்துவர் பட்டத்தை கொடுத்து தொலைப்பார்கள். அதனால் அவரை வருங்கால தமிழக கவர்னருமாகிய வருங்கால மருத்துவர் எஸ்.சந்திரசேகரா என்று கூறுவதில் தவறேதும் இல்லை தானே?