Sunday, February 15, 2009

என் அறிமுகம் - பூங்காவனம்

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேதை, பெதும்பை & பேரிளம்பெண் என்று பெண்களுக்கு ஏழு வகையான பருவங்கள் இருந்தாலும் என்னுடைய வாழ்வில் நான் என்றுமே பேதை என்ற ஒரு வகையாகவே இருக்கிறேன். அது ஏன் என்பதை இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

பரம ரகசியமாக இருந்த எங்களை பற்றி முதன்முதலில் எழுதியவர் திரு ஜோஸ் ஆவார். எது, எங்கே, எப்படி போன்ற கேள்விகளுக்கு கிழே விடை உள்ளது.

பதிவகம்: தலை சிறந்த காமிக்ஸ்

பதிவர்: ஒலக காமிக்ஸ் ரசிகர்

பதிவு: மாயாவியும் மந்திரவாதியும் & காப்பி அடிக்கும் காமிக்ஸ்'ம்

Josh Alexander சொன்னது…
நண்பரே,உங்கள் இடுகைகளை படிக்கும்போது இந்த வெள்ளைக்கார சமுதாயம் நம்மை எவ்வாறெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருந்தது என நினைத்து உள்ளம் கொதிக்கிறேன்.

நான்கூட இதற்கு முன் மங்கி காமிக்ஸ் என்று ஒன்று படித்துள்ளேன். அதில் வரும் கதாநாயகன் ஊத்துக்குளி காத்தவராயன் ஒரு பெரும் தொழிலதிபர். அவருக்கு துணையாக அவரின் செகரட்டரி பூங்காவனம் அம்மாள். உலக அளவில் புண்ணாக்கு வியாபாரத்தில் பெரிய புள்ளி.ஆனால் அவரின் மறுபக்கம் பயங்கரமானது.

அவர் இந்திய உளவு துறையில் ஏஜென்ட் காத்தவ் என்ற பெயரில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். அவரின் சாகசங்கள் அனைத்தும் அருமையாக இருக்கும்.

எனக்கு பிடித்தது தலைப்பு நினைவில்லை. ஒரு ஐரோப்பிய தலைநகரில் ஒரு லாட்ஜில் தங்கியிருப்பார். போலீஸ் ரெய்ட் என கேள்விப்பட்டதும் அப்படியே தப்பித்து இந்த சதிக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பார்.இது போன்ற அருமையான சாகசங்களை ஐரோப்பியர்கள் கண்டிருக்க மாட்டார்கள்.

கண்டிருந்தால் அதையும் அவர்கள் சுட்டு இருப்பார்கள். இல்லை, சுட்டு விட்டார்களா?இது குறித்து இந்திய பழமை காமிக்ஸ் களை களஞ்சியமான உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
December 29, 2008 10:34 PM

இவ்வாறாக ஒரு கமெண்ட் போட்டு அமைதியாக இருந்த எங்கள் வாழ்வில் புயல் வீச செய்து விட்டார் அந்த புண்ணியவான். இந்த கமெண்ட்'ஐ கண்ட என் காத்தவ் உடனே ஒரு பதில் அளித்தார். அது பின்வருமாறு:

ஏஜென்ட் காத்தவ் சொன்னது…
யாருப்பா அது? எனக்கும் திருமதி பூங்காவனம் அவர்களுக்கும் உள்ள தொடர்பை பற்றி பேசுவது? உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட வெவஸ்தை கிடையாத? போ, போய் வேலையை பாருங்கள் சார்.
December 30, 2008 12:23 AM

ஆனால் அப்போதும் சில பல பாவிகள் வேறு வேறு வலைத்தளங்களில் வந்து எங்களை கிண்டல் செய்ததால் "உலக வலை தளங்களில் முதன்முறையாக" நானே வந்த பதில் அளிக்க வேண்டியததாகிவிட்டது. அந்த வேண்டுகோள் இதோ:


திருமதி பூங்காவனம் சொன்னது…
பஞ்சமா பாவிகளா,என்னுடைய பெயரை என் இன்னும் கெடுக்கிறீர்கள்?ஒழிந்து போங்கள்.
December 30, 2008 7:58 PM

ஆனாலும் சில பல படுபாவிகள் என்னை பற்றி இன்னும் தவறாக எழுதி வருகின்றனர்.

ஆண் ஆதிக்கம் நிறைந்த உலகம் இது என்பதை இவர்களை போன்ற பலரும் நிரூபித்து வருகின்றனர். காதலர் தினமான நேற்றும் கூட எங்களை இந்த பாவிகள் நிம்மதியாக இருக்க விட வில்லை.
என்ன செய்யலாம்?
Related Posts Widget for Blogs by LinkWithin