Friday, October 2, 2009

கிசு கிசு கார்னர் 4 - காணாமல் போன காமிக்ஸ் பதிவர்கள்!

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நம்முடைய வலையுலக ரிபோர்ட்டர் கிசுகிசு கோபால் சமீப காலங்களில் தமிழ் காமிக்ஸ் வலையுலகில் நடந்து வரும் சுவையான தகவல்களை நம்முடைய வலைப் பூவில் பகிர்ந்து கொள்ள சம்மதித்து அவருடைய கைங்கர்யமான கிசு கிசு கார்னர்-1 , கிசு கிசு கார்னர்-2 , கிசு கிசு கார்னர்-3 வாசகர்களிடையே பெற்ற வரவேற்பினால் இதோ அதன் அடுத்த கட்டம்: கிசு கிசு கார்னர்-4.

சமீப காலமாக காமிக்ஸ் வலைப் பதிவர்கள் சிலர் காணாமல் போய் விட்டது குறித்து தமிழ் காமிக்ஸ் ஆர்வலர்கள் மனவருத்தமடைந்துள்ளனர். இதோ அவர்களது வருத்தம் போக்கும் வாலிப விருந்தாக சில பல சுவையான கிசுகிசுக்கள்.
 1. தமிழ் காமிக்ஸ் வலையுலக பீஷ்ம பிதாமகர் ஆகிய அந்த ரேலிஃபேன் பதிவர் இன்றோடு இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் & டேவிட், ஜானி நீரோ வாழும் உலகிலிருந்து வெற்றிகரமாக பணிகளை முடித்து விட்டு தனது ஊரான இது எந்த ஊர்?” என்று கேட்க வைக்கும் ஊருக்கு திரும்புகிறார். அவரது பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
 2. தமிழ் காமிக்ஸ் வலையுலகின் “முடி”சூடா மன்னன் ஆக திகழும் அந்த பதிவர் சமீப காலமாக உலகெங்கிலும் உள்ள பல நகரங்களில் (பெங்களூரு, ஹைதராபாத் தொடங்கி இலண்டன், சிங்கப்பூர் வரை) காணப்பட்டதாக வதந்திகள் உலவினாலும் சமீபத்தில் தென் ஆப்பரிக்காவில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியொன்றில் (இந்தியா-பாகிஸ்தான்) தொலைகாட்சியில் சில வினாடிகள் தோன்றியதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 3. அதே போல் அவருக்கு மிகவும் வேண்டப்பட்ட விரோதியான ஒரு பயங்கரவாதி பதிவரும் சமீபத்தில் திருச்சியில் தென்பட்டதாகவும் பட்சி கூறுகிறது. “பயங்கரவாதி பதிவர் ஜலஜாவுடன் ஜல்சா! திருச்சியில் 'திரு திரு துறு துறு' தியேட்டரில் கிளு கிளு குளு குளு!” என்கிற ரீதியில் திருச்சி நாளேடுகளில் தலைப்புச் செய்திகள் வெளியாவதாகவும் தகவல்.
 4. போலீஸாரால் தீவிரமாகத் வேட்டையாடப்பட்டு வரும் அந்த காமிக்ஸ் டாக்டர் ஒருவேளை பிடிபட்டால் சிறையில் இருக்கும் போது “மோட்சத்திற்கு அப்பால்...மினி மோட்சம்” என்ற பெயரில் கிராபிக்ஸ் நாவல் ஒன்று எழுத திட்டமிட்டிருக்கிறாராம். இதற்கு அவருக்கு உந்துதலாக விளங்கியது இந்தப் பதிவுதானாம். அதைக் கூட தனது சொந்தப் பெயரில் எழுதாமல் தீவிரவாதி டாக்டர் செக்ஸ்...ச்சீ டாக்டர் சிக்ஸ் என்ற புனைப்பெயரில் தான் எழுதப் போகிறாராம். பதிப்பகத்தாருடன் பேச்சுவார்த்தைகள் இப்போதே தீவிரமாக நடைபெறுவதாக தகவல்.
 5. தென்னம்பாளையத்தார் திருமண பந்தத்தில் மூழ்கி இல்லற வாழ்வை இனிதே அனுபவித்து வருகிறார். சமீபத்தில் அவர் வீட்டிற்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பூரிக்கட்டை வாங்கியுள்ளார். மரத்தால் செய்த பூரிக்கட்டைகள் சுலபத்தில் உடைந்து விடுவதாகத் த்கவல்.
 6. அதே போல் இன்று காந்தி ஜெயந்தி (காந்தி நம் தேசத்தந்தை, ஆனால் ஜெயந்தி ஒரு சூப்பர் ஃபிகர்). எனவே தென்னம்பாளையத்தார் உடன் உரையடுபவர்கள் கவனமாக பேச்சுவாக்கில் காந்தி பற்றிய மூச்சு கூட விடாமல் அவரிடம் பேசுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். சமூக நலன் கொண்டு இந்த கிசுகிசு வெளியிடப் படுகிறது.
இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

கிசுகிசு கோபால்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே.

-- சிறப்பான கிசு கிசு'க்களுக்கு நன்றி கோபால்.

பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.

17 comments:

 1. wow, this site is also active. thanks.

  kindly keep up this site and also the tcu site.

  thanks in much advance.

  ReplyDelete
 2. i will try to get the names correctly.

  the first one is about the MF. RIGHT?

  ReplyDelete
 3. வழமை போன்றே கிச்சு கிச்சு கோபால் மிஸ் பண்ணிய பக்கோடாக்கள் இதோ.

  முடி சூடா மன்னர் அருகில் இருந்து கொண்டே அவரிற்கு முத்தம் தந்து கொண்டிருந்த முடியில்லா ஆபிரிக்கன் லேடி.

  தியேட்டரில் நடிகை ஜல்சா கண்ட திருதிரு மச்சம். நடிகை ஜல்சா மருத்துவமனையில் அனுமதி. மன்மத தீவிரவாதிக்கு சிஜஎ வலை விரிப்பு.

  ReplyDelete
 4. ஆபிரிக்கன் லேடிக்கு எங்கே முடியில்லை என்று கேட்டு எனக்கு மெயில் அனுப்பாதிர்கள் நண்பர்களே :)))

  ReplyDelete
 5. "என்னடா இது ஒரு வெத்தல ஒரு பாக்கு?? "

  (பூங்காவனம் மேடம், நீங்க மட்டும் தான் சம்பந்தமே இல்லாமல் எங்கள் தலைவரின் படத்தை போடுவீர்களா?? நாங்களும் சம்பந்தமே இல்லாமல் டயலாக் விடுவோம்ல்ல)

  அப்புறம் சவுத் ஆப்பிரிக்காவின் முதன்மை பத்திரிக்கைகளில் "ஆப்பிரிகாவில் பூங்காவனம் அம்மையாரின் அலம்பல்கள்" என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி ரெடியாகி வருகிறதாம்

  ReplyDelete
 6. மீண்டும் வந்தமைக்கு நன்றிகள் பல.

  தொடருமா இந்த சேவை?

  ReplyDelete
 7. முத்தாத பேன்

  கிங் புஸ்வா

  பயங்கரவாதி டாக்டர் அவன்

  செக்ஸ் டாக்டர்

  அய்யம்பளயத்தார்.

  ReplyDelete
 8. புதுக்கோட்டையிலிருந்து சரவணன்October 2, 2009 at 7:05 PM

  செக்ஸ் டாக்டரிடம் ஒர் கேள்வி!

  கோழிகள் முட்டைகளைப் போடும் போது அவை ஏன் உடைவதில்லை?

  ReplyDelete
 9. மலையூர் மம்பட்டியான்October 2, 2009 at 7:12 PM

  மினி மோட்சத்தில் கொத்து பரோட்டா கிடைக்குமா?

  ReplyDelete
 10. நவரஸ நடிகை ஜலஜாOctober 2, 2009 at 7:14 PM

  இட்ஸ் ஹியூஜ் அண்ட் ஹாரிபிள்!!!

  ReplyDelete
 11. சூப்பர் பிகர் ஜெயந்திOctober 2, 2009 at 7:21 PM

  என் வாழ்வில் நான் பார்க்காத பயங்கரங்களா!!!

  ReplyDelete
 12. கேப்டன் பிரபாகரன்October 2, 2009 at 7:24 PM

  யாரப்பா அது பயங்கரவாதி டாக்டர் செக்ஸ்!!!

  ReplyDelete
 13. அட்டகாசம். அதுவும் அந்த மோட்சத்திற்கு அப்பால் மினி மோட்சம் மேட்டர் சூப்பர்.

  ReplyDelete
 14. யாருக்காவது புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் படம் கிடைத்து உள்ளதா?

  தயவு செய்து எனக்கு பார்வர்ட் செய்யவும்.

  ReplyDelete
 15. //யாருக்காவது புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் படம் கிடைத்து உள்ளதா?//
  அதே கேள்வி அடியேனுக்கும்!! ;)

  ReplyDelete

Related Posts Widget for Blogs by LinkWithin