Saturday, October 17, 2009

வேட்டைக்காரன் பட தாமத விவரமும் தீபாவளி ஸ்பெஷல் கிசு கிசு கார்னர்-5ம்

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ் காமிக்ஸ் பிளாக் வரலாற்றில் முதன் முறையாக காமிக்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து சொல்ல வந்து இருக்கும் சூப்பர் ஹீரோக்களை ஒரு முறை பார்த்து விடுங்கள். பதிவை படித்து முடித்த பின்னர் உங்களுக்கு இதனை படிக்கும் மனநிலை இல்லாமல் இருக்கலாம்.


நம்முடைய வலையுலக ரிபோர்ட்டர் கிசுகிசு கோபால் சமீப காலங்களில் தமிழ் காமிக்ஸ் வலையுலகில் நடந்து வரும் சுவையான தகவல்களை நம்முடைய வலைப் பூவில் பகிர்ந்து கொள்ள சம்மதித்து அவருடைய கைங்கர்யமான கிசு கிசு கார்னர்-1 , கிசு கிசு கார்னர்-2 , கிசு கிசு கார்னர்-3 மற்றும் கிசு கிசு கார்னர்-4 வாசகர்களிடையே பெற்ற வரவேற்பினால் இதோ அதன் அடுத்த கட்டம்: கிசு கிசு கார்னர்-5.

சமீபத்தில் திருமண பந்தத்தில் மூழ்கி இல்லற வாழ்வை இனிதே அனுபவித்து வரும் தென்னம்பாளயத்தார், இந்த தீபாவளியை தல தீபாவளியாக கொண்டாட இருப்பது தெரிந்த மருத்துவர் விஜய்'ன் தந்தையும் வருங்கால தமிழக கவர்னருமாகிய எஸ்.சந்திரசேகரா* (பின்னே, மருத்துவர் விஜய் வருங்கால முதல்வர் என்றால் அவரது தந்தை குறைந்த பட்சம் ஒரு தமிழக கவர்னர் ஆக கூட இருக்கக் கூடாதா என்ன? ) உடனடியாக தென்னம்பாளயத்தாரை தொடர்பு கொண்டு இந்த தீபாவளியை "இளைய தளபதி தீபாவளியாக" கொண்டாடும்படியாக கேட்டுக் கொண்டார்.

அதாவது, தல தீபாவளி என்றால் அது அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களை குறிக்கும். அதனால் அரசியல் கருத்துக்களை அஞ்சாமல் அள்ளி வீசும் தென்னம்பாளயத்தார் எங்கே தல தீபாவளி கொண்டாடி அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் புகழை பரப்பி விடுவாரோ என்று பயந்தே தல தீபாவளியாக கொண்டாடாமல் "இளைய தளபதி தீபாவளியாக" கொண்டாடும்படியாக கேட்டுக் கொண்டார்.

ஆனால், ஒபாமாவுக்கே உப்புமா கொடுக்க மறுத்த தென்னம்பாளயத்தார் மருத்துவர் சின்ன கொய்யா கேட்டுக் கொண்டதற்கு இணங்க பெரிய கொய்யா பேச்சுக்கா செவி சாய்ப்பார்? அதனால் அவர் வழக்கத்தை மாற்றாமல் இந்த தீபாவளியை தல தீபாவளியாக மட்டுமே கொண்டாடுகிறார். இதனால் மனம் நொந்த மருத்துவர் சின்ன கொய்யா விஜய் தன்னுடைய படமாகிய வேட்டைக்காரனை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யாமல் தள்ளிப் போட்டு விட்டார். இதற்க்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் (குடும்ப உத்தரவு - ஆதவன் ரிலீஸ், பாடல் மறுபடியும் ஷூட்டிங்) உண்மையான காரணம் தென்னம்பாளயத்தார் தல தீபாவளி கொண்டாடுவதுதானாம்.

மருத்துவர் விஜய் ரசிகர்கள் மனம் மகிழ இதோ அசல் படத்தின் போட்டோவும், அசலான அசல் படத்தின் போட்டோவும். தல ரசிகர்கள் மன்னிக்கவும்.

tyikiyukiuuyiy

இப்படியாக என்பது வருட தமிழ் சினிமா வரலாற்றில் தனி ஒரு மனிதரின் தல தீபாவளி ஒரு படத்தின் ரிலீஸ்'ஐயே தள்ளிப் போட்ட சம்பவம் முதன் முறையாம். அதனால், தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக நடந்த இந்த சம்பவத்தை உங்களுக்கு தீபாவளி ஸ்பெஷல் தகவலாக அளிப்பதில் பூங்காவனத்துக்கு பெருமை.

*வருங்கால தமிழக கவர்னருமாகிய எஸ்.சந்திரசேகரா* என்று இருப்பதை வருங்கால தமிழக கவர்னருமாகிய வருங்கால மருத்துவர் எஸ்.சந்திரசேகரா என்று வாசிக்கவும். ஏனென்றால், மருத்துவர் விஜய் அரசியலில் குதித்த உடனே அவரின் தந்தைக்கும் ஏதாவது ஒரு தனியார் பல்கலைக் கழகம் மருத்துவர் பட்டத்தை கொடுத்து தொலைப்பார்கள். அதனால் அவரை வருங்கால தமிழக கவர்னருமாகிய வருங்கால மருத்துவர் எஸ்.சந்திரசேகரா என்று கூறுவதில் தவறேதும் இல்லை தானே?

11 comments:

 1. iam 1st here to comment.

  very nice story behind the postponement of vijay's film. will be happy if the film is not at all released.

  ReplyDelete
 2. happy diwali to you & Your family/friends circle.

  ReplyDelete
 3. எஸ்.ஏ.சந்திரசேகரா என்று நினைவு..,

  ReplyDelete
 4. வி.டி.ஆர் என்னைக்குமே ஸ்டைல் மன்னன் தான்

  ReplyDelete
 5. கிசு கிசு கோபால் அவர்களே தன்பாட்டிற்கு இல்லற பூங்காவனத்தில் ரீங்காரமிடும் வண்டாக தேன் குடித்துக் கொண்டிருக்கும் தென்னம்பாளையத்தாரை இப்படி மாட்டி வைத்து விட்டீர்களே, நியாயமா. குமுதத்திற்கு பின் இனி நீங்கள்தான்.

  ReplyDelete
 6. அருமையான கான்சப்ட்.

  தென்னம்பாளயத்தார் கோபித்துக் கொள்ளாமல் இருந்தால் சரிதான்.

  அவரிடம் கேட்டு அந்த வேட்டைக்காரன் படம் எப்போது வரும் என்று தகவல் சொல்லவும்.

  ReplyDelete
 7. இந்த கார்டூன் படம் அருமை.

  ஆனால் அதன் லெப்ட் ஓரத்தில் இருப்பது யார் என்று தெரியவில்லை.

  ஒருவேளை அடுத்த இளைய தளபதியோ?

  ReplyDelete
 8. தென்னம்பாளயத்தாருக்கு தல தீபாவளி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. please add in tamilish.

  ReplyDelete
 10. காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், அரிசிப் பொங்கல், வீட்டுப் பொங்கல், ஹோட்டல் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. தமிழ் காமிக்ஸ் உலக வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய உளம் கனிந்த மனவமுவர்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ஒலக காமிக்ஸ் ரசிகன்,
  100% உண்மையான பதிவுகள்.
  காமிக்ஸ் வேட்டைக்காரன் - பாகம் இரண்டு
  தமிழ் காமிக்ஸ் உலகில் காணவே கிடைக்காத பல அரிய காமிக்ஸ் புத்தகங்களின் அருமையான அணிவகுப்பு. எண்பதுகளிலும் தொன்னுருகளிலும் வெளிவந்த சிறந்த தமிழ் காமிக்ஸ் கதைளின் விவரங்கள்.இரும்புக்கை மாயாவிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பற்றிய செய்திகள். பல அரிய புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு விருந்தாக உள்ளன.

  ReplyDelete

Related Posts Widget for Blogs by LinkWithin