Sunday, February 15, 2009

என் அறிமுகம் - பூங்காவனம்

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேதை, பெதும்பை & பேரிளம்பெண் என்று பெண்களுக்கு ஏழு வகையான பருவங்கள் இருந்தாலும் என்னுடைய வாழ்வில் நான் என்றுமே பேதை என்ற ஒரு வகையாகவே இருக்கிறேன். அது ஏன் என்பதை இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

பரம ரகசியமாக இருந்த எங்களை பற்றி முதன்முதலில் எழுதியவர் திரு ஜோஸ் ஆவார். எது, எங்கே, எப்படி போன்ற கேள்விகளுக்கு கிழே விடை உள்ளது.

பதிவகம்: தலை சிறந்த காமிக்ஸ்

பதிவர்: ஒலக காமிக்ஸ் ரசிகர்

பதிவு: மாயாவியும் மந்திரவாதியும் & காப்பி அடிக்கும் காமிக்ஸ்'ம்

Josh Alexander சொன்னது…
நண்பரே,உங்கள் இடுகைகளை படிக்கும்போது இந்த வெள்ளைக்கார சமுதாயம் நம்மை எவ்வாறெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருந்தது என நினைத்து உள்ளம் கொதிக்கிறேன்.

நான்கூட இதற்கு முன் மங்கி காமிக்ஸ் என்று ஒன்று படித்துள்ளேன். அதில் வரும் கதாநாயகன் ஊத்துக்குளி காத்தவராயன் ஒரு பெரும் தொழிலதிபர். அவருக்கு துணையாக அவரின் செகரட்டரி பூங்காவனம் அம்மாள். உலக அளவில் புண்ணாக்கு வியாபாரத்தில் பெரிய புள்ளி.ஆனால் அவரின் மறுபக்கம் பயங்கரமானது.

அவர் இந்திய உளவு துறையில் ஏஜென்ட் காத்தவ் என்ற பெயரில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். அவரின் சாகசங்கள் அனைத்தும் அருமையாக இருக்கும்.

எனக்கு பிடித்தது தலைப்பு நினைவில்லை. ஒரு ஐரோப்பிய தலைநகரில் ஒரு லாட்ஜில் தங்கியிருப்பார். போலீஸ் ரெய்ட் என கேள்விப்பட்டதும் அப்படியே தப்பித்து இந்த சதிக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பார்.இது போன்ற அருமையான சாகசங்களை ஐரோப்பியர்கள் கண்டிருக்க மாட்டார்கள்.

கண்டிருந்தால் அதையும் அவர்கள் சுட்டு இருப்பார்கள். இல்லை, சுட்டு விட்டார்களா?இது குறித்து இந்திய பழமை காமிக்ஸ் களை களஞ்சியமான உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
December 29, 2008 10:34 PM

இவ்வாறாக ஒரு கமெண்ட் போட்டு அமைதியாக இருந்த எங்கள் வாழ்வில் புயல் வீச செய்து விட்டார் அந்த புண்ணியவான். இந்த கமெண்ட்'ஐ கண்ட என் காத்தவ் உடனே ஒரு பதில் அளித்தார். அது பின்வருமாறு:

ஏஜென்ட் காத்தவ் சொன்னது…
யாருப்பா அது? எனக்கும் திருமதி பூங்காவனம் அவர்களுக்கும் உள்ள தொடர்பை பற்றி பேசுவது? உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட வெவஸ்தை கிடையாத? போ, போய் வேலையை பாருங்கள் சார்.
December 30, 2008 12:23 AM

ஆனால் அப்போதும் சில பல பாவிகள் வேறு வேறு வலைத்தளங்களில் வந்து எங்களை கிண்டல் செய்ததால் "உலக வலை தளங்களில் முதன்முறையாக" நானே வந்த பதில் அளிக்க வேண்டியததாகிவிட்டது. அந்த வேண்டுகோள் இதோ:


திருமதி பூங்காவனம் சொன்னது…
பஞ்சமா பாவிகளா,என்னுடைய பெயரை என் இன்னும் கெடுக்கிறீர்கள்?ஒழிந்து போங்கள்.
December 30, 2008 7:58 PM

ஆனாலும் சில பல படுபாவிகள் என்னை பற்றி இன்னும் தவறாக எழுதி வருகின்றனர்.

ஆண் ஆதிக்கம் நிறைந்த உலகம் இது என்பதை இவர்களை போன்ற பலரும் நிரூபித்து வருகின்றனர். காதலர் தினமான நேற்றும் கூட எங்களை இந்த பாவிகள் நிம்மதியாக இருக்க விட வில்லை.
என்ன செய்யலாம்?

57 comments:

  1. மடிப்பிற்குரிய அம்மணி பூங்காவனம் அவர்கட்கு, கண்ணாளன் காத்தவ் பின் நான் காத்திருப்பதை உங்கள் கடைக்கண் கொண்டு பார்ப்பீர்களா.

    உங்கள் விழியெனும் தேன் கூட்டிலே, பருவத்தின் தேனேடுக்க துடிக்கும் இந்த இளைஞன் பல கலைகள் அறிந்தவன்.

    பாலைவனத்திலே தனித்து விடப்பட்ட பூனை போல் தவிக்கிறது என் உள்ளம். உங்கள் உள்ளம் கொண்டால் அது கொள்ளும் உவகை வெள்ளம்.

    நைல் நதி ஓரத்திலே, நட்சத்திரங்கள் கண் சிமிட்டும் ஏகாந்தத்திலே காத்திருக்கிறேன். ஒன்று வந்து எனைக்
    கொண்டனையுங்கள், இல்லை கொன்று உயர்ந்து நிற்கும் பிரமிட்டுகளில் அடையுங்கள் இனியாவது அவை என் காதல் தாஜ்மகால்களாகட்டும்.

    அன்பு முத்தங்கள்

    ReplyDelete
  2. ஷங்கர் அவர்களே,

    நீங்கள் செய்வது உங்களுக்கே நியாயமாக உள்ளதா? பூங்காவனம் என் ஆள் என்பது தெரிந்தும் நீங்கள் அங்கேயே வந்து உங்கள் "வாலை" ஆட்டுகிரீர்களே?

    இது சரியா?
    இது முறையா?

    இதனை நான் உங்கள் ஸ்கூல் டீச்சர் இடம் புகாராக கூறலாம் என்று இருக்கிறேன்.

    காத்தவ்,
    புயல் அடிக்கும்போது பூ பறிப்பவன்.
    வெள்ளத்தில் மீன் பிடிப்பவன்.

    ReplyDelete
  3. இந்த வனத்தில் பூபறிக்க வரலாமா?

    முள் ஏதேனும் குத்துமா?

    ReplyDelete
  4. திரு அனானியே,

    நாங்கள் எல்லாம் பின் எதற்கு இருக்கிறோம்?

    ReplyDelete
  5. பூங்காவனம் அம்மையாரே,

    பதிவுகள் தொடருமா?

    ஷங்கர் அவர்களே,
    //மடிப்பிற்குரிய அம்மணி பூங்காவனம் அவர்கட்கு//
    பூங்காவனத்தின் மடிப்பை நீங்கள் எப்போது பார்த்தீர்கள்?

    கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  6. என்ன நடக்கிறது இங்கே..... பூங்காவனம் என்றவர் ஒரு புனை பெயர் ஆசாமி என்று எண்ணி கொண்டு இருந்தேன்... ஆனால், அது ஒரு உண்மையான நபர் என்று இப்போது தன் அறிந்தேன்.

    என்னுடைய மடமை மன்னியுங்கள்.... டிடர்ஜன்ட் ...சீ. ஏஜன்ட் காத்தவ்வும் நீங்களும் பல்லாண்டு இப்படி ஒருவரை ஒருவர் நேசித்து வாழுங்கள்...... காதலர் தினத்தை ஒட்டி ஒரு வலைபூவேறு காதல் ஜோடிகள் ஆரம்பித்து உள்ளீர்கள்.... தொடரட்டும் உங்கள் காதல் ஜோடி.

    அது என்ன பெண் என்றாலே, HR துறையில் மட்டுமே தான் வேலை பார்ப்பீர்களா.... ஆள் எடுக்கும் வேலை காத்தவ் தப்பாக புரிந்து கொள்ள மாட்டாரே ?... :) காதலர் வேறு வெறியுடன் அலைந்து கொண்டு இருக்கிறார்... எதற்கும் உள் தாப்பாள் போட்டே இரவில் படுங்கள்.... :)

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

    ReplyDelete
  7. தோழர் ரகசிய ஏஜண்ட் காத்தவ் அவர்கட்கு,

    உங்கள் மனதினை என் கருத்துக்கள் துன்புறுத்தியதையிட்டு என் மனம் வேதனை கொள்கிறது. அது நான் விரும்பிச் செய்ததல்ல, ஒர் கயல் விழியால் என் மனம் புலம்பிச் சொன்னது.

    அக் கன்னிகையை,கடல் ஆழவிழியாளை என் கண்கள் கண்டுவிட்ட பிறகு நான் செய்வது சரியா, தவறா, முறையா என்பதெல்லாம் எனக்கு தெரிவதேயில்லை.

    நீங்கள் கொடுத்து வைத்தவர், அவளை உரிமையாடக் குடுத்து வைத்தவர். அடியேன் நிலை அப்படியா.
    இளவரசர் விஸ்வா நான் மடிப்பு பார்த்ததாக பரிகாசம் செய்கிறார்,நண்பர் ரஃபிக் கதவைத்தாழ்ப்பாள் போடச் சொல்கிறார். அவர்கள் மேல் தப்பில்லை.

    உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
    என்னைச் சொல்லி குற்றமில்லை
    காதல் செய்த கோலமடி
    கடவுள் செய்த குற்றமடி.

    ஒரு மனதை உறங்கவைத்தாய்
    ஒரு மனதை தவிக்க வைத்தாய்

    ஒர் கவிஞன் எனக்காகவா இதை எழுதினான். காத்தவ் உங்களிற்கு பூங்காவனத்தை மறக்க முடியுமா
    முடிந்தால் சொல்லுங்கள் நானும் மறக்கிறேன்.
    இல்லையேல் அவள் மலர்விழிப்பார்வைக்காக நாளும் ஏங்கி என்னுயிர் துறக்கிறேன்.

    அடைந்தால் பூங்காவனம்
    இல்லையேல் சாகும் வரம்.

    பூங்காவனம் கல் நெஞ்சக்காரியே என் மனதின் கண்ணீர் உன் இதயம் குளிக்கும் பன்னீரோ. நான் எழுதுவதைப் படித்து உன் தோழிகளிடம் காட்டி பரிகசித்துக் கொண்டிருக்கிறாயா. பரிகசி நன்றாக பரிகசி அப்படியாவது என் பெயரை உன் தேனமுத உதடுகள் உச்சரிக்கட்டும்.

    முத்தங்களுடன் தொடருவேன்

    ReplyDelete
  8. அடைந்தால் பூங்காவனம்
    இல்லையேல் சாகும் வரம்.


    Me too.

    ReplyDelete
  9. நாங்கள் தான் உண்மையான பூங்காவனம் மேல் காதல் கொண்டவர்கள் சங்கம் வைத்து நடத்துகிறோம். உங்களுக்கு தேவை என்றால் வந்து எங்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து கொள்ளுங்கள். (ஏஜண்ட் காதவ்க்கு அனுமதி இல்லை) .

    "வைப்பு" நிதி உண்டு.

    ReplyDelete
  10. என்ன கொடுமை சார் இது? இரு பெண் பின்னால் இத்தனை பேரா?

    இது எங்கேயும் நடக்காத கொடுமையாக இருக்கிறதே?

    அய்யா கனவுகளின் காதலனே, நீங்கள் செய்வது உங்களுக்கே அடுக்குமா? ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இப்படியா விளையாடுவது? இதெல்லாம் அந்த ஜோஸ்'ன் வேளையாக தான் இருக்கும்.

    ReplyDelete
  11. திரு கனவுகளின் காதலன் ஒரு சினிமா பாட்டை போட்டதால், நானும் என் பங்கிற்கு ஒரு சினிமா பாட்டை அளிக்கிறேன்:

    இரண்டு மனம் வேண்டும்
    இறைவனிடம் கேட்டேன்.

    நினைத்து வாழ ஒன்று, மறந்து வாழ ஒன்று.

    கிங் விஸ்வா
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  12. என்னையா நடக்குது இங்கே?

    ஒரு நாள், ஒரே நாள் வெளியூர் போய் வந்தால் அதற்குள் இப்படி ஒரு வலைப்பூவா?

    எப்படியோ, பூங்காவனமும் ஏஜண்ட் காத்தவ்'ம் ஒன்றாக, நன்றாக இருந்தால் சரி.

    ReplyDelete
  13. அனானி, நீங்கள் இப்போதே சாகும் வரம் பெற்றுவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

    காதல் சங்கம்,கயவர்களே, நீசர்களே எரியும் வீட்டில்
    ஆடு வறுப்பவர்களே 3 உள்ளங்களின் இதயப்புயலில் நிவாரணம் தேடுபவர்களே, வந்து கொண்டிருக்கிறது உங்களை நோக்கி ஒர் அம்பு, அதன் பின் நீங்கள் செய்யமாட்டீர்கள் வம்பு.

    மிஸ்டர் நல்லவன், பூங்காவனத்தை காணும் வரையில்தான் நீங்கள் நல்லவனாக இருக்கலாம்.

    யார் அந்த கனவுகளின் காதலன் என்னுடன் நேரிற்கு நேர் மோத வேண்டுமேயொழிய இளவரசர் விஸ்வாவை தூதனுப்புவது அந்தப் பாலகனிற்கு ஆகாது.

    நான் நன்றி சொல்வேன் என் கண்களிற்கு
    உன்னை என்னருகே கொண்டு வந்ததிற்கு

    செழி பூங்காவனமும், காத்தவ்வும் இணைந்திருக்க முடியாது, கூடாது அது நன்றாகவும் இருக்காது.

    அடைந்தால் பூங்காவனம்
    இல்லையேல் சாகும் வரம்.

    ReplyDelete
  14. காதலின் தீபம் ஒன்று
    ஏற்றி வைத்தாளே என் நெஞ்சில்

    நேற்று போல் இன்று இல்லை . இன்று போல் நாளை இல்லை.

    பூங்காவனம் மனதில் எனக்கு இடமும் இல்லை. அய்யகோ...

    ReplyDelete
  15. //அடைந்தால் பூங்காவனம்
    இல்லையேல் சாகும் வரம்.//

    பன்ச் எல்லாம் நல்ல தான் இருக்கு. ஆனால் அந்த ஏஜண்ட் காத்தவ் ஒரு கொடுரமானவன். ச்ங்கர் அவர்களே, நீங்கள் மரணத்தை முத்தமிட தயாரா?

    எனென்றால்,
    நீங்கள் விபரீதத்தை விலை கொடுத்து வாங்கலாம்.
    மரணத்திற்கு மனு கொடுக்கலாம்.

    ஆனால் காத்தவ் உடன் கபடி ஆட முடியாது. ஜாக்கிரதை.

    ReplyDelete
  16. யாரப்பா அது, ஷங்கர் விஸ்வலிங்கம்?

    அவர் வீட்டிற்கு ஒரு லாரி அனுப்புங்க.

    ReplyDelete
  17. நல்ல பதிவு.

    பூங்காவனம் அவர்களின் அறிமுகம் நன்றாக இருந்தது. ஆனால், தொடருமா?

    அம்மா ஆசை இரவுகள் விசிறி.

    ReplyDelete
  18. பூங்காவனத்திற்காக என் உயிரென்ன, உங்கள் உயிரையும் சேர்த்து வழங்க தயாராகவேயிருக்கிறேன், காத்தவ் ஒர் செண்டில்மென் அவர் காட்டுவாசி முறைகளிற்கு துணை போகமாட்டார் என்று உறுதியாக நம்புகிறேன்.

    லாரிக்காரரே மணல் லோடை வீட்டின் அருகில் இறக்கி விட்டுச் செல்லவும்

    அடைந்தால் பூங்காவனம்
    இல்லை சாகும் வரம்.

    ReplyDelete
  19. விரைவில் எதிர்பாருங்கள் காத்தவின் கடந்தகாலம் தொடர் மற்றும் பூங்காவனத்தின் ஏங்காமனம்.

    காப்பிரைட் உரிமை வார்னர் பிரதர்ஸ்க்கு கொடுக்கப்பட்டுள்ளதால், யாரும் இந்த பெயர்களை உபயோகிக்கக் கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    ReplyDelete
  20. ஹல்லோ, இந்த காதவின் கடந்த காலம் என்ற பெயர் எங்கள் இதழ் "கார்சனின் கடந்த காலம்" என்பதை போலவே இருக்கிறது.

    ஜாக்கிரதை.

    நீங்களே வக்கீலாக இருந்தாலும் உங்களுக்கும் நோட்டிஸ் வரும்.

    லயன் காமிக்ஸ் எடிட்டர்.

    ReplyDelete
  21. ///ஹல்லோ, இந்த காதவின் கடந்த காலம் என்ற பெயர் எங்கள் இதழ் "கார்சனின் கடந்த காலம்" என்பதை போலவே இருக்கிறது.

    ஜாக்கிரதை.

    நீங்களே வக்கீலாக இருந்தாலும் உங்களுக்கும் நோட்டிஸ் வரும்.

    லயன் காமிக்ஸ் எடிட்டர்.
    ////

    அய்யோ..... அய்யோ.

    ReplyDelete
  22. ///ஹல்லோ, இந்த காதவின் கடந்த காலம் என்ற பெயர் எங்கள் இதழ் "கார்சனின் கடந்த காலம்" என்பதை போலவே இருக்கிறது.

    ஜாக்கிரதை.

    நீங்களே வக்கீலாக இருந்தாலும் உங்களுக்கும் நோட்டிஸ் வரும்.

    லயன் காமிக்ஸ் எடிட்டர்.
    ////

    அய்யோ..... அய்யோ.//


    ஹைய்யா ஹைய்யா

    ReplyDelete
  23. ஹாய்ரே ஹாய்ரே ஹாய் ரப்பா
    ஹாய்ரே ஹாய்ரே ஹாய் ரப்பா
    பூங்காவனம் எனக்கே எனக்கா?

    ஹாய்ரே ஹாய்ரே ஹாய் ரப்பா
    ஹாய்ரே ஹாய்ரே ஹாய் ரப்பா
    ஷங்கர் மச்சான் வாழ்க. பூங்காவனம் எனக்கே எனக்கா?

    ReplyDelete
  24. கனவுகளின் விரோதி

    உமக்கே உமக்கா
    உமக்கே உமக்கா ஆ

    ஜிங்கு ஜிக்கா
    ஜிங்கு ஜிக்காஆ ஆஆஆ


    ஹாய்ரே ஹாய்ரே கயிறப்பா
    ஹாய்ரே ஹாய்ரே கயிறப்பா
    உங்க கழுத்திற்கு ஒர் கயிறு ரெடியே ரெடியப்பா

    50 கேஜி வெடி குண்டு உமக்கே உமக்கா
    ஃப்ளைட்டில் வந்த ஏவுகணை உமக்கே உமக்கா

    பெட்டி உள்ளே படுத்துக்கலாமே
    பூ வளையத்திற்கு ஆர்டர் குடுத்துக்கலாமே
    குத்து டான்ஸு கானாப் பாட்டுடன்
    உங்க உயிர் பிரிய அருள் செய்வோமே

    ReplyDelete
  25. அடடே,

    இங்கே ஒரு கூட்டமே இருக்கும் போல இருக்கிறதே? இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு தெரியும் என்னுடைய பூங்காவனம் என்னை விட்டு வேறு யாரையும் எரெடுத்து கூட பார்க்க மாட்டாள் என்று.

    மனதால் பூங்காவனம்,
    இல்லையேல் மரண சாசனம்.

    ReplyDelete
  26. நிலாவே வா, செல்லாதே வா.

    எனை நீ தான் வெறுத்தாலும், உன் நினைவாலே நான்.

    ReplyDelete
  27. நான் முத்து நகை.

    நான் காத்தவ்'ஐ ஒரு மனதாக காதலிக்கிறேன்.


    ஷங்கர்,
    நீங்கள் ஏதாவது செய்து பூங்காவனத்தை கவர்ந்து விட்டால், காத்தவ் எனக்குதான்.

    அருள் புரியுங்கள்.

    முத்து நகை, பாண்டிய நாட்டு நடனப் பேரொளி.

    ReplyDelete
  28. விஸ்வா அவர்களே,

    நீங்கள் தானே என்னுடைய தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி? என்ன நடக்கிறது இங்கே? நீங்கள் என்னடாவென்றால் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

    உடனே தக்க நடவடிக்கை எடுங்கள். இல்லை என்றால் என்னுடைய ரசிகர்கள் பொங்கி விடுவார்கள், பொங்கி.

    ஜாக்கிரதை.

    ReplyDelete
  29. முத்து நகையே, பாண்டிய நாட்டுப் பேரொளியே, உன் விண்ணப்பம் ஏற்றேன், மீன் பாடும், தேன் ஓடும் பாண்டிய நாட்டின் பரதக்கலையின் உயிரான
    நீ காத்தவ் மேல் மையல் கொண்டது வியக்க வைக்கிறது. காத்தவிற்கு டிஸ்கோ டாண்ஸ் தெரியும். ஜான் டிராவோல்டாவோடு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.அப்போட்டியி கிழிபட்ட கால்சட்டையை இன்னும் நினைவாக வைத்திருக்கிறார். ஆனால்.. அதை நான் உனக்கு நேரில் சொல்கிறேன்.

    ஆம் முத்து நகை, நாமிருவரும் நேரில் சந்தித்து உறவாட வேண்டும் சீச்சீ மன்னித்து விடு, உரையாட வேண்டும். கொய்யா வாயன், ஊரறிந்த மகா கஞ்சன், பாண்டிய மன்னன் மந்திபாண்டியனின் நந்தவனத்தில் சந்திப்போமா. வரும்போது உன் நகைகள் யாவற்றையும் அணிந்து வரவும். எதற்கும் பின்னால் ஒரிரு தடவைகள் பார்த்துக்கொள். அந்தப் பின்னால் இல்லையடி,உன் பின்னால் வினீத்தும், இளவரசன் விஸ்வபாண்டியனும் வருகிறார்களா என்பதை அவதானித்துக் கொள். மற்றவை நேரில்.

    பி.கு. தரையில் விரிக்க கூடிய அகன்ற போர்வை ஒன்றையும் எடுத்து வா.

    முத்து நகை
    புதுக் குகை.

    ReplyDelete
  30. ஷங்கர் அண்ணா,

    முத்து நகையுடன் நானும் துணைக்கு வரவா? என்னிடம் மூன்று பேர் படுக்க கூடிய பெரிய தரையில் விரிக்க கூடிய அகன்ற போர்வை உள்ளது.

    புது குகையா? புதிர் குகையா?

    ReplyDelete
  31. அடைந்தால் பூங்காவனம்
    இல்லை சாகும் வரம்.

    மனதால் பூங்காவனம்,
    இல்லையேல் மரண சாசனம்


    காத்தவ்,
    புயல் அடிக்கும்போது பூ பறிப்பவன்.
    வெள்ளத்தில் மீன் பிடிப்பவன்.


    அருமையான வசனங்கள்.

    நல்ல முயற்சி இந்த வலைப் பதிவு.

    ReplyDelete
  32. முத்தாத நகை, அண்ணா என்று என்னை விழித்த உனக்கு என் பதில், உன் மார்பை நோக்கி வரும் நாக விஷம் தடவிய என் குறுவாள் தான்.

    அண்ணா என்று அழை
    பரலோகத்தில் நுழை.

    ReplyDelete
  33. ஷங்கர் அண்ணா,

    அண்ணா என்று அழைத்த பாவதிர்க்கா எனக்கு இந்த தண்டனை?

    அந்த குறு வாளை விட உங்கள் சிறு ...... பார்வை ஒன்றே போதுமே பல கன்னியரை கொல்ல.

    அண்ணா என்று அழைத்தால் மரணம்,
    அப்படியாகினும் நான் உங்கள் மடியில் சரணம்.

    ReplyDelete
  34. ஷங்கர்,

    நான் முத்து நகை.

    என்ன காரியம் செய்யப்பார்த்தீர்கள்? என் அக்காள் முத்தாத நகையை உங்கள் குறுவாளால் கொள்ளப் பார்த்தீர்களே?

    அக்கா, இது உனக்கே அடுக்குமா? என்னுடைய வழியில் ஏன் வருகிறாய்?

    ஷண்டாளி,

    காதவ்'இன் காதல் என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை ஏன் நிறுத்தி விட்டாய் அக்கா? ஏன் நிறுத்தி விட்டாய்?

    சிறு வயதில் எனக்கு அனைவரும் தரும் தின்பண்டங்களை எல்லாம் நீயே ருசி பார்த்துவிட்டு தான் எனக்கு தருவாய். அடேதி பழக்கத்தை இப்போதும் தொடர்ந்தால் எப்படி அக்கா, எப்படி?

    சற்று பொறு. நான் ஷங்கருடன் உறவாடி, மன்னிக்கவும், உரையாடி விட்டு வருகிறேன். அக்கா, நீ மூடிக் கொண்டு இரு, உன் கண்களை.

    முத்து நகை, பாண்டிய நாட்டு நடனப் பேரொளி.

    ReplyDelete
  35. dear sir
    the drainage system in india is very poor.you should look into the drainage system in britan and then learn.

    moreover, i have visited Africa also. lovely place. i love football. i love to travel a lot and to mingle with people.

    thanks for this wonderful friend of mine whom i met in my last visit to india and this gentleman, it seems, is always talking about me (even when he is talking to me).

    anyway, nice experience i had in india. thanks.

    ReplyDelete
  36. அழகில்லை என்பதற்காக முதிர்கன்னியாக இருந்து திருமணம் ஆகாமல், மனம் வெறுத்து வீட்டைவிட்டு வெளியேறி, விதிவசத்தால் ஒரு கொடூரமான கும்பலிடம் சிக்கி விபசாரியான குந்தவை, நேற்று நடந்த போலீஸ் ரெய்டில் மாட்டிக்கொண்டாள்.

    இன்று செய்தித்தாளில் வந்த தலைப்பு செய்தி: “அழகி கைது” .

    இது போன்ற கேவலமான சமூக அவலங்களை எல்லாம் எதிர்க்கவே நான் போலிஸ் ரய்ட் என்ற விஷயத்தை வெறுக்கிறேன். அதற்காக "லாட்ஜில் போலிஸ் ரைடு வரக் கூடாது என்பதற்காக உயிர் துறக்கும் படை" அமைக்க இருக்கிறேன்.

    யார் யார் எல்லாம் சேரத் தயார்?

    காத்தவ்,
    புயல் அடிக்கும்போது பூ பறிப்பவன்.
    வெள்ளத்தில் மீன் பிடிப்பவன்.

    ReplyDelete
  37. முத்தாத நகை மன்னித்தேன் உன்னை, உன் தங்கையை காணச்செல்லுமுன் என் சிறு... பார்வையால் உன்னை இன்பத்தில் கொன்று செல்வேன். ஆனால் இரண்டாம் தடவை கொல்ல சொல்லி என் நேரத்தை வீணடிக்ககூடாது என்ன சரியா.

    முத்து நகை கவலைப்படாதே உனக்காக ஒர் புதிய தின்பண்டம் எடுத்து வருகிறேன்.அத்தின்பண்டத்தை அக்கா எச்சில் பண்ணாது இருக்க பிளாஸ்டிக் கவசம் உதவிசெய்யும்.

    காத்தவ், தயவு செய்து மந்திபாண்டியன், விஸ்வபாண்டியனின் பொலிஸ் இன்றிரவு ரெய்ட் வராது பார்த்துக்கொள்ளுங்கள்.

    இரவு ஒன்று
    குகைகள் இரண்டு.

    ReplyDelete
  38. என்ன அநியாயம் நடக்கிறது இங்கே?

    ஒருவர் என்னடாவென்றால் போலிஸ் ரெய்ட் பற்றி பேசுகிறார் (காதவ்);

    இன்னொருவர் என்னடாவென்றால் பிளாஸ்டிக் உரை பற்றி கூறுகிறார் (ஷங்கர்).

    என்னை போன்ற கனவான்கள் வந்து செல்லும் இந்த இடத்தில் இப்படியா நடந்து கொள்வது?

    செழி.

    ReplyDelete
  39. பூங்காவனம் அவர்களே,

    அடுத்த பதிவு என்ன? "பூங்காவனத்தின் ஏங்கா மனம்"?ஆ இல்லை "காதவ்'ன் கடந்த காலம்"ஆ?

    இல்லை என்றால் "புஷ்பவதி பூங்காவனத்தின் புல் புல் இரவுகள்"ஆ?

    கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  40. இந்த வலைப்பூவிற்கு வருகை தந்து செல்லும் கனவான்கள் நலம் கருதி, அவர்கள் தின்பண்டங்களை பாதுகாத்துக் கொள்ள,கனவான்கள் அனைவர்க்கும் பிளாஸ்டிக் கவசங்கள் பூங்கோதை பூங்காவனம் சார்பில் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அனைவரும் வருக
    பிளாஸ்டிக் கவசம் பெறுக.

    ReplyDelete
  41. பூங்காவனம் அம்மையாரே,

    தமிழ் நாட்டு மக்களுக்கு படிக்கும் பழக்கத்தை வளர்க்க இது போன்ற குடும்ப கதைகள் அவசியம். நம்முடைய கல்வி அமைச்சர் அவர்களிடம் இதனையும் நாட்டுடமை ஆக்குவதை பற்றி பேசி இருக்கிறேன். விரைவில் நல்ல பதிலை எதிர் பார்க்கலாம்.

    அந்த புஷ்பவதி பூங்காவனத்தின் புல்புல் இரவுகள் கதையை எனக்கு தனியாக அனுப்ப இயலுமா? மேலும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அவர்கள் கூட பூங்காவனத்தின் ஏங்காமனம் தொடர் எப்போது வரும் என்று நேற்று குறுஞ்செய்தி அனுப்பினார்கள்.

    குழந்தை கவிஞர் கும்மாங்குத்து குமார்.

    ReplyDelete
  42. அடடே,

    பூங்காவனம் கதையா? நம்ம சரோஜா தேவியோட தங்கச்சி ஆச்சே? சும்மா கும்முன்னு தூக்குமே, ஆள. நான் கூட முறுக்கு மடிக்குற பேப்பர்'ல பல தடவ பூங்காவனம் கதையோட ஒரு பக்கம், ரெண்டு பக்கம் எல்லாம் படிச்சு இருக்கேன்.

    அமர்க்களம், அசல். (ரெண்டுமே தல அஜித்'ஓட படம்).

    சினிமா தியேட்டர்ல முறுக்கு விக்கிற பையன்.

    ReplyDelete
  43. அருமை.

    அற்புதம்.

    அட்டகாசம்.

    தேனமுத உதடுகளின் சொந்தக்காரி.

    ReplyDelete
  44. Dear Sir,

    i forgot to add one thing in my last comment. While i was talking to a friend from India in a Bar, he offered me drinks.

    He was such a Lovely built, Handsome man who could talk english. while ordering some drinks for me, he ordered some for himself. Then he asked for Parcel of something and then suddenly he said that his friend has come and will be back in 5 minutes.

    i waited for 2 hours and he didn't came back. finally i had to pay the entire bill amount myself.

    However, he was a nice fellow.

    ReplyDelete
  45. என்னங்கடா நடக்குது இங்கே,

    யாருடா அந்த பனங்கா மண்டையன் நம்ம நாட்டுக்கு வந்த விருந்தாளிய ஏமாதியது? அதுவும் பார்சல் வேற வாங்கி இருக்கான்?

    பின் குறிப்பு: என்னோட ஏரியாவுல இவ்வளவும் நடந்து இருக்கு. ஆனா, எனக்கு பங்கு வரல என்ற ஆதங்கத்துல போட்ட கமெண்ட் இது.

    சுண்டக்கஞ்சி சுகுமாரன்.

    ReplyDelete
  46. இதனை நாங்களும் வன்மையாக கண்டிக்கிறோம்.

    பின் குறிப்பு: எங்களோட ஏரியாவுல இவ்வளவும் நடந்து இருக்கு. ஆனா, சங்கத்துக்கு கொஞ்சம் கூட பங்கு வரல என்ற ஆதங்கத்துல போட்ட கமெண்ட் இது.

    தமிழ் நாட்டில் தாஜ் மகால் இல்லாததால் தீகுளிப்போர் சங்கம்.

    ReplyDelete
  47. அய்யா ஷங்கர் விஸ்வலிங்கம்,

    நீங்கள் தைரியமாக இன்று இரவு வரலாம். போலிஸ் இன்று வராது.

    லாட்ஜில் போலிஸ் ரைடு வரக் கூடாது என்பதற்காக உயிர் துறக்கும் படை.

    ReplyDelete
  48. அடைந்தால் பூங்காவனம்
    இல்லை சாகும் வரம்.

    ReplyDelete
  49. கலைமார்மணி பூங்காவனம்
    இல்லையேல் முத்துநகையின் காயா வனம்.

    ReplyDelete
  50. இந்த வலைப் பதிவில் இடும் ஐம்பதாவது பின்னுட்டம் இது ஆகும். விவரங்கள் இதோ:

    ஷங்கர் விஸ்வலிங்கம் = 10
    கிங் விஸ்வா = 4
    சீக்ரெட் ஏஜன்ட் காத்தவ் = 2
    அனானிமஸ் = 2
    பூந்தோட்ட காவல்காரன் பூபதி = 2
    செழி = 2
    காத்தவ் அன்ட் கோ வக்கீல் வையாபுரி = 2
    லயன் காமிக்ஸ் எடிட்டர்.= 2
    முத்து நகை = 2
    Britisher Who Visited India Some Time Back = 2
    முத்தாத நகை = 2
    ரஃபிக் ராஜா = 1
    பூங்காவனம் மேல் காதல் கொண்டவர்கள் சங்கம = 1
    நல்லவன் = 1
    Greatest Ever Comics = 1
    க்கதவ்'ஆல் காயமடைந்தவர்கள் சங்கம் = 1
    ஊத்துக்குளி காத்தவராயன் = 1
    அம்மா ஆசை இரவுகள் = 1
    கனவுகளின் விரோதி = 1
    பூங்காவனம் எனக்குதான் = 1
    விசித்திர நடிகன் வினீத் = 1
    க கொ க கூ = 1
    குழந்தை கவிஞர் கும்மாங்குத்து குமார். = 1
    சினிமா தியேட்டர்ல முறுக்கு விக்கிற பையன் = 1
    தேனமுத உதடுகளின் சொந்தக்காரி = 1
    சுண்டக்கஞ்சி சுகுமாரன் = 1
    தமிழ் நாட்டில் தாஜ் மகால் இல்லாததால் தீகுளிப்போர் சங்கம் = 1
    லாட்ஜில் போலிஸ் ரைடு வரக் கூடாது என்பதற்காக உயிர் துறக்கும் படை=1
    பாலைவனத்திலே தனித்து விடப்பட்ட பூனையின் உள்ளம் = 1

    கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  51. ஏண்டா பேராண்டி விஸ்வா,

    படு பாவிப்பய ஷங்கருக்கு மின்னாடியே நான் எழுத ஆரம்பிச்ச கமெண்ட் இன்னும் முடியல. ஒத்துக்கறேன். பூங்காவனத்து மேல நான் ஒர் கண்ணில்ல ஒன்றரைக்கண் வெச்சிருகிறத ஒத்துக்கறேன். ஆனா என்ன மாதிரி தாத்தாவையெல்லாம் காலில போட்டு மிதிச்சிட்டு ஜெட் வேகத்தில அம்பு விடற ராஸ்கோல் ஷங்கருவை தடுக்க யாருமே இல்லியா.

    அடைந்தால் பூங்காவனம்
    இல்லையேல் ஏதாவது அட்ஜஸ்ட் பண்ண ஒத்துழைக்கும் வனம்.

    ReplyDelete
  52. யோவ், தாத்தா இங்கே வந்து என்னையா பண்ணுகிறீர்கள்? உங்களை எங்கே எல்லாம் தேடுவது? அதுசரி, இந்த வயசுல உங்களுக்கு உங்க தடி எங்கே இருக்கு என்பதே தெரியாது. அதுல, பொண்ணு மேல ஆசை வேறயா, அதுவும் ஒன்றரை கண்ணு வச்சு?

    வீட்டுக்கு வாரும் ஒய், செமத்தியா கவனிக்கிறேன் உங்களை.

    வயகரா பாட்டி.

    ReplyDelete
  53. அடியே கியவி,

    இங்கிட்டும் வந்திட்டியா, தடி என்னடி தடி, என் கம்பாலே சிலம்பாட்டமே ஆடுவேன். பேராண்டி விஸ்வா தான் ஸ்டண்ட் மாஸ்டரு. இன்னிக்கு வீட்ல இருக்கடி ஒனக்கு கச்சேரி.

    கோச்சுக்காதா பூங்காவனம், என் செல்லம்ல.

    ReplyDelete
  54. வயகரா தாத்தா அவர்களே, என்னுடைய அழைப்பை ஏற்று என்னுடைய புதிய வலைப் பூவிற்கு உங்களின் வருகைக்கும் கமெண்ட் பதிதமைக்கும் நன்றி.

    ReplyDelete
  55. Attack On the Srilankan Team:Thilan Samaraveera, Opener Panavirathana, Kumara Sangakara & Ajantha Mendis Feared to be injured. 6 Policemen also informed dead by the bomp attack.

    A shoot out occurred in Lahore close to the Gaddafi Stadium where the second Test between Pakistan and Sri Lanka is currently underway. The Sri Lankan team was reportedly in the vicinity but are safe. The third day of the Lahore Test is scheduled to begin at 10.30 am. Now that match is cancelled.

    ReplyDelete
  56. வணக்கம்.

    நெடு நாட்களாக வீட்டு பணிச்சுமை காரணமாக பதிவுகளும், கமெண்ட்'களும் இட இயலவில்லை. மன்னிக்கவும். அதனை சரி செய்ய, சுஸ்கி-விஸ்கி மினி லயன் மூலம் அறிமுகம் ஆன அற்புத தொடர் பற்றிய திரைப்பட பதிவை இட்டு இருக்கிறேன்.

    காமிக்ஸ் பிரியன்.

    ReplyDelete
  57. பேராண்டிகளா, முத்தாத நகைக்கு கோன் ஐஸ் குடுத்ததில, கிடைச்ச பகீர் செய்திய கேளுங்கப்பா.

    அகொதீக நாட்டாமை, காமிக்ஸ் மருத்துவரு, புதுசா வாங்கின டூ வீலர்ல பூங்காவனத்த ஏத்திகிட்டு ஜாலி டூர் போறாராம். பூங்காவனத்தின் வித்தைகளில மயங்கிப்போன அந்த மகாராசன் தன் கழகத்தையும், அதன் கண்மணிகளையும் க்ளீனா மறந்துட்டாராம். என்னைக் கொஞ்சம் மாத்தி
    உன் நெஞ்சில் என்னை சாத்தி
    என டூவீலர் ரிமிக்ஸ் பாட்டு தூள் பறக்குதாம்.

    இதக்கேட்டு எனக்கு நெஞ்சு வலியே வந்திருக்கும், ந்ல்ல வேளை முத்தாத நகை கோன் ஐஸை பிடிச்சிருந்ததை ரசிச்சுக்கிட்டு இருந்ததாலே தப்பிச்சேன். இந்த காத்தவ்வும், ஷங்கரு பயலும் என்ன செய்யப்போறாங்களோ தெரியலயே. நான் என் ஸ்டண்டு மாஸ்டரு விஸ்வாவப் பாக்கப் போறேன்,

    ReplyDelete

Related Posts Widget for Blogs by LinkWithin