Monday, January 25, 2010

கிசுகிசு கார்னர்-6

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நம்முடைய வலையுலக ரிபோர்ட்டர் கிசுகிசு கோபால் சமீப காலங்களில் தமிழ் காமிக்ஸ் வலையுலகில் நடந்து வரும் சுவையான தகவல்களை நம்முடைய வலைப் பூவில் பகிர்ந்து கொள்ள சம்மதித்து அவருடைய கைங்கர்யமான கிசுகிசு கார்னர்-1 , கிசுகிசு கார்னர்-2 , கிசுகிசு கார்னர்-3, கிசுகிசு கார்னர்-4 மற்றும் கிசுகிசு கார்னர்-5 வாசகர்களிடையே பெற்ற வரவேற்பினால் இதோ அதன் அடுத்த கட்டம்: கிசுகிசு கார்னர்-6.

  • கிசுகிசு-1 – வினையான காமிக்ஸ் வேட்டை:

தமிழகம் முழுவதும் பல சூறாவளி சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு தீவிரமாக காமிக்ஸ் வேட்டையாடி வரும் யாரோ ஒரு காமிக்ஸ் வலைப்பதிவர் சமீபத்தில் வேறு யாரோ இன்னொரு காமிக்ஸ் வலைப்பதிவர் வாழ்ந்து வரும் ஏதோ ஒரு ஊருக்கு சென்றாராம்.

அங்கு இருவருமாக சேர்ந்து காமிக்ஸ் வேட்டைக்கு கிளம்பினார்களாம். ஆனால் அந்த யாரோ ஒரு காமிக்ஸ் வலைப்பதிவர் அந்த ஏதோ ஒரு ஊருக்கு புதியவர் என்பதால் அந்த வேறு யாரோ இன்னொரு காமிக்ஸ் வலைப்பதிவர் அவரை ஏமாற்றி காமிக்ஸ் வாசனையே துளியும் இல்லாத பல மொக்கை கடைகளுக்கு அழைத்து சென்று இங்கெல்லாம் இவ்வளவுதான் என்றெல்லாம் கூறினாராம்.

அந்த யாரோ ஒரு காமிக்ஸ் வலைப்பதிவரும் நொந்து நூடுல்ஸாகி மனதை தேற்றியவாரே அந்த ஏதோ ஒரு ஊரிலிருந்து திரும்பினாராம். ஆனால் அந்த யாரோ ஒரு காமிக்ஸ் வலைப்பதிவர் அந்த ஏதோ ஒரு ஊரிலிருந்து திரும்பிய மறுநாளே அந்த வேறு யாரோ இன்னொரு காமிக்ஸ் வலைப்பதிவர் அந்த ஏதோ ஒரு ஊரிலிருந்த வேறு சில பல கடைகளுக்கு சென்று கிடைத்தற்கரிய பல பல காமிக்ஸ் பொக்கிஷங்களை வேட்டையாடியுள்ளாராம்.

இதையறிந்த அந்த யாரோ ஒரு காமிக்ஸ் வலைப்பதிவர் இது நிச்சயம் அந்த வேறு யாரோ இன்னொரு காமிக்ஸ் வலைப்பதிவரின் திட்டமிட்ட சதிவேலை என்று புலம்பி வருகிறாராம். இதனால் இவர்களுக்கிடையே நிலவி வந்த பலத்த நட்பு முறிந்துள்ளதாம்.

பாவம் அந்த யாரோ ஒரு காமிக்ஸ் வலைப்பதிவர்.

  • கிசுகிசு-2 - அசல் திரைப்பட தாமத விவரம்:

சமீபத்தில் திருமண பந்தத்தில் மூழ்கி இல்லற வாழ்வை இனிதே அனுபவித்து வரும் தென்னம்பாளயத்தார் இந்த பொங்கலை தல பொங்கலாக கொண்டாட இருப்பது தெரிந்த அல்டிமேட் ஸ்டார் அஜித் தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார்.

இது தெரிந்த இளைய தளபதி மருத்துவர் விஜய் உடனடியாக தென்னம்பாளயத்தாரை தொடர்பு கொண்டு சென்ற முறை தீபாவளியைதான் தல தீபாவளியாக கொண்டாடினீர்கள், இந்த முறை பொங்கலையாவது போக்கிரி பொங்கலாக கொண்டாடுமாறு மன்றாடி கேட்டுக் கொண்டார்.

ஆனால் அரசியல் கருத்துக்களை அஞ்சாமல் அள்ளி வீசும் தென்னம்பாளயத்தார் இரண்டு பேருக்கும் ஆப்பு வைக்கும் வகையில் அது தல பொங்கல் இல்லை தலைப் பொங்கல் என்று கூறிவிட்டாராம்.

இதனால் மனம் நொந்த அல்டிமேட் ஸ்டார் அஜித் தன்னுடைய அசல் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யாமல் தள்ளிப் போட்டு விட்டார். இப்படியாக எண்பது வருட தமிழ் சினிமா வரலாற்றில் இரண்டாம் முறையாக தனி ஒரு மனிதரின் கொண்டாட்டங்கள் ஒரு படத்தின் ரிலீஸையே தள்ளிப் போட்ட சம்பவம்  நடைபெற்றுள்ளது.

  • கிசுகிசு-3 - விடுமுறை தின சிறப்பு கிசுகிசு:
நாளை குடியரசு தினம் அரசு விடுமுறை என்பதால் தென்னம்பாளையத்தாருக்கு ஃபோன் செய்பவர்கள் உஷாராக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். சமூக நலன் கருதி இந்த கிசுகிசு வெளியிடப் படுகிறது.
  • கிசுகிசு-4 – வரும் நாட்களில் சில முக்கிய நிகழ்வுகள்:
“ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே” என வாடிக் கிடக்கும் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு விருந்தாக ஏப்ரல் மாதத்தில் முப்பெரும் காமிக்ஸ் விழா நடைபெறப் போவதாக தகவல். இது உலகத் தமிழ் மாநாட்டை விட சிறப்பாக நடைபெறும் என்று பேச்சு அடிபடுகிறது.
  • கிசுகிசு-5 – பிரபலங்கள் வருகை:
பிரபல வலைப்பதிவர்கள் இருவர் வெகுவிரைவில் தமிழ் காமிக்ஸ் வலையுலகிற்கு வருகை தரப் போகிறார்களாமே? விவரங்கள் விரைவில்.
  • கிசுகிசு-6 – ஆயிரத்தில் ஒருவனும் தலை கேட்ட தங்கப் புதையலும்:

சமீபத்தில் வெளியாகியுள்ள ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் கதையும் தலை கேட்ட தங்கப் புதையல் கதையும் ஒன்றுதான் என்று ‘முடி’சூடிய அந்த மன்னர் பதிவர் போகிற பக்கமெல்லாம் பிட்டைப் போட்டு விட்டு செல்ல, அதை நம்பி தீவிரவாதி பதிவரும், ஒலகத்தையே ரசிக்கும் ஒரு காமிக்ஸ் பதிவரும் படத்திற்கு போனார்களாம்.

ஆனால் படம் பார்த்துவிட்டு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று அறிந்த பின்னர், அதே கடுப்பில் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட அந்த மக்காச்சோள மன்னர் பதிவரையும் அவரது வம்சத்தையும் அழிக்க நாசக்காரி ஆயுதங்களுடன் துரத்தி வருகிறார்களாம். இதையறிந்த அந்த மன்னர் பதிவர் சோழ இளவரசன் பதுங்கியிருக்கும் அதே தீவுக்கு தப்பியோட திட்டமிட்டுள்ளாராம்.

இந்த கிசுகிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

கிசுகிசு கோபால்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே.

-- சிறப்பான கிசுகிசுக்களுக்கு நன்றி கோபால்.

பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.

1 comment:

  1. மக்களே,

    கிசு கிசு ஆறிற்கும், எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பதை இங்கே தெள்ளத் தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய மொபைல் எண் இன்டர்நேஷனல் ரோமிங்கில் இருப்பதன் காரணம் //இதையறிந்த அந்த மன்னர் பதிவர் சோழ இளவரசன் பதுங்கியிருக்கும் அதே தீவுக்கு தப்பியோட திட்டமிட்டுள்ளாராம்// இது அல்ல.

    ReplyDelete

Related Posts Widget for Blogs by LinkWithin