Sunday, May 17, 2009

கிசுகிசு கார்னர்-2

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நம்முடைய வலையுலக ரிபோர்ட்டர் கிசுகிசு கோபால் சமீப காலங்களில் வலையுலகில் நடந்து வரும் சுவையான தகவல்களை நம்முடைய வலைப் பூவில் பகிர்ந்து கொள்ள சம்மதித்து அவருடைய கைங்கர்யமான கிசு கிசு-1 வாசகர்களிடையே பெற்ற வரவேர்ப்பினால் இதோ அதன் அடுத்த கட்டம்: கிசு கிசு கார்னர்-2.

Note: The Image is to Make Sure that Readers Should Not Be Cruel To Animals. As Billions of Readers Watch this Photo and Hopefully PETA will take some action.

(1) கனவுகளுடன் முழுமையாக ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் அப்பதிவரிற்கு பொல்லாத படை ஆசிரியரிடமிருந்து இருந்து இரண்டு அன்புக் கட்டளைகள் இடப்பட்டுள்ளது.
*ஒன்று பட்டப் பெயர்கள் அளிப்பதை தவிர்ப்பது,
*இரண்டு குஜிலிகளின் போட்டோக்களில் அடக்கி வாசிப்பது.

குஜிலிகளின் போட்டோக்களை பதிவில் போட்டு கனவுகளில் அவர்களுடன் டூயட் பாடிக் கொண்டிருந்தவர் தற்போது குஜிலிகளிற்குப் பதில் சரோசா தேவி, சாவித்திரி என அவிழ்த்து விடலாமா என கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் இந் நாயகிகளின் படங்கள் கதாசிரியரின் இளமைக் காலத்தை (?!?) அவரிற்கு நினைவூட்டி மகிழ்விக்கும் என அவர் நம்புகிறாராம்.

(2) தன்னுடைய அலுவல்களில் மூழ்கி விட்ட ஊர்ப்பெயரை கொண்ட அந்த பதிவர் அடுத்த ஏழு நாட்களில் இடப் போகும் பதிவு எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக இருக்கும் என்று கேள்விப்பட்ட பலர் கூறி வருகின்றனர். அய்யா, சென்னைக்கு சீக்கிரம் திரும்பி வாருமையா. உங்கள் பதிவுகளுக்கு காமிக்ஸ் ரசிகர்கள் காத்து இருக்கின்றனர்

(3) பிரபல மருத்துவரும் தமிழ் வலைப்பதிவருமான அந்த அஜித் ரசிகர் தன்னுடைய வலைப்பூவில் புதிதாக ஆரம்பித்துள்ள வேட்டைக்கார தொடரில் இடம் பெறுவதற்காக இரண்டு காமிக்ஸ் பதிவர்கள் "ஸ்பெஷலாக கவனித்ததாக" பேச்சு. பெரிய பெட்டி கூட கை மாறியதாம். பெட்டி கை மாறியவுடன் அந்த பிரபல மருத்துவரும் உடனே தொடரை ஆரம்பித்து விட்டாராம். காமிக்ஸ் பாஷையில் சொல்வதானால் "பணப் பெட்டி மறைந்த மாயம்". தேர்தல் பாஷையில் சொல்வதானால் "கை மாறிய பெட்டி".

(4) ஒரு தொடரில் முயலாக வந்தவரும் லக்கி லூக்கின் தீவிர காதலால் தன்னுடைய பெயருக்கு முன்னாள் அடை மொழியாக அவர் பெயரை உபயோகப்படுத்துபவருமாகிய அந்த புதிய பதிவர் அடுத்து ஒரு வித்தியாசமான பதிவை இட என்ணி உள்ளாராம். தன்னுடைய மானசீக குருவாகிய அந்த தூங்குமூஞ்சி பதிவரை போலவே இந்த பதிவும் ஆளை அசத்துமாம்.

(5) மேலே குறிப்பிட்ட அந்த பதிவர் தற்போது டவுன்லோட் லிங்க்'குகளை கொடுக்காமல் காமிக்ஸ் பதிவுகளை வழங்குவதால் அவருடைய சிஷ்யப் பிள்ளையான மற்றுமொரு காமிக்ஸ் லவ்வர் (அவர் பெயர் கூட ஏதோ சுரேந்தர், நரேந்தர் மாதிரி இருக்கும்) அந்தப் பொறுப்பை சிரமேர்க்கொண்டு திடீர் திடீர் என்று டவுன்லோட் லிங்க்'குகளை வழங்கி காமிக்ஸ் ரசிகர்களை மயக்குகிறார். அதிரடி தொடருமாம். அதனால் காமிக்ஸ் ரசிகர்கள் தற்போது பதிவுகளுடன் கமெண்ட்'களையும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

(6) தமிழ் காமிக்ஸ் உலகின் முடி சூடிய மன்னர் தன்னுடைய ஐம்பதாவது பதிவை அடுத்த ஞாயிறு அன்று வலையேற்ற முடிவு செய்திருக்கிறாராம். இது அவருடைய ஸ்பெஷல் பதிவாம். அதற்காக தன்னுடைய வலைப்பூவில் சைட்பாரில் அப்டேட் வேறு செய்து வருகிறார்.

இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்திடம் இருந்து ஒரு பெர்சனல் மின் அஞ்சல் வரும்.

கிசுகிசு கோபால்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே.

--
சிறப்பான கிசு கிசு'க்களுக்கு நன்றி கோபால்.

பூங்காவனம்,
எப்போதும் பத்தினி

8 comments:

 1. கிசு கிசு கார்னர்-2 வலையேற்றப்பட்டுள்ளது.
  லெட் த கும்மி ஸ்டார்ட்.

  --
  பூங்காவனம்,
  எப்போதும் பத்தினி.

  ReplyDelete
 2. கிசு கிசு கோபாலு, தயவு செய்து மறைந்து விடுங்கள் உங்களை சும்மா விடப் போவதில்லை.

  என் அபிமான நடிகர் ராஜேந்தரிற்கு அவரின் உடல் தான் அழகு. ஒட்டப்பட்ட உடல் அசிங்கமாக இருந்தாலும். ராஜேந்தரின் முகம்!!! மன்மதனிற்கே டாடியல்லவா இந்த தாடி.

  தொடரில் இடம்பெற பெட்டி தருவதானால் பாரிசில் வேட்டைக்காரன் எனும் தமிழ் டப்பிங் தொடரை நான் இப்போதே ஆரம்பித்து விடுகிறேன். பொட்டிகளை சீக்கிரமா அனுப்புங்க ஹீரோக்களே.

  உற்சாகத்துடன் தொடருங்கள்.

  ReplyDelete
 3. கிசு கிசு க்கு ஒரு பதிவா?

  ReplyDelete
 4. ஒரு கிசுகிசுக்கும் பதில் தெரியலியே அம்மிணி!!

  ReplyDelete
 5. கடைசியில் உள்ள புகைப்படத்தில் வரும் பெண்மணி சகலகலாவல்லவன் படத்தில் தேங்காய் சீனிவாசனின் மனைவியாகவும்

  குரு சிஷ்யன் படத்தில் வினுச் சக்கரவர்த்தியின் அம்மாவாகவும் வருகிறார் என்பது கூடுதல் தகவல்

  ReplyDelete
 6. தெய்வமே கிசுகிசுக்களுக்கு விடை சொல்லுங்க தெய்வமே

  ReplyDelete
 7. கிசு கிசு கோபாலே ,
  இந்த கிசு கிசுக்ககவே நான் ஒரு வித்தியாசமான் பதிவை இட வேண்டுமே !?

  யார் அந்த தூங்குமூஞ்சி பதிவர்


  Lovingly,
  Lucky Limat
  ........: Browse Comics :.......

  ReplyDelete

Related Posts Widget for Blogs by LinkWithin