Wednesday, June 9, 2010

கிசு கிசு கார்னர் 8: பிறந்த நாள் கொண்டாட்டங்களும், சைதை தமிழரசியும்


அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
 
நம்முடைய வலையுலக ரிபோர்ட்டர் கிசுகிசு கோபால் சமீப காலங்களில் தமிழ் காமிக்ஸ் வலையுலகில் நடந்து வரும் சுவையான தகவல்களை நம்முடைய வலைப் பூவில் பகிர்ந்து கொள்ள சம்மதித்து அவருடைய கைங்கர்யமான கிசுகிசு கார்னர்-1 , கிசுகிசு கார்னர்-2 , கிசுகிசு கார்னர்-3, கிசுகிசு கார்னர்-4, கிசுகிசு கார்னர்-5, கிசுகிசு கார்னர்-6 மற்றும் கிசு கிசு கார்னர் 7.வாசகர்களிடையே பெற்ற வரவேற்பினால் இதோ அதன் அடுத்த கட்டம்: கிசு கிசு கார்னர் 8. Game On.
 
(1). தமிழ் காமிக்ஸ் வலையுலக பீஷ்ம பிதாமகர் ஆகிய அந்த ரேலிஃபேன் பதிவர் தமிழ் காமிக்ஸ் உலகிற்கு ஒரு மகத்தான சேவை செய்யும் எண்ணத்தோடு ஒரு காரியத்தினை ஆரம்பித்துள்ளார். அது முடியும்போது தமிழ் காமிக்ஸ் உலக்கில் வந்த அனைத்துக் காமிக்ஸ் கதைகளையும் இணைக்கும் பாலமாக அந்த முயற்சி அமையுமாம். அவருக்கு பூங்காவனம் மற்றும் ஏஜென்ட் காத்தவ் சார்பில் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டை மொத்தமாக வாங்கவும் அவருக்கு ஒரு முயற்சி பிளஸ் ஆசை உள்ளது. அது அரசியல் மூலமாகவோ ஆள்பலம் மூலமாகவோ இல்லாமல் சாத்வீக முறையில் நடைபெறுமாம்.
 
(2). நம்முடனே பல பதிவுகளின் மூலம் தம்முடைய கருத்துக்களை அளித்த, சமீபத்தில் திருமண பந்தத்தில் மூழ்கி இல்லற வாழ்வை இனிதே அனுபவித்து வரும் தென்னம்பாளயத்தார் அரசியலில் தொபுக்கடீர் என்று குதித்தது நாம் அனைவரும் அறிந்ததே. நம்முடைய இணையபூவில் தான் அந்த தகவல் முதலில் வந்ததை மக்கள் மறக்க மாட்டார்கள். ஆனால், அதற்க்கு பிறகு நடந்த சம்பவங்களை யாரும் கூர்ந்து கவனிக்கவில்லை போலும். ஆம், தென்னம்பாளயத்தார் அரசியலில் குதித்தவுடன் பல நாட்களாக காத்திருந்த நடிகை குஷ்பூவும் கூட அரசியலில் தொபுக்கடீர் என்று குதித்து விட்டார்கள். பல வருடங்களாக காத்திருந்த நடிகை திடீர் என்று குதித்ததின் பின்னணி இதுதானாம். கடவுளே, கடவுளே. 1 + 1 = 2, OK?
 
Kushboo
(3) கடந்த ஒரு வாரமாக தமிழ் நாட்டில் எந்த ஒரு கடையிலும் தின்பண்டங்களும் "இதர" பொருட்களும் கிடைக்கவில்லையாம்.கடந்த வாரம் கலைஞருக்கும், இந்த வாரம் உலகமெங்கும் பரவி உள்ள ஒரு பயங்கரவாத இயக்கத்தின் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஆகிய இரண்டும் தான் அதற்க்கு காரணமாம். அந்த பயங்கரவாதியின் தொண்டர்கள் ஆகிய குண்டர்கள் ஊரெங்கும் தோரணம் கட்டி, ஒரு சிங்கம் படம் ஓடும் தியேட்டருக்கு சென்று கலாட்டா செய்து இந்த பிறந்த நாளை கொண்டாடினார்களாம். (ஏன் சிங்கம் தியேட்டருக்கு என்றா கேட்கிறீர்கள்? அது ஒரு தனி கதை - ஒரிஜினல் சிங்கம் எங்க பயங்கரவாதி தான் - அதனால படத்துல கிராபிக்ஸ் காட்சியில் சூர்யாவின் முகம் மாறும்போது சிங்கம் காண்பிப்பதற்கு பதிலாக இவரின் முகத்தை காட்ட வேண்டி செய்த கலாட்டாவே அது).
 
பணப் புழக்கம் அதிக அளவில் இருந்ததால் ரிசர்வ் வங்கி கூட தடுமாறியதாம். உள்ளூர் செலவாணி அதிகரித்ததே இதற்க்கு காரணமாம். இந்த போராட்டங்களில் ஒரு துக்க சம்பவமும் நடை பெற்றது.தனமானச் சிங்கம், புரட்சிப் புயல், தானைத் தலைவி "சைதை தமிழரசி" தாக்கப்பட்டார். அதனால் சில பல சூறையாடல்களும், வங்கிக் கொள்ளைகளும் இனிதே நடை பெற்றது.
 
banupriya
டிஸ்கி: இந்த கொண்டாட்டங்களை கண்ட இயக்க சகோதரர்கள் தலைவருக்கு வாராவாரம் பிறந்த நாள் வரக் கூடாதா என்று அங்கலாய்க்கிறார்களாம்.
 
(4) தன்னுடைய பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடி வரும் அந்த மிதவாதி பதிவர், இன்னமும் தன்னிலைக்கு வர வில்லையாம்.அவருடைய கைபேசி கடந்த இரண்டு மூன்று நாட்களாக சுவிட்ச் ஆப் செய்யப் பட்ட நிலையிலேயே உள்ளதாம். ஒரு வேலை, பிறந்த நாள் டிரீட் கேட்கும் ஒலக காமிக்ஸ் ரசிகரிடம் இருந்து தப்பிக்க அவர் செய்யும் உபாயமோ? ஏனென்றால் மற்றவர்கள் போன் செய்தால் பேசுகிறாராம். என்ன கொடுமை சார் இது?
 
meenakshi01
(5). அரசியல் கருத்துக்களை அஞ்சாமல் அள்ளிவீசும் தென்னம்பாளயத்தார் அவர்கள் சமீப நாட்களில் எந்தவிதமான பதிவுகளும் இடுவதில்லை என்பது தெரிந்ததே. நல்ல நல்ல பதிவுகளில் சென்று அவர் கருதுக்கனைகளை அள்ளி வீசுவார். ஆனால் கடந்த ஓரிரு மாதங்களாக அதுவும் இல்லை. அரசியலில் பிசியாக இருப்பார் என்று பார்த்தால் அதுவும் இல்லையாம். இந்த படத்தில் இருக்கும் நடிகைக்கும் தென்னம்பாளயத்தார் அவர்கள் கமென்ட் கூட இடாமல் இருப்பதற்கும் சம்பந்தம் உண்டு என்று நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவிக்கிறார்கள். என்ன கொடுமை சார் இது?
 
2010-logo
(6) தமிழ் காமிக்ஸ் வலையுலகின் “முடி”சூடா மன்னன் ஆக திகழும் அந்த பதிவர் சமீப காலமாக உலகெங்கிலும் உள்ள பல நகரங்களில் பயணம் மேற்கொண்டாலும், இந்த வாரம் துவங்க உள்ள உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கு சென்று ஷகிராவுடன் கெட்ட ஆட்டம் போட உள்ளாராம். கூடவே வேறொரு பதிவருக்கும் டிக்கெட் வேறு உள்ளதாம். யார் அந்த மற்றொரு பதிவர்?
 

இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்திடம் இருந்து ஒரு பெர்சனல் மின் அஞ்சல் வரும்.


கிசுகிசு கோபால். 
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே.


சிறப்பான கிசு கிசு'க்களுக்கு நன்றி கோபால்.
பூங்காவனம், 
எப்போதும் பத்தினி.

Wednesday, April 14, 2010

தமிழ் புத்தாண்டு சிறப்பு பதிவு- கிசுகிசு கார்னர் 7

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

தமிழ் காமிக்ஸ் தளத்தில் இன்றைய தினம் ஒரு மறக்க முடியாத தினமாகும். ஆமாம், தமிழ் புத்தாண்டு மற்றும் வேண்டப்பட்ட விரோதி கிங் விஸ்வாவின் பிறந்த தினமாகிய இன்று மொத்தம் பத்து பதிவுகள் இடப்பட்டன. அதன் விவரங்கள் இதோ: @ 10.30 PM

1. ஒலக காமிக்ஸ் ரசிகர் - தலை சிறந்த காமிக்ஸ்கள் -தமிழ் காமிக்ஸ் உலகில் ராஜாக்களும், மன்னர்களும்- 20 Comments

2. புலா சுலாகி-தமிழர் புத்தாண்டு ஸ்பெஷல் - ராஜாளி ராஜாப்பயல் - இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர் – 11 comments

3. முத்து விசிறி -காமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்- ராசா... இன்னைக்கு உனக்கு பிறந்தநாள்-16 comments.

4. காமிக்ஸ் பிரியன்-க.கொ.க.கூ-தங்க ராஜா – 13 comments

5. காமிக்ஸ் காதலன்-பொக்கிஷம்-அரசியல் சூப்பர் கிங்ஸ் – 7 comments.

6. வேதா-ஸ்கிப் காமிக்ஸ்-Tatty Mane – King of the Jungle – 7 Comments.

7. ஸ்பைடர் -மீண்டும் ஸ்பைடர்-கிங் ஆப் குரூக்ஸ் – 3 comments.

8. பயங்கரவாதி டாக்டர் செவன்-அ.கொ.தீ.க-கோடை மலர்-9 comments.

9. லக்கி லுக்-தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்-சிறப்பு பதிவு:மேற்கில் ஒரு மாமன்னர்- 18 comments

10. ஐய்யம்பாளயத்தார்-காமிக்ஸ் பூக்கள்-பூந்தளிர் முதல் இதழ் – 4 comments.  

=======================================================================================================

நம்முடைய வலையுலக ரிபோர்ட்டர் கிசுகிசு கோபால் சமீப காலங்களில் தமிழ் காமிக்ஸ் வலையுலகில் நடந்து வரும் சுவையான தகவல்களை நம்முடைய வலைப் பூவில் பகிர்ந்து கொள்ள சம்மதித்து அவருடைய கைங்கர்யமான கிசுகிசு கார்னர்-1 , கிசுகிசு கார்னர்-2 , கிசுகிசு கார்னர்-3, கிசுகிசு கார்னர்-4, கிசுகிசு கார்னர்-5  மற்றும் கிசுகிசு கார்னர்-6.வாசகர்களிடையே பெற்ற வரவேற்பினால் இதோ அதன் அடுத்த கட்டம்: கிசு கிசு கார்னர் 7.

  • சென்ற வாரத்தில் ஒரு மாலை நேரத்தில் தமிழ் காமிக்ஸின் முடி சூடிய மன்னர் ஒருவர் கடற்கரையோரம் "உய்யலாலா" என்று ஜாலியாக இருந்தாராம், அதனை சிறப்பு நிருபர் மொட்டுக்கடிச்சான் என்பவர் சாட்சிகளுடன் அப்துல் கலாமின் காதலரிடம் நிரூபிக்க, அவரும் அதனை அவரின் தளத்தில் கமெண்ட்டாக இட்டுவிட, அனைவருக்கும் அந்த ஊரறிந்த ரகசியம் தெரிந்து விட்டதாம். இனிமேலாவது அந்த சம்பந்தப்பட்ட பதிவர் ஜாக்கிரதையாக இருப்பாரா?
  •  
  • மிதவாதி நோயாளி சிக்ஸ் என்ற பதிவர் சமீபத்தில் இன்னுமொரு பதிவரை புத்தக செட் ஒன்றை வாங்க விடாமல் தடுத்தாராம். அதாவது ராணி காமிக்ஸ் முதல் நூற்றியிருவது புத்தகங்கள் அட்டகாசமான கண்டிஷனில் ருபாய் ஆறாயிரம் விலையில் வாங்க இருந்தால் நண்பர் ஒருவர். ஆனால், அந்த தகவலை கேள்விப்பட்ட மிதவாதி ராணி காமிக்ஸ் புத்தகங்களின் அதிகபட்ச மார்கெட் விலை ருபாய் ஐந்து என்பதை விளக்கி சொல்ல, உண்மையை அறிந்த அந்த கொழந்தை பதிவர் அந்த ராணி காமிக்ஸ் சேட்டை வாங்கவில்லையாம். இதனால் கணினி துறையில் COBOL படித்த நபர் ஒருவருக்கு பெருத்த நஷ்டமாம்.
  •  
  • நம்முடனே பல பதிவுகளின் மூலம் தம்முடைய கருத்துக்களை அளித்த தென்னம்பாளயத்தார் அவர்கள் திடீரென்று அதிரடியாக அரசியலில் குதித்துள்ளார். கோட்டையை நோக்கி சென்றுக் கொண்டு இருந்த அவரை அண்டவெளி ரசிகர் ஒருவர் பார்த்து விட்டு சிலபல புகைப்படங்களை ஆதாரமாக வேறு எடுத்துவிட, வேறு வழியில்லாத தென்னம்பாளயத்தார் தான் கோட்டையை நோக்கி முன்னேறுவதை ஒப்புக் கொண்டு தன்னுடய அரசியல் பிரவேசத்தினைஉறுதி செய்தார். அதனைப் பற்றிய ஒரு முழுநீள பதிவினை வேறவதாவது தளத்தில் இந்த வாரம் படியுங்கள்.

இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்திடம் இருந்து ஒரு பெர்சனல் மின் அஞ்சல் வரும்.

கிசுகிசு கோபால்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே.


--
சிறப்பான கிசு கிசு'க்களுக்கு நன்றி கோபால்.


பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.

Sunday, February 28, 2010

காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

சமீப நாட்களில் சென்னை மற்றும் சுற்றுபுரங்களில் எங்குமே ஒரு தமிழ் காமிக்ஸ் கூட வாங்கமுடிவதில்லை என்பது பலருக்கும் தெரியும். குறிப்பாக பெரும் வேட்டைக்காரர்கள் கூட ஓரிரு புத்தகங்களை கூட வாங்க முடிவதில்லை. ஆனால் சென்னையிலும் அதன் சுற்றுபுரங்களிலும் காமிக்ஸ்கள் கண்டிப்பாக கிடைக்கின்றன. அப்படி கிடைக்கும் காமிக்ஸ் புத்தகங்கள் எங்கு செல்கின்றன? அவற்றை வாங்குவது யார்? யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைப்பது யார்? என்று எழும் பல கேள்விகளுக்கு விடை அளிக்கவே இந்த காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1.

இன்ஸ்பெக்டர் இன்பராஜ் (பல குற்றங்களை அரிக்கேன் / லாந்தர் விளக்குகளை கொண்டு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்) அவர்களிடம் இந்த காமிக்ஸ் பதுக்கலை கண்டுபிடிக்குமாறு ஒரு அசைன்மென்ட் கொடுத்து இருந்தோம். அதன்படியே அவரும் மாறுவேடங்களில் எல்லாம் சென்று காமிக்ஸ் திருத்தலங்களில் எல்லாம் சென்று (அதாங்க, காமிக்ஸ் விற்கும் கடைகள்) பலநாட்கள் விசாரித்து ஒருவழியாக உண்மையை கண்டுபிடித்தார்.

 

வெளிப்பார்வைக்கு சாதரணமான ஒரு ட்ராவல் பேக் தான் இது. நீங்களே பாருங்களேன் - சரிதானே?

Comics Smuggling 01

அந்த ட்ராவல் பேக்கை திறந்துபார்த்தால்கூட உள்ளே சாதரணமான துணிமணிகள் தான் தெரியும். பாருங்கள்.

Comics Smuggling 02

டி-ஷர்ட்டுகள், பனியன்கள், என்று ஒரு சாதரணமான ட்ராவல் பேக்கில் இருக்கும் விஷயம் தானே?

Comics Smuggling 03

ஆனால் அந்த பேக்கில் மேலோட்டமாக இருக்கும் துணிகளை எடுத்துவிட்டால்....என்ன கொடுமை சார் இது?

Comics Smuggling 04

பல நூறு ராணி காமிக்ஸ்களும், பூந்தளிர் இதழ்களும் , பார்வதி சித்திரக்கதைபுத்தகங்கள் முழு செட்டும்

Comics Smuggling 05

என்ன அநியாயம் சார் இது? வேறு ஊரை சேர்ந்த யாரோ ஒருவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு வந்து சென்னையில் கிடைக்கும் பல நூறு அரிய காமிக்ஸ் புத்தகங்களை கொள்ளையடித்து, அதனை பதுக்கி செல்கின்றனர். ஆனால் சென்னையில் இருக்கும் பல காமிக்ஸ் ரசிகர்கள் தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை, தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்று அவதிப்படுகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு வழியே இல்லையா?

புத்தகங்களை பதுக்கும் அந்த நபர் யார் என்பதை நேரிடையாக சொல்ல இயலாவிட்டாலும் கூட அவரை பற்றிய சிறிய தகவல் ஒன்றினை அளிக்கிறேன், முடிந்தால் கண்டுபிடித்து  கொள்ளவும். அந்த காமிக்ஸ் பதுக்கல் பேர்வழி கோவில் மாநகரை சேர்ந்தவர். சென்னைக்கு மாதம் ஒரு முறையாவது வருபவர்.

அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க வெகு விரைவில் காமிக்ஸ் கிசுகிசுவுடன் திரும்பி வருகிறேன்.

Monday, January 25, 2010

கிசுகிசு கார்னர்-6

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நம்முடைய வலையுலக ரிபோர்ட்டர் கிசுகிசு கோபால் சமீப காலங்களில் தமிழ் காமிக்ஸ் வலையுலகில் நடந்து வரும் சுவையான தகவல்களை நம்முடைய வலைப் பூவில் பகிர்ந்து கொள்ள சம்மதித்து அவருடைய கைங்கர்யமான கிசுகிசு கார்னர்-1 , கிசுகிசு கார்னர்-2 , கிசுகிசு கார்னர்-3, கிசுகிசு கார்னர்-4 மற்றும் கிசுகிசு கார்னர்-5 வாசகர்களிடையே பெற்ற வரவேற்பினால் இதோ அதன் அடுத்த கட்டம்: கிசுகிசு கார்னர்-6.

  • கிசுகிசு-1 – வினையான காமிக்ஸ் வேட்டை:

தமிழகம் முழுவதும் பல சூறாவளி சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு தீவிரமாக காமிக்ஸ் வேட்டையாடி வரும் யாரோ ஒரு காமிக்ஸ் வலைப்பதிவர் சமீபத்தில் வேறு யாரோ இன்னொரு காமிக்ஸ் வலைப்பதிவர் வாழ்ந்து வரும் ஏதோ ஒரு ஊருக்கு சென்றாராம்.

அங்கு இருவருமாக சேர்ந்து காமிக்ஸ் வேட்டைக்கு கிளம்பினார்களாம். ஆனால் அந்த யாரோ ஒரு காமிக்ஸ் வலைப்பதிவர் அந்த ஏதோ ஒரு ஊருக்கு புதியவர் என்பதால் அந்த வேறு யாரோ இன்னொரு காமிக்ஸ் வலைப்பதிவர் அவரை ஏமாற்றி காமிக்ஸ் வாசனையே துளியும் இல்லாத பல மொக்கை கடைகளுக்கு அழைத்து சென்று இங்கெல்லாம் இவ்வளவுதான் என்றெல்லாம் கூறினாராம்.

அந்த யாரோ ஒரு காமிக்ஸ் வலைப்பதிவரும் நொந்து நூடுல்ஸாகி மனதை தேற்றியவாரே அந்த ஏதோ ஒரு ஊரிலிருந்து திரும்பினாராம். ஆனால் அந்த யாரோ ஒரு காமிக்ஸ் வலைப்பதிவர் அந்த ஏதோ ஒரு ஊரிலிருந்து திரும்பிய மறுநாளே அந்த வேறு யாரோ இன்னொரு காமிக்ஸ் வலைப்பதிவர் அந்த ஏதோ ஒரு ஊரிலிருந்த வேறு சில பல கடைகளுக்கு சென்று கிடைத்தற்கரிய பல பல காமிக்ஸ் பொக்கிஷங்களை வேட்டையாடியுள்ளாராம்.

இதையறிந்த அந்த யாரோ ஒரு காமிக்ஸ் வலைப்பதிவர் இது நிச்சயம் அந்த வேறு யாரோ இன்னொரு காமிக்ஸ் வலைப்பதிவரின் திட்டமிட்ட சதிவேலை என்று புலம்பி வருகிறாராம். இதனால் இவர்களுக்கிடையே நிலவி வந்த பலத்த நட்பு முறிந்துள்ளதாம்.

பாவம் அந்த யாரோ ஒரு காமிக்ஸ் வலைப்பதிவர்.

  • கிசுகிசு-2 - அசல் திரைப்பட தாமத விவரம்:

சமீபத்தில் திருமண பந்தத்தில் மூழ்கி இல்லற வாழ்வை இனிதே அனுபவித்து வரும் தென்னம்பாளயத்தார் இந்த பொங்கலை தல பொங்கலாக கொண்டாட இருப்பது தெரிந்த அல்டிமேட் ஸ்டார் அஜித் தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார்.

இது தெரிந்த இளைய தளபதி மருத்துவர் விஜய் உடனடியாக தென்னம்பாளயத்தாரை தொடர்பு கொண்டு சென்ற முறை தீபாவளியைதான் தல தீபாவளியாக கொண்டாடினீர்கள், இந்த முறை பொங்கலையாவது போக்கிரி பொங்கலாக கொண்டாடுமாறு மன்றாடி கேட்டுக் கொண்டார்.

ஆனால் அரசியல் கருத்துக்களை அஞ்சாமல் அள்ளி வீசும் தென்னம்பாளயத்தார் இரண்டு பேருக்கும் ஆப்பு வைக்கும் வகையில் அது தல பொங்கல் இல்லை தலைப் பொங்கல் என்று கூறிவிட்டாராம்.

இதனால் மனம் நொந்த அல்டிமேட் ஸ்டார் அஜித் தன்னுடைய அசல் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யாமல் தள்ளிப் போட்டு விட்டார். இப்படியாக எண்பது வருட தமிழ் சினிமா வரலாற்றில் இரண்டாம் முறையாக தனி ஒரு மனிதரின் கொண்டாட்டங்கள் ஒரு படத்தின் ரிலீஸையே தள்ளிப் போட்ட சம்பவம்  நடைபெற்றுள்ளது.

  • கிசுகிசு-3 - விடுமுறை தின சிறப்பு கிசுகிசு:
நாளை குடியரசு தினம் அரசு விடுமுறை என்பதால் தென்னம்பாளையத்தாருக்கு ஃபோன் செய்பவர்கள் உஷாராக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். சமூக நலன் கருதி இந்த கிசுகிசு வெளியிடப் படுகிறது.
  • கிசுகிசு-4 – வரும் நாட்களில் சில முக்கிய நிகழ்வுகள்:
“ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே” என வாடிக் கிடக்கும் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு விருந்தாக ஏப்ரல் மாதத்தில் முப்பெரும் காமிக்ஸ் விழா நடைபெறப் போவதாக தகவல். இது உலகத் தமிழ் மாநாட்டை விட சிறப்பாக நடைபெறும் என்று பேச்சு அடிபடுகிறது.
  • கிசுகிசு-5 – பிரபலங்கள் வருகை:
பிரபல வலைப்பதிவர்கள் இருவர் வெகுவிரைவில் தமிழ் காமிக்ஸ் வலையுலகிற்கு வருகை தரப் போகிறார்களாமே? விவரங்கள் விரைவில்.
  • கிசுகிசு-6 – ஆயிரத்தில் ஒருவனும் தலை கேட்ட தங்கப் புதையலும்:

சமீபத்தில் வெளியாகியுள்ள ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் கதையும் தலை கேட்ட தங்கப் புதையல் கதையும் ஒன்றுதான் என்று ‘முடி’சூடிய அந்த மன்னர் பதிவர் போகிற பக்கமெல்லாம் பிட்டைப் போட்டு விட்டு செல்ல, அதை நம்பி தீவிரவாதி பதிவரும், ஒலகத்தையே ரசிக்கும் ஒரு காமிக்ஸ் பதிவரும் படத்திற்கு போனார்களாம்.

ஆனால் படம் பார்த்துவிட்டு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று அறிந்த பின்னர், அதே கடுப்பில் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட அந்த மக்காச்சோள மன்னர் பதிவரையும் அவரது வம்சத்தையும் அழிக்க நாசக்காரி ஆயுதங்களுடன் துரத்தி வருகிறார்களாம். இதையறிந்த அந்த மன்னர் பதிவர் சோழ இளவரசன் பதுங்கியிருக்கும் அதே தீவுக்கு தப்பியோட திட்டமிட்டுள்ளாராம்.

இந்த கிசுகிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

கிசுகிசு கோபால்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே.

-- சிறப்பான கிசுகிசுக்களுக்கு நன்றி கோபால்.

பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.

Related Posts Widget for Blogs by LinkWithin