
நம்முடைய வலையுலக ரிபோர்ட்டர் கிசுகிசு கோபால் சமீப காலங்களில் வலையுலகில் நடந்து வரும் சுவையான தகவல்களை நம்முடைய வலைப் பூவில் பகிர்ந்து கொள்ள சம்மதித்து அவருடைய கைங்கர்யமான கிசு கிசு கார்னர்-1 & கிசு கிசு கார்னர்-2 வாசகர்களிடையே பெற்ற வரவேர்ப்பினால் இதோ அதன் அடுத்த கட்டம்: கிசு கிசு கார்னர்-3.
(1) கனவுகளை காண்பதையே முழு நேரத் தொழிலாக்கி கொண்ட அந்த "இளமை துள்ளும்" பதிவருக்கு (யூத்'ஆமாம்) கடந்த பத்து நாட்களாக ஒரு இனம் புரியாத பீலிங்க்ஸ்'ஆம். என்ன என்று விசாரித்தால் அவருடைய கணினி ஏதோ குளறுபடியால் பணி புரியவில்லையாம். அதனால் நண்பர்களின் வலைப்பூக்களில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தவித்தாலும், புத்தகங்களை படிப்பதற்கும், படங்களை பார்ப்பதற்கும் அவருக்கு நிறைய நேரம் கிடைத்ததால் அவர் ஒரு வகையில் சந்தோஷப்பட்டாராம்.
ஆனால், கொடுமையிலும் கொடுமை என்பதைப் போல அவர் ஒரு உலக மகா மொக்கை படத்தை பார்த்து விட்டு "விமோசனம்" தேடி அலைந்ததாக கேள்வி. அனேகமாக அந்த மொக்கை படம் ஒரு முழு நீளப்பதிவாக வந்தாலும் ஆச்சர்யப் படுவதற்க்கில்லை.
டிஸ்கி: இந்திய நேரப்படி இன்று இரவு பத்து மணி நாற்பத்தி ஐந்து மணியளவில் அவருடைய கணினி இணைப்பு சரியாகும் என்று நேமியாலஜி நிபுணர் வாஸ்த்து ரத்னா பாண்டி மடம் பங்கஜம் சாஸ்திரி அவர்கள் கூறி உள்ளார்.
(2) வழக்கமாக வேட்டையாடிக் கொண்டே விளையாடும் அந்த பதிவர், இன்னமும் சிக்கி - முக்கி காலத்திலேயே இருக்கிறார். அவரிடம் ஒரு மடிக் கணினி இருந்தாலும் கூட அவரால் கடந்த சில வாரங்களாக வலைப்பூக்களை மேய முடியவில்லையாம். அதாவது, அவரைப் பொறுத்த அளவில் பிரவுசிங் என்றால் அது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தானாம். குரோம், நெருப்பு நரி பற்றி எல்லாம் அவர் கேள்விப் பட்டதே இல்லையாம். தற்கால உலகில் கற்கால மனிதர்?
இது கூட பரவாயில்லை. கடந்த ஞாயிறு அன்று ஒலக காமிக்ஸ் ரசிகர் இந்த வேட்டைக்காரர் வசிக்கும் அந்த குக்கிராமத்துக்கு சென்றாராம். அவரை சந்திக்கலாம் என்று அவருடைய கைபேசியில் அழைத்தால் அவர் பேப்பர் வாங்க பெங்களூரு சென்றுக் கொண்டு இருப்பதாக தகவல் அளித்தாராம். இதற்க்கு தான் நகரத்தில் வசிக்க வேண்டும்: ஒரு நாள் பேப்பர் வர வில்லை என்றாலும் கூட நாமே அருகிலுள்ள கடைக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம். இப்படி சீருந்து மூலம் பெங்களூரு செல்ல வேண்டியது இல்லை.What a Pity, What a Pity?
டிஸ்கி: சரி, இப்போது தான் நமக்கு நேரம் இருக்கிறதே என்று வேட்டையாடிக் கொண்டே விளையாடும் அந்த பதிவர் ஏதாவது தமிழ் படம் போகலாம் என்று தியேட்டருக்கு போனாராம். ஏற்கனவே இவர் "சத்திய' சோதனையில் சிக்கியவர் என்பது குறிப்பிட தக்கது. அப்படை இருந்தும், வலிய சென்று "ரோதனை"யோடு மீண்டு வந்த இவரை என்னவென்று சொல்வது?
(3) கடந்த ஒரு வாரமாக தமிழ் நாட்டில் எந்த ஒரு கடையிலும் தின்பண்டங்களும் "இதர" பொருட்களும் கிடைக்கவில்லையாம். உலகமெங்கும் பரவி உள்ள ஒரு பயங்கரவாத இயக்கத்தின் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் தான் அதற்க்கு காரணமாம். அந்த தலைவரின் தொண்டர்கள் ஆகிய குண்டர்கள் ஊரெங்கும் தோரணம் கட்டி, ஒரு "தோரணை" ஆக இந்த பிறந்த நாளை கொண்டாடினார்களாம்.
பணப் புழக்கம் அதிக அளவில் இருந்ததால் ரிசர்வ் வங்கி கூட த்டுமாறியதாம். உள்ளூர் செலவாணி அதிகரித்ததே இதற்க்கு காரணமாம். இந்த போராட்டங்களில் ஒரு துக்க சம்பவமும் நடை பெற்றது.தனமானச் சிங்கம், புரட்சிப் புயல், தானைத் தலைவி "சைதை தமிழரசி" தாக்கப்பட்டார். அதனால் சில பல சூறையாடல்களும், வங்கிக் கொள்ளைகளும் இனிதே நடை பெற்றது.
டிஸ்கி: இந்த கொண்டாட்டங்களை கண்ட இயக்க சகோதரர்கள் தலைவருக்கு வாராவாரம் பிறந்த நாள் வரக் கூடாதா என்று அங்கலாய்க்கிறார்களாம்,
(4) தன்னுடைய பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடிய அந்த பயங்கரவாதிப் பதிவர், இன்னமும் தன்னிலைக்கு வர வில்லையாம். அவருடைய கைபேசி கடந்த இரண்டு மூன்று நாட்களாக சுவிட்ச் ஆப் செய்யப் பட்ட நிலையிலேயே உள்ளதாம். ஒரு வேலை, பிறந்த நாள் டிரீட் கேட்கும் ஒலக காமிக்ஸ் ரசிகரிடம் இருந்து தப்பிக்க அவர் செய்யும் உபாயமோ? ஏனென்றால் மற்றவர்கள் போன் செய்தால் இந்த பயங்கரவாதி பேசுகிறாராம். என்ன கொடுமை சார் இது?
டிஸ்கி: அந்த பயங்கரவாதி பதிவர் இன்றோ / நாளையோ ஒரு பதிவை இடப் போகிறார். யாரும் எதிர் பாராத ஒரு புதிய பதிவு அது.
(5) தமிழ் காமிக்ஸ் உலகின் முடி சூடிய மன்னர் தன்னுடைய ஐம்பதாவது பதிவை நாளை அன்று வலையேற்ற முடிவு செய்திருக்கிறாராம். இது அவருடைய ஸ்பெஷல் பதிவாம்.இந்த பதிவு முதல், அவருடைய வலைப் பூவில் பல மாற்றங்கள் செய்யவும் திட்டமிட்டு உள்ளாராம். ஏற்கனவே அவர் தன்னுடைய வலைப் பூவில் செய்த மாற்றங்களின் பிரதிபலிப்பை சில பல தளங்களில் காண முடிகிறது.
டிஸ்கி: வரலாறு காணாத ஒரு மாபெரும் காமிக்ஸ் வலைப் பதிவர் சந்திப்பு ஒன்று அடுத்த மாதம் நடை பெற உள்ளது. அனைத்து காமிக்ஸ் வலைப் பதிவர்களையும் ஒரு சேர ஒரே இடத்தில் கொணரும் முயற்சி இது. இதற்கான முயற்சியை ஏற்கனவே ஆரம்பித்து விட்டார்களாம்.
(6) தமிழ் காமிக்ஸ் உலகின் சிறந்த விசிறி ஆகிய அந்த பெருந்தலைவர் திங்கட் கிழமை அன்றுதான் நீண்ட ஓய்வுக்கு பிறகு ஊர் திரும்பினாராம். அந்த விமானத்தின் மூலம் தான் சமீபத்தில் திருமணம் நிச்சயம் ஆன டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா'வும் பிரயாணித்தாராம். இப்போது சானியா டென்னிஸ் விளையாடுவதும் பெருந்தலைவர் வசிக்கும் ஊரில் தானாம்.
டிஸ்கி: நீண்ட நாள் கழித்து சானியா ஒரு டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் மூன்றாம் சுற்றுக்கு சென்று உள்ளார்.
இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.
கிசுகிசு கோபால்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே.
-- சிறப்பான கிசு கிசு'க்களுக்கு நன்றி கோபால்.
பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.
என்னது? “சைதை தமிழரசி” தாக்கப்படாரா?
ReplyDeleteஇதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை!
தலைவர்,
அ.கொ.தீ.க.
தலைவரே,
ReplyDeleteஉங்கள் தொண்டர்களின் அடக்கு முறை மற்றும் வன்முறையும் தலை விரித்து ஆடுகிறது.
தமிழகமே தத்தளித்து போய் விட்டது கடந்த ஒரு வாரமாக.
என்னது, சைதை தமிழரசி தாக்கப் பட்டாரா?
ReplyDeleteஎன்ன கொடுமை சார் இது?
இந்த அநியாயத்தை தடவிக் கேட்க யாருமே இல்லையா?
அந்த நியாயப் படை எப்போது தான் வருமோ?
//(6) தமிழ் காமிக்ஸ் உலகின் சிறந்த விசிறி ஆகிய அந்த பெருந்தலைவர் திங்கட் கிழமை அன்றுதான் நீண்ட ஓய்வுக்கு பிறகு ஊர் திரும்பினாராம். அந்த விமானத்தின் மூலம் தான் சமீபத்தில் திருமணம் நிச்சயம் ஆன டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா'வும் பிரயாணித்தாராம். இப்போது சானியா டென்னிஸ் விளையாடுவதும் பெருந்தலைவர் வசிக்கும் ஊரில் தானாம்.
ReplyDeleteடிஸ்கி: நீண்ட நாள் கழித்து சானியா ஒரு டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் மூன்றாம் சுற்றுக்கு சென்று உள்ளார்.//
இந்த ரெண்டு மேட்டருக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா?
தலைவர்,
அ.கொ.தீ.க.
தலைவரே,
ReplyDeleteநீங்கள் அதிர்ச்சி அடைத்தது இருக்கட்டும். உங்களுக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் தேவை இல்லையா?
கிசுகிசு கோபால்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே
அய்யா கொடலாம்பட்டி ராமநாதன் (சேலத்திலிருந்து),
ReplyDeleteநீங்கள் அதிர்ச்சி அடைத்தது இருக்கட்டும். உங்களுக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் தேவை இல்லையா?
அது சரி, அதென்ன தடவிக் கேட்பது?
கிசுகிசு கோபால்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே
தலைவரே,
ReplyDeleteஉங்கள் கேள்விக்கு ஒரே ஒரு பதி தான் என்னிடம் உள்ளது: இது ஒரு நல்ல கேள்வி.
கிசுகிசு கோபால்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே
யோவ்,
ReplyDeleteநீங்கள் செய்வது உங்களுக்கே நன்றாக இருக்கிறதா? என்னுடைய காதல் கண்மணியை இப்படி எல்லாம் கேவலம் செய்ய துடிக்கிறீர்களே?
காத்தவ்,
புயல் அடிக்கும்போது பூ பறிப்பவன்.
வெள்ளத்தில் மீன் பிடிப்பவன்.
கோபால்,
ReplyDeleteஎன்னுடைய கண்மணி பூங்காவனத்தின் "பெயரையும்" ஏன் இப்போது கெடுக்கிறீர்கள்?
காத்தவ்,
புயல் அடிக்கும்போது பூ பறிப்பவன்.
வெள்ளத்தில் மீன் பிடிப்பவன்.
நண்பர்களே,
ReplyDeleteஎன்னுடைய வருங்கால மனைவி பற்றிய பதிவு என்பதால் இங்கு வந்து பார்க்கிறேன். இப்படியும் ஒரு கனெக்ஷனா? இதைப் பற்றி சானியா என்னிடம் ஒன்றுமே சொல்லவில்லையே?
சோரப் மிர்சா
அது சரி, யார் அந்த தமிழ் காமிக்ஸ் உலகின் சிறந்த விசிறி ஆகிய அந்த பெருந்தலைவர்? அவருடைய அட்ரெஸ் கிடைக்குமா?
ReplyDeleteசோரப் மிர்சா
நண்பர் சோரப் மிர்சா,
ReplyDeleteஎன்னுடைய மன நிலையை நீங்கள் புரிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
we are sailing in the same boat.
நாம் ஒரே படகில் பயணித்து கொண்டு இருக்கிறோம்.
Ham ek hi boat mein pirayaan kar rahe hain.
manam oke boat'lo pirayanam sesthu unnam.
காத்தவ்,
புயல் அடிக்கும்போது பூ பறிப்பவன்.
வெள்ளத்தில் மீன் பிடிப்பவன்.
நான் கூட அந்த விமானத்தில் தான் வந்தேன். ஆனால் சானியா மிர்சா என்னிடம் ஒன்றுமே பேச வில்லை.
ReplyDeleteயாரோ ஒரு இந்தியரிடம் தான் பயணம் ஆரம்பித்தது முதல் முடிவு வரை பேசிக் கொண்டே வந்தாள்.
எனக்கு உடம்பு பூராவும் மச்சம் என்று நண்பர்கள் கூறுவார்கள். ஆனால் இந்த விஷயத்தில் வர்க் அவுட் ஆக வில்லை.
டேய் ஜெய சூர்யா,
ReplyDeleteதாத்தா வயசுல உனக்கு இந்த ஆசை வேறயா?
போடா, போய் வேலைய பாரு.
யுவராஜ் சிங்.
//என்னது? “சைதை தமிழரசி” தாக்கப்படாரா?
ReplyDeleteஇதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை!
தலைவர்,
அ.கொ.தீ.க.//
என்னது, ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லையா?
what a shame.
ஆத்தா குரு.
தோழர்களே,
ReplyDeleteநான் நலமாகத் தான் இருக்கிறேன். வயகரா த்தாத்தவும், ஜுடோ ஜோசும் என்னை நன்றாக "வைத்துக்" கொண்டு இருக்கிறார்கள்.
சைதை தமிழரசி
தெய்வமே.., சிங்கிள் பீஸ் ஒன்னு இருக்கு.., நெல் வாங்கிட்டு வந்த சாக்குப்பை. அதத்தான சொல்றீங்க..,
ReplyDeleteபழனியிலிருந்து வந்த சிங்கமே,
ReplyDeleteநீங்கள் எங்கள் பூங்காவனத்தை பார்த்தது இல்லை என்று நினைக்கிறேன்.
கிசுகிசு கோபால்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே.
ஏம்பா, முக்கியமான விஷயத்த விட்டுட்டு மத்தத பத்தி எல்லாம் கமெண்ட் போடறீங்களே?
ReplyDeleteஎன்னது சானியா மிர்சாவுக்கு கல்யாணமா?
அய்யன்மீர்,
ReplyDeleteநான் இந்த வலைதத்திற்கு புதியவன். அதனால் எனக்கு யாராவது இந்த ஆத்தா குரு பற்றி விளக்கினாள் நலம்.
ஆத்தா குரு = எல்லாரும் பிறக்கும்போது அம்மா என்று தான் சொல்லுவார்கள், ஆனால் நான் மட்டும் சற்று வித்தியாசமாக ஆத்தா என்று சொன்னேன், அதில் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட்டு விட்டது.
ReplyDeleteஅதில் இருந்து நான் என்ன பேசினாலும் அதில் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் வந்து விடுகிறது.
ஏதோதோ பேசுறீங்களேப்பா! முதல் பாராவுக்கு பக்கத்துல நீலக் கலருல யாரோ நிற்கராங்களே - அவரை பார்த்தது போலவும் இருக்கு - பார்க்காதது போலவும் இருக்கு! அவர பத்தி ஒண்ணுமே சொல்லலயே...!
ReplyDeleteதூள் கெளப்புதே கிசுகிசு கார்னர்.. :-)
ReplyDeleteபுஷ்பவதி பூங்காவனம்,
ReplyDeleteஎனக்கு ஒரு சந்தேகம்: //எப்போதும் பத்தினி// இதற்க்கு என்ன அர்த்தம்?
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புஷ்பவதி பூங்காவனம்,
ReplyDeleteஎங்கள் தானைத் தலைவர் விஜய டி. ஆர் படம் சூப்பருங்கோ. அதற்க்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
//உள்ளூர் செலவாணி அதிகரித்ததே இதற்க்கு காரணமாம்.// இது எனக்கு புரிய வில்லை.
ReplyDeleteஅப்ப, மத்தது எல்லாம் புரிஞ்சுதா என்று கேட்க வேண்டாம்.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
பூங்காவனம் / கிசு கிசு கோபால்,
ReplyDeleteஇதோ கிசு கிசுக்கான விடைகள்:
(1) தூங்கு மூஞ்சி தஙகர்
(2) ஜுடோ போஸ் (பீர் ஹண்டர் என்று முதல் கிசுகிசுவில் வந்தார்)
(3) பயங்கரவாதி மற்றும் மருத்துவர் (ஊட்டி உதாவாக்கரை என்று முதல் கிசுகிசுவில் வந்தார்)
(4) கிரேட்டஸட் சுவர் ஜிமிக்ஸ் (முதல் கிசுகிசுவில் வந்தார்)
(5) கிங் கிஸ்மா (முதல் கிசுகிசுவில் வந்தார்)
(6) புத்து முசிறி (முதல் கிசுகிசுவில் வந்தார்)
சீக்கிரம் அந்த டூ பீஸ் போடோவை அனுப்புங்கள்.
காமிக்ஸ் பிரியன்.
இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
காமிக்ஸ் பிரியன்,
ReplyDeleteஎன்னுடைய பெயரை இப்படியா போடுவது?
இருந்தாலும் மற்ற பெயர்களையும் ரசித்தேன்.
அந்த பயங்கரவாதிகளின் தலைவரை பற்றிய விவரங்களை எனக்கு அனுப்பவும். உள்ளோர் செலவாணி பற்றி விசாரிக்க வேண்டும்.
ReplyDeleteப. சிதம்பரம்
//இந்திய நேரப்படி இன்று இரவு பத்து மணி நாற்பத்தி ஐந்து மணியளவில் அவருடைய கணினி இணைப்பு சரியாகும் என்று நேமியாலஜி நிபுணர் வாஸ்த்து ரத்னா பாண்டி மடம் பங்கஜம் சாஸ்திரி அவர்கள் கூறி உள்ளார்.//
ReplyDeleteஅந்த சாஸ்த்திரிக்கு கனவில் மெகான் ஃபாக்ஸ் டூ பீஸில் வரட்டும். இன்று இணைய இனைப்பு கிடைத்து விட்டது. இன்ப ஆச்சர்யம்.
//"இளமை துள்ளும்" பதிவருக்கு (யூத்'ஆமாம்)// ஏம்பா எதற்கு இப்படி டீஸ் பண்றீங்க.
//(1) தூங்கு மூஞ்சி தஙகர்// நல்லவேளையாக நண்பர் பச்சானை சேர்த்துவிடவில்லை என்பதால் தப்பித்தார்.
கிசு கிசு கோவாலு ஒரு நாள் என்கிட்ட மாட்டாமாலா போயிடுவீங்க.
டார்லிங் பூங்காவனம், உன்னை நான் இந்த கண்றாவி பீஸ்கள் எதுவும் இல்லாமல் பார்த்து ரசித்திருக்கிறேன். அந்த அனுபவமே தனி தான்.
//தானைத் தலைவி "சைதை தமிழரசி" தாக்கப்பட்டார். //
ReplyDeleteஇதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
இதனால் வலைப்பதிவுகள் ஒரு நாள் வலையடப்பு செய்ய வேண்டும் இல்லையேல் வலைக்கு தீங்குகள் விளைவிக்கப்படும்
அப்பறம் கிசு கிசு கார்னர் டக்கர்