Wednesday, June 9, 2010

கிசு கிசு கார்னர் 8: பிறந்த நாள் கொண்டாட்டங்களும், சைதை தமிழரசியும்


அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
 
நம்முடைய வலையுலக ரிபோர்ட்டர் கிசுகிசு கோபால் சமீப காலங்களில் தமிழ் காமிக்ஸ் வலையுலகில் நடந்து வரும் சுவையான தகவல்களை நம்முடைய வலைப் பூவில் பகிர்ந்து கொள்ள சம்மதித்து அவருடைய கைங்கர்யமான கிசுகிசு கார்னர்-1 , கிசுகிசு கார்னர்-2 , கிசுகிசு கார்னர்-3, கிசுகிசு கார்னர்-4, கிசுகிசு கார்னர்-5, கிசுகிசு கார்னர்-6 மற்றும் கிசு கிசு கார்னர் 7.வாசகர்களிடையே பெற்ற வரவேற்பினால் இதோ அதன் அடுத்த கட்டம்: கிசு கிசு கார்னர் 8. Game On.
 
(1). தமிழ் காமிக்ஸ் வலையுலக பீஷ்ம பிதாமகர் ஆகிய அந்த ரேலிஃபேன் பதிவர் தமிழ் காமிக்ஸ் உலகிற்கு ஒரு மகத்தான சேவை செய்யும் எண்ணத்தோடு ஒரு காரியத்தினை ஆரம்பித்துள்ளார். அது முடியும்போது தமிழ் காமிக்ஸ் உலக்கில் வந்த அனைத்துக் காமிக்ஸ் கதைகளையும் இணைக்கும் பாலமாக அந்த முயற்சி அமையுமாம். அவருக்கு பூங்காவனம் மற்றும் ஏஜென்ட் காத்தவ் சார்பில் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டை மொத்தமாக வாங்கவும் அவருக்கு ஒரு முயற்சி பிளஸ் ஆசை உள்ளது. அது அரசியல் மூலமாகவோ ஆள்பலம் மூலமாகவோ இல்லாமல் சாத்வீக முறையில் நடைபெறுமாம்.
 
(2). நம்முடனே பல பதிவுகளின் மூலம் தம்முடைய கருத்துக்களை அளித்த, சமீபத்தில் திருமண பந்தத்தில் மூழ்கி இல்லற வாழ்வை இனிதே அனுபவித்து வரும் தென்னம்பாளயத்தார் அரசியலில் தொபுக்கடீர் என்று குதித்தது நாம் அனைவரும் அறிந்ததே. நம்முடைய இணையபூவில் தான் அந்த தகவல் முதலில் வந்ததை மக்கள் மறக்க மாட்டார்கள். ஆனால், அதற்க்கு பிறகு நடந்த சம்பவங்களை யாரும் கூர்ந்து கவனிக்கவில்லை போலும். ஆம், தென்னம்பாளயத்தார் அரசியலில் குதித்தவுடன் பல நாட்களாக காத்திருந்த நடிகை குஷ்பூவும் கூட அரசியலில் தொபுக்கடீர் என்று குதித்து விட்டார்கள். பல வருடங்களாக காத்திருந்த நடிகை திடீர் என்று குதித்ததின் பின்னணி இதுதானாம். கடவுளே, கடவுளே. 1 + 1 = 2, OK?
 
Kushboo
(3) கடந்த ஒரு வாரமாக தமிழ் நாட்டில் எந்த ஒரு கடையிலும் தின்பண்டங்களும் "இதர" பொருட்களும் கிடைக்கவில்லையாம்.கடந்த வாரம் கலைஞருக்கும், இந்த வாரம் உலகமெங்கும் பரவி உள்ள ஒரு பயங்கரவாத இயக்கத்தின் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஆகிய இரண்டும் தான் அதற்க்கு காரணமாம். அந்த பயங்கரவாதியின் தொண்டர்கள் ஆகிய குண்டர்கள் ஊரெங்கும் தோரணம் கட்டி, ஒரு சிங்கம் படம் ஓடும் தியேட்டருக்கு சென்று கலாட்டா செய்து இந்த பிறந்த நாளை கொண்டாடினார்களாம். (ஏன் சிங்கம் தியேட்டருக்கு என்றா கேட்கிறீர்கள்? அது ஒரு தனி கதை - ஒரிஜினல் சிங்கம் எங்க பயங்கரவாதி தான் - அதனால படத்துல கிராபிக்ஸ் காட்சியில் சூர்யாவின் முகம் மாறும்போது சிங்கம் காண்பிப்பதற்கு பதிலாக இவரின் முகத்தை காட்ட வேண்டி செய்த கலாட்டாவே அது).
 
பணப் புழக்கம் அதிக அளவில் இருந்ததால் ரிசர்வ் வங்கி கூட தடுமாறியதாம். உள்ளூர் செலவாணி அதிகரித்ததே இதற்க்கு காரணமாம். இந்த போராட்டங்களில் ஒரு துக்க சம்பவமும் நடை பெற்றது.தனமானச் சிங்கம், புரட்சிப் புயல், தானைத் தலைவி "சைதை தமிழரசி" தாக்கப்பட்டார். அதனால் சில பல சூறையாடல்களும், வங்கிக் கொள்ளைகளும் இனிதே நடை பெற்றது.
 
banupriya
டிஸ்கி: இந்த கொண்டாட்டங்களை கண்ட இயக்க சகோதரர்கள் தலைவருக்கு வாராவாரம் பிறந்த நாள் வரக் கூடாதா என்று அங்கலாய்க்கிறார்களாம்.
 
(4) தன்னுடைய பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடி வரும் அந்த மிதவாதி பதிவர், இன்னமும் தன்னிலைக்கு வர வில்லையாம்.அவருடைய கைபேசி கடந்த இரண்டு மூன்று நாட்களாக சுவிட்ச் ஆப் செய்யப் பட்ட நிலையிலேயே உள்ளதாம். ஒரு வேலை, பிறந்த நாள் டிரீட் கேட்கும் ஒலக காமிக்ஸ் ரசிகரிடம் இருந்து தப்பிக்க அவர் செய்யும் உபாயமோ? ஏனென்றால் மற்றவர்கள் போன் செய்தால் பேசுகிறாராம். என்ன கொடுமை சார் இது?
 
meenakshi01
(5). அரசியல் கருத்துக்களை அஞ்சாமல் அள்ளிவீசும் தென்னம்பாளயத்தார் அவர்கள் சமீப நாட்களில் எந்தவிதமான பதிவுகளும் இடுவதில்லை என்பது தெரிந்ததே. நல்ல நல்ல பதிவுகளில் சென்று அவர் கருதுக்கனைகளை அள்ளி வீசுவார். ஆனால் கடந்த ஓரிரு மாதங்களாக அதுவும் இல்லை. அரசியலில் பிசியாக இருப்பார் என்று பார்த்தால் அதுவும் இல்லையாம். இந்த படத்தில் இருக்கும் நடிகைக்கும் தென்னம்பாளயத்தார் அவர்கள் கமென்ட் கூட இடாமல் இருப்பதற்கும் சம்பந்தம் உண்டு என்று நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவிக்கிறார்கள். என்ன கொடுமை சார் இது?
 
2010-logo
(6) தமிழ் காமிக்ஸ் வலையுலகின் “முடி”சூடா மன்னன் ஆக திகழும் அந்த பதிவர் சமீப காலமாக உலகெங்கிலும் உள்ள பல நகரங்களில் பயணம் மேற்கொண்டாலும், இந்த வாரம் துவங்க உள்ள உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கு சென்று ஷகிராவுடன் கெட்ட ஆட்டம் போட உள்ளாராம். கூடவே வேறொரு பதிவருக்கும் டிக்கெட் வேறு உள்ளதாம். யார் அந்த மற்றொரு பதிவர்?
 

இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்திடம் இருந்து ஒரு பெர்சனல் மின் அஞ்சல் வரும்.


கிசுகிசு கோபால். 
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே.


சிறப்பான கிசு கிசு'க்களுக்கு நன்றி கோபால்.
பூங்காவனம், 
எப்போதும் பத்தினி.

18 comments:

 1. வந்துட்டோம்ல, மீ த பர்ஸ்ட்.


  ஏன் இந்த தடவை இவ்வளவு படங்கள்? கலர்புல் பதிவோ?

  ReplyDelete
 2. haiya me the 2nd

  எங்க பாத்தாலும் இந்த விஸ்வா அண்ணன்

  Me the 1st

  அப்புடின்னு இருக்கார்
  என்னத்த சொல்ல ஹ்ம்ம் ?

  ReplyDelete
 3. என்னாது, விஸ்வா அண்ணனா?

  இதனை வன்மையாக கண்டித்து உடனடியாக லட்டு சாப்பிடும் போராட்டத்தில் இறங்குகிறேன்.

  ReplyDelete
 4. வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

  ReplyDelete
 5. // என்னாது, விஸ்வா அண்ணனா?

  இதனை வன்மையாக கண்டித்து உடனடியாக லட்டு சாப்பிடும் போராட்டத்தில் இறங்குகிறேன். //

  திருப்பதி சென்று வந்ததின் தாக்கம் இன்னமும் தீரவில்லை போலிருக்கிறதே

  நடத்துங்கள்

  நடத்துங்கள்

  ReplyDelete
 6. தலைவருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. தினத்தந்தி போல கவர்சிப்படங்களை எல்லாம் போட்டு அசத்தி விட்டீர்கள். வழக்கம் போல அருமை.

  ReplyDelete
 8. குஷ்பூ அரசியலில் குதித்ததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கிறதா என்ன?

  ReplyDelete
 9. //இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்திடம் இருந்து ஒரு பெர்சனல் மின் அஞ்சல் வரும்.//

  சார்,

  உண்மையை சொல்லுங்க, இதுவரைக்கும் யாருக்காவது அப்படி ஒரு அஞ்சல் வந்திருக்கா என்ன?

  ReplyDelete
 10. From The Desk Of Rebel Ravi:

  very funny.

  Rebel Ravi,
  Change is the Only constant thing in this world.

  ReplyDelete
 11. நண்பரே,

  வலையுலகிற்கு புதியவனான என்னுடைய ஜேம்ஸ் பாண்ட் குறித்த புதிய வலைத்தளம், தமிழில் - உங்கள் ஆதரவை நாடி.

  http://007intamil.blogspot.com/2010/06/x.html

  ReplyDelete
 12. 3வது படம் வண்ணத்திரை நடு பக்கம் போல் உள்ளது.

  ReplyDelete
 13. சார்,

  //இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் காமிக்ஸ் வலைதளங்கள் அனைத்திலும் புத்துணர்ச்சி ஏற்படுத்தி உள்ளது கண்கூடாக தெரிகிறது - என்று சிவ்வும் மற்றவர்களும் சொல்வதை நான் வழிமொழிகிறேன். வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.//

  என்று முத்து விசிறி அவர்கள் கூறியது உண்மைதான், நான்கூட பதிவொன்றை இட்டுள்ளேன்.

  உங்கள் கருத்தை சொல்லவும்:வெள்ளித்திரையில் மீண்டு(ம்) வருகிறார் ஜேம்ஸ் பாண்ட் 007

  ReplyDelete
 14. புதிய பொலிவுடன், புதிய பகுதிகளுடன் - காமிக்ஸ் காதலனின் பொக்கிஷப் புதையல்


  இனி, ஒவ்வொரு வெள்ளியும் - உங்கள் பேவரிட் இணையதளத்தில். படிக்க தவறாதீர்கள்.

  ReplyDelete
 15. தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://tamilblogs.corank.com/

  ReplyDelete
 16. உங்களுக்கும் மற்றும்

  அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))
  .

  ReplyDelete
 17. அன்புள்ள அருமை நண்பர் அவர்களே!!! மீண்டும் ரத்னா காமிக்ஸ், ரத்ன பாலா வெளியிடப்பட்டால், ஆதரிப்பீர்களா? என்று அதன் முன்னாள் அதிபர் எஸ்.ஜெயசங்கர் கேட்க்கிறார்!! தங்களின் பதில் என்ன? என்பதை கீழ்க்கண்ட முகவரியில் பதிவு செய்யவும்

  http://hajatalks.blogspot.com/2010/12/rathna-comics-written-by-haja-ismail.html#comments

  பயங்கரவாதி டாக்டர் செவன் said...

  மக்களே,

  பதிவை இண்ட்லியில் இனைத்துள்ளேன்! உங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற கீழ்காணும் சுட்டியில் சென்று குத்தோ குத்தென்று குத்தவும்!

  http://ta.indli.com/seithigal/ரத்னா-காமிக்ஸ்-ஒரு-வரலாறு

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  December 24, 2010 2:11 AM

  ReplyDelete
 18. காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இதுநாள் வரையில் எங்கேயும் கமென்ட் போட்டதே கிடையாது. அதற்க்கான நேரம் கிடையாது. இன்றுதான் வாய்ப்பு அமைந்தது. ஆகையால் இதுநாள் வரையில் உங்களின் அறிய சேவைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

  முஸ்தபா, எண்ணூர்.

  ReplyDelete

Related Posts Widget for Blogs by LinkWithin