Thursday, June 11, 2009

கிசு கிசு கார்னர் 3 - பிறந்த நாள் கொண்டாட்டங்களும் அதன் விளைவுகளும்

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நம்முடைய வலையுலக ரிபோர்ட்டர் கிசுகிசு கோபால் சமீப காலங்களில் வலையுலகில் நடந்து வரும் சுவையான தகவல்களை நம்முடைய வலைப் பூவில் பகிர்ந்து கொள்ள சம்மதித்து அவருடைய கைங்கர்யமான கிசு கிசு கார்னர்-1 & கிசு கிசு கார்னர்-2 வாசகர்களிடையே பெற்ற வரவேர்ப்பினால் இதோ அதன் அடுத்த கட்டம்: கிசு கிசு கார்னர்-3.

(1) கனவுகளை காண்பதையே முழு நேரத் தொழிலாக்கி கொண்ட அந்த "இளமை துள்ளும்" பதிவருக்கு (யூத்'ஆமாம்) கடந்த பத்து நாட்களாக ஒரு இனம் புரியாத பீலிங்க்ஸ்'ஆம். என்ன என்று விசாரித்தால் அவருடைய கணினி ஏதோ குளறுபடியால் பணி புரியவில்லையாம். அதனால் நண்பர்களின் வலைப்பூக்களில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தவித்தாலும், புத்தகங்களை படிப்பதற்கும், படங்களை பார்ப்பதற்கும் அவருக்கு நிறைய நேரம் கிடைத்ததால் அவர் ஒரு வகையில் சந்தோஷப்பட்டாராம்.


ஆனால், கொடுமையிலும் கொடுமை என்பதைப் போல அவர் ஒரு உலக மகா மொக்கை படத்தை பார்த்து விட்டு "விமோசனம்" தேடி அலைந்ததாக கேள்வி. அனேகமாக அந்த மொக்கை படம் ஒரு முழு நீளப்பதிவாக வந்தாலும் ஆச்சர்யப் படுவதற்க்கில்லை.

டிஸ்கி: இந்திய நேரப்படி இன்று இரவு பத்து மணி நாற்பத்தி ஐந்து மணியளவில் அவருடைய கணினி இணைப்பு சரியாகும் என்று நேமியாலஜி நிபுணர் வாஸ்த்து ரத்னா பாண்டி மடம் பங்கஜம் சாஸ்திரி அவர்கள் கூறி உள்ளார்.


(2) வழக்கமாக வேட்டையாடிக் கொண்டே விளையாடும் அந்த பதிவர், இன்னமும் சிக்கி - முக்கி காலத்திலேயே இருக்கிறார். அவரிடம் ஒரு மடிக் கணினி இருந்தாலும் கூட அவரால் கடந்த சில வாரங்களாக வலைப்பூக்களை மேய முடியவில்லையாம். அதாவது, அவரைப் பொறுத்த அளவில் பிரவுசிங் என்றால் அது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தானாம். குரோம், நெருப்பு நரி பற்றி எல்லாம் அவர் கேள்விப் பட்டதே இல்லையாம். தற்கால உலகில் கற்கால மனிதர்?


இது கூட பரவாயில்லை. கடந்த ஞாயிறு அன்று ஒலக காமிக்ஸ் ரசிகர் இந்த வேட்டைக்காரர் வசிக்கும் அந்த குக்கிராமத்துக்கு சென்றாராம். அவரை சந்திக்கலாம் என்று அவருடைய கைபேசியில் அழைத்தால் அவர் பேப்பர் வாங்க பெங்களூரு சென்றுக் கொண்டு இருப்பதாக தகவல் அளித்தாராம். இதற்க்கு தான் நகரத்தில் வசிக்க வேண்டும்: ஒரு நாள் பேப்பர் வர வில்லை என்றாலும் கூட நாமே அருகிலுள்ள கடைக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம். இப்படி சீருந்து மூலம் பெங்களூரு செல்ல வேண்டியது இல்லை.What a Pity, What a Pity?


டிஸ்கி: சரி, இப்போது தான் நமக்கு நேரம் இருக்கிறதே என்று வேட்டையாடிக் கொண்டே விளையாடும் அந்த பதிவர் ஏதாவது தமிழ் படம் போகலாம் என்று தியேட்டருக்கு போனாராம். ஏற்கனவே இவர் "சத்திய' சோதனையில் சிக்கியவர் என்பது குறிப்பிட தக்கது. அப்படை இருந்தும், வலிய சென்று "ரோதனை"யோடு மீண்டு வந்த இவரை என்னவென்று சொல்வது?


(3) கடந்த ஒரு வாரமாக தமிழ் நாட்டில் எந்த ஒரு கடையிலும் தின்பண்டங்களும் "இதர" பொருட்களும் கிடைக்கவில்லையாம். உலகமெங்கும் பரவி உள்ள ஒரு பயங்கரவாத இயக்கத்தின் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் தான் அதற்க்கு காரணமாம். அந்த தலைவரின் தொண்டர்கள் ஆகிய குண்டர்கள் ஊரெங்கும் தோரணம் கட்டி, ஒரு "தோரணை" ஆக இந்த பிறந்த நாளை கொண்டாடினார்களாம்.


பணப் புழக்கம் அதிக அளவில் இருந்ததால் ரிசர்வ் வங்கி கூட த்டுமாறியதாம். உள்ளூர் செலவாணி அதிகரித்ததே இதற்க்கு காரணமாம். இந்த போராட்டங்களில் ஒரு துக்க சம்பவமும் நடை பெற்றது.தனமானச் சிங்கம், புரட்சிப் புயல், தானைத் தலைவி "சைதை தமிழரசி" தாக்கப்பட்டார். அதனால் சில பல சூறையாடல்களும், வங்கிக் கொள்ளைகளும் இனிதே நடை பெற்றது.


டிஸ்கி: இந்த கொண்டாட்டங்களை கண்ட இயக்க சகோதரர்கள் தலைவருக்கு வாராவாரம் பிறந்த நாள் வரக் கூடாதா என்று அங்கலாய்க்கிறார்களாம்,


(4) தன்னுடைய பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடிய அந்த பயங்கரவாதிப் பதிவர், இன்னமும் தன்னிலைக்கு வர வில்லையாம். அவருடைய கைபேசி கடந்த இரண்டு மூன்று நாட்களாக சுவிட்ச் ஆப் செய்யப் பட்ட நிலையிலேயே உள்ளதாம். ஒரு வேலை, பிறந்த நாள் டிரீட் கேட்கும் ஒலக காமிக்ஸ் ரசிகரிடம் இருந்து தப்பிக்க அவர் செய்யும் உபாயமோ? ஏனென்றால் மற்றவர்கள் போன் செய்தால் இந்த பயங்கரவாதி பேசுகிறாராம். என்ன கொடுமை சார் இது?


டிஸ்கி: அந்த பயங்கரவாதி பதிவர் இன்றோ / நாளையோ ஒரு பதிவை இடப் போகிறார். யாரும் எதிர் பாராத ஒரு புதிய பதிவு அது.


(5) தமிழ் காமிக்ஸ் உலகின் முடி சூடிய மன்னர் தன்னுடைய ஐம்பதாவது பதிவை நாளை அன்று வலையேற்ற முடிவு செய்திருக்கிறாராம். இது அவருடைய ஸ்பெஷல் பதிவாம்.இந்த பதிவு முதல், அவருடைய வலைப் பூவில் பல மாற்றங்கள் செய்யவும் திட்டமிட்டு உள்ளாராம். ஏற்கனவே அவர் தன்னுடைய வலைப் பூவில் செய்த மாற்றங்களின் பிரதிபலிப்பை சில பல தளங்களில் காண முடிகிறது.


டிஸ்கி: வரலாறு காணாத ஒரு மாபெரும் காமிக்ஸ் வலைப் பதிவர் சந்திப்பு ஒன்று அடுத்த மாதம் நடை பெற உள்ளது. அனைத்து காமிக்ஸ் வலைப் பதிவர்களையும் ஒரு சேர ஒரே இடத்தில் கொணரும் முயற்சி இது. இதற்கான முயற்சியை ஏற்கனவே ஆரம்பித்து விட்டார்களாம்.


(6) தமிழ் காமிக்ஸ் உலகின் சிறந்த விசிறி ஆகிய அந்த பெருந்தலைவர் திங்கட் கிழமை அன்றுதான் நீண்ட ஓய்வுக்கு பிறகு ஊர் திரும்பினாராம். அந்த விமானத்தின் மூலம் தான் சமீபத்தில் திருமணம் நிச்சயம் ஆன டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா'வும் பிரயாணித்தாராம். இப்போது சானியா டென்னிஸ் விளையாடுவதும் பெருந்தலைவர் வசிக்கும் ஊரில் தானாம்.


டிஸ்கி: நீண்ட நாள் கழித்து சானியா ஒரு டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் மூன்றாம் சுற்றுக்கு சென்று உள்ளார்.

இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

கிசுகிசு கோபால்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே.

-- சிறப்பான கிசு கிசு'க்களுக்கு நன்றி கோபால்.

பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.
Related Posts Widget for Blogs by LinkWithin