
அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
சமீப நாட்களில் சென்னை மற்றும் சுற்றுபுரங்களில் எங்குமே ஒரு தமிழ் காமிக்ஸ் கூட வாங்கமுடிவதில்லை என்பது பலருக்கும் தெரியும். குறிப்பாக பெரும் வேட்டைக்காரர்கள் கூட ஓரிரு புத்தகங்களை கூட வாங்க முடிவதில்லை. ஆனால் சென்னையிலும் அதன் சுற்றுபுரங்களிலும் காமிக்ஸ்கள் கண்டிப்பாக கிடைக்கின்றன. அப்படி கிடைக்கும் காமிக்ஸ் புத்தகங்கள் எங்கு செல்கின்றன? அவற்றை வாங்குவது யார்? யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைப்பது யார்? என்று எழும் பல கேள்விகளுக்கு விடை அளிக்கவே இந்த காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1.
இன்ஸ்பெக்டர் இன்பராஜ் (பல குற்றங்களை அரிக்கேன் / லாந்தர் விளக்குகளை கொண்டு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்) அவர்களிடம் இந்த காமிக்ஸ் பதுக்கலை கண்டுபிடிக்குமாறு ஒரு அசைன்மென்ட் கொடுத்து இருந்தோம். அதன்படியே அவரும் மாறுவேடங்களில் எல்லாம் சென்று காமிக்ஸ் திருத்தலங்களில் எல்லாம் சென்று (அதாங்க, காமிக்ஸ் விற்கும் கடைகள்) பலநாட்கள் விசாரித்து ஒருவழியாக உண்மையை கண்டுபிடித்தார்.
என்ன அநியாயம் சார் இது? வேறு ஊரை சேர்ந்த யாரோ ஒருவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு வந்து சென்னையில் கிடைக்கும் பல நூறு அரிய காமிக்ஸ் புத்தகங்களை கொள்ளையடித்து, அதனை பதுக்கி செல்கின்றனர். ஆனால் சென்னையில் இருக்கும் பல காமிக்ஸ் ரசிகர்கள் தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை, தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்று அவதிப்படுகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு வழியே இல்லையா?
புத்தகங்களை பதுக்கும் அந்த நபர் யார் என்பதை நேரிடையாக சொல்ல இயலாவிட்டாலும் கூட அவரை பற்றிய சிறிய தகவல் ஒன்றினை அளிக்கிறேன், முடிந்தால் கண்டுபிடித்து கொள்ளவும். அந்த காமிக்ஸ் பதுக்கல் பேர்வழி கோவில் மாநகரை சேர்ந்தவர். சென்னைக்கு மாதம் ஒரு முறையாவது வருபவர்.
அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க வெகு விரைவில் காமிக்ஸ் கிசுகிசுவுடன் திரும்பி வருகிறேன்.
வேறு ஊரை சேர்ந்த யாரோ ஒருவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு வந்து சென்னையில் கிடைக்கும் பல நூறு அரிய காமிக்ஸ் புத்தகங்களை கொள்ளையடித்து, அதனை பதுக்கி செல்கின்றனர். ஆனால் சென்னையில் இருக்கும் பல காமிக்ஸ் ரசிகர்கள் தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை, தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்று அவதிப்படுகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு வழியே இல்லையா?
ReplyDeleteபுஷ்பவதி பூங்காவனத்தின் புதையல்கள்
இன்ஸ்பெக்டர் இன்பராஜின் விசாரணை - காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1
காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1
யார் என்று சொல்லுங்கள்...
ReplyDeleteகுற்றம் நடந்தது என்ன? OK.
ReplyDeleteசரி, செய்தது யாரென்று சொல்லவேண்டாம? அதற்கொரு தனி பதிவா என்ன?
This comment has been removed by the author.
ReplyDeleteமேடம் பூங்கா!
ReplyDeleteசமீப காலமாக ஒரு கேபிள் டிவி சானலின் நேரலை நிகழ்ச்சியில் சித்தராஜசாமி ஒருவர் நேயர்கள் போன்
செய்தாலே அவர்கள் வீட்டில் வைக்கப்பட்டுள்ள புளிக்கொழம்பு புளிப்பாக இருக்கும் என்பது முதல் வட்டிக்கு கடன் வாங்கியவருக்கு பணத்தட்டுபாடு வரும் என்பது வரை அனைத்து விவரங்களையும் அள்ளி வீசுகிறார். சானல் மாற்றும் நேரத்த்தில் அவருடைய அரிய தரிசனம் கண்ட நானும் இன்னும் பிற நண்பர்களும் தற்போது மானசீக சீடர்களாக மாறிவிட்டிருக்கிறோம்.
எங்களுடைய குருஜி அவர்களின் ஆசிர்வாதத்தாலும் அம்மணி நீங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களை கொண்டும் காமிக்ஸ்களை கடத்தும் அந்த கருப்பாடு யார் என்பதை பற்றி சில பல தரவுகளை கீழே தந்துள்ளேன். கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்!
1. பைக்கு அருகில் கோலம் உள்ளது எனவே அவர் ஒரு இந்துவாக இருக்க வேண்டும்.
2. டி சர்ட் பையில் உள்ளதால் அவர் ஒரு ஆடை அணியும் பழக்கம் உள்ளவராக இருக்க வேண்டும்.
3. பையில் முகப்பவுடர் டப்பா உள்ளதால் அவர் ஒரு பெண்ணாகவோ ஆணாகவோ இருக்க வேண்டும்.
4. பைக்கு அருகில் சூரிய வெளிச்சம் உள்ளது. எனவே இந்த கடத்தல்கள் பகலில் தான் நடந்திருக்க
வேண்டும்.
5. பையின் நிறம் கருப்பாக இருப்பதால் அவர் கருப்பாகவோ அல்லது சிவப்பாகவோ அல்லது இடைப்பட்ட நிறம் கொண்டவராகவோ இருக்கலாம்.
6. அவர் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து போவதால் நிச்சயமாக அவர் தமிழ்நாட்டில் தான் வசிக்க வேண்டும். இல்லையெனி இந்தியாவில் வசிப்பராக இருக்கலாம்.
மேற்படி விவரங்களை கொண்டு சாமானியன் கூட அந்த கடத்தல் முதலையை கண்டறிய முடியும் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி!
February
super mama!!
Deleteலக்கி லிமட்,
ReplyDeleteபொதுவில் அவர் யார் என்று சொல்ல இயலாது.
விஸ்வா,
ReplyDeleteஇன்னுமொரு தொடர் பதிவும் உள்ளது. இதற்கே பயந்தால் எப்படி?
அய்யம்பாளையம் சார்,
ReplyDeleteஉங்களின் குருஜி வாழ்க.
ha ha ha very funny.
ReplyDeletewant to know who is this?
:)
the clue's given are excellent.
ReplyDeletethanks sir.
நண்பர்களே,
ReplyDeleteபுதிதாக ஒரு பதிவு இட்டு உள்ளேன். வந்து உங்கள் மேலான கருத்துக்களை பதிக்கவும்.
நன்றி.
I am one of the comic collector from madurai, some comic collectors from chennai get weekly visited to madurai old books stalls and get kilos of comics, transfered through bags and vans?
ReplyDeletewho can stop this smuggling,
By
Madurai comics sangam
I am one of the comic collector from morocco, some comic collectors from madurai get weekly visited to morocco old books stalls and get kilos of comics, transfered through bags and vans?
ReplyDeletewho can stop this smuggling,
By
morocco comics sangam
பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteஇந்திய திருநாட்டில் ஆண்மகன்களே இல்லாத மாதிரி இந்த சானிய மெரிச்ச பொண்ணு பாகிஸ்தானி மொக்கைய கல்யாணம் பண்ணிக்கிச்சாமே?
ReplyDeleteNice post...
ReplyDeletehttp://chinathambi.blogspot.com
palaya comics vera edavdu irunda pls anupunga sir
ReplyDelete