
அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நெடு நாட்களாக பதிவிடாமல் இருந்தமைக்கு மன்னிக்கவும். சீக்ரெட் ஏஜென்ட் காத்தவ் தொடர்ந்து பல வேலைகளை எனக்கு கொடுத்ததால் என்னால் பதிவுலகம் பக்கமே வர இயலவில்லை (காத்தவ் டியர், கொஞ்சம் சும்மா இருங்களேன், இன்றைக்கு நம்ம கிங் விஸ்வாவின் பிறந்த நாள். அதனை சிறப்பிக்கும் வகையில் இன்றாவது ஒரு பதிவு இடுகிறேன்? பிளீஸ்...அதெல்லாம் பதிவுக்கு பிறகு) இதனை "அதெல்லாம் கல்யாணத்துக்கு பிறகு" என்று எண்பதுகளின் ஹீரோயின் கூறும் ஸ்டைலில் படியுங்கள் – எடிட்டர்.
நம்முடைய வலையுலக ரிபோர்ட்டர் கிசுகிசு கோபால் சமீப காலங்களில் தமிழ் காமிக்ஸ் வலையுலகில் நடந்து வரும் சுவையான தகவல்களை கிசு கிசு வடிவில் அளித்து வந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரும் பல கிசு கிசுக்களை ரெடியாக வைத்திருக்கிறார். அந்த கிசு கிசுக்களை பதிவிடலாமா வேண்டாமா என்று கருத்து தெரிவியுங்கள். பின்னர் விரைவில் காமிக்ஸ் உலக கிசு கிசுக்களை இங்கே பார்க்கலாம் (இங்கே என்றால் இந்த வலை ரோஜாவில், நான்சென்ஸ்).
ஐந்து வருடங்களுக்கு முன்பு ஹிந்தியில் ஷா ருக் கான் நடித்து டான் படம் ரீமேக் செய்யப்பட்டபோது அதனை விளம்பரப்படுத்தும் வகையில் அந்த படத்தின் முழு கதையும் காமிக்ஸ் வடிவில் படக்கதையாக வெளியிடப்பட்டது, படத்தின் போட்டோக்களுடன் (Photo Comics). முழு வண்ணத்தில் 120 பக்கங்களுடன் வந்த அந்த காமிக்ஸ் புத்தகம் ஒரு மாபெரும் வெற்றி பெற்றது. அதனைப்போலவே தமிழிலும் ஒரு படத்தின் காமிக்ஸ் கதையை புத்தகமாக வெளியிடுவதே குறிக்கோளாக இயக்குனர் மிஷ்கின் கொண்டுள்ளார். அந்த வகையில் சென்ற மாதம் நக்கீரன் பதிப்பகம் வெளியிட்ட சினிக்கூத்து புத்தகம் இளைய தளபதி விஜய் நடிக்கும் (சரி, சரி, கூல் டவுன்) வேலாயுதம் படத்தின் படக்கதையை ஒரு தனி புத்தகமாக வெளியிட்டார்கள். அந்த புத்தகமே இந்த பதிவின் அச்சாணி.
பதினைந்து ருபாய் விலையுள்ள அந்த புத்தகத்தை கஷ்டப்பட்டு வாங்கினேன் (பின்னே, சூடான விற்பனை அல்லவா, அதாங்க ஹாட் சேல்ஸ்). அந்த அற்புத, வரலாற்று சிறப்பு மிக்க பக்கங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன், அதன் விளைவே இந்த பதிவு. அட்டைப்படத்தையும், முதல் பக்கத்தையும் பார்த்தது ரசியுங்கள் (சுறா ரசிகர் மன்ற விசிலடிச்சான் குஞ்சுகள் முதல் பக்கத்தில் இருந்க்கும் அந்த பன்ச் டையலாக்கை படித்து விட்டு தங்கள் அலுவலகத்தில் விசிலடித்து மற்றவர்களை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம், குறிப்பாக பிரான்ஸ் கிளை).
சினிக்கூத்து மார்ச் மாத ஸ்பெஷல் இதழ் - வேலாயுதம் படக்கதை - அட்டைப்படம் | சினிக்கூத்து மார்ச் மாத ஸ்பெஷல் இதழ் - வேலாயுதம் படக்கதை - முதல் பக்கம் |
நெடு நாள் வாசகர்கள் இந்த பன்ச் டையலாக்கை படித்து விட்டு நம்முடைய தளத்தில் ரெகுலராக கமென்ட் இடும் ஆத்தா குருவை நினைக்காமல் இருந்தால் சரி. லேட்டாக வந்தவர்களுக்கு ஆத்தா குரு பற்றிய சிறு பின் குறிப்பு: எல்லாரும் பிறக்கும்போது அம்மா என்று தான் சொல்லுவார்கள், ஆனால் ஆத்தா குரு மட்டும் சற்று வித்தியாசமாக ஆத்தா என்று கூறினான், அதில் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட்டு விட்டது. அதில் இருந்து ஆத்தா குரு என்ன பேசினாலும் அதில் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் வந்து விடுகிறது.
சரி, சரி. ரொம்ப மொக்கை போடாமல் விஷயத்திற்கு வருவோம். இதோ நான் மிகவும் கஷ்டப்பட்டு ஸ்கான் செய்த அந்த வேலாயுதம் படக்கதை பக்கங்கள்:
சினிக்கூத்து மார்ச் மாத ஸ்பெஷல் இதழ் - வேலாயுதம் படக்கதை – ஆ….ரம்பம் - முதல் பக்கம் |
நன்றாக பாருங்கள், அவர்களே வெளியிட்டுள்ளார்கள் படக்கதை என்று. இந்த ஆரம்பம் என்ற வார்த்தையில் இடையில் கொஞ்சம் கேப் (ஆ……..ரம்பம்) வந்தது நம்முடைய தவறு அல்ல. ஒக்கே, லெட்ஸ் கோ டு தி படக்கதை.
சினிக்கூத்து ஸ்பெஷல் இதழ் - வேலாயுதம் படக்கதை – ஆ….ரம்பம் - 2ம் பக்கம் | சினிக்கூத்து ஸ்பெஷல் இதழ் - வேலாயுதம் படக்கதை – ஆ….ரம்பம் - 3ம் பக்கம் |
என்னங்க, வேலாயுதம் படக்கதையை படித்து விட்டீர்களா? என்னாது என் மேலே கொலை வெறியில் இருக்கிறீர்களா? ஹலோ, அப்போ கொஞ்சம் என்னோட நிலையையும் யோசித்து பாருங்க மக்கள்ஸ். நீங்களாவது சும்மா இணைய தளத்தில் வந்து பார்த்து விட்டு கடுப்பாகி கொலை வெறி கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் நானோ பதினைந்து ருபாய் கொடுத்து இந்த புக்கை வேறு வாங்கி தொலைத்தேன். வெட்டியாக அதை பிரித்து பார்த்து கடுப்பாகிவிட்டேன். இப்போ சொல்லுங்கள், நான் பட்ட கஷ்டம் எப்படி பட்டது என்று.
இந்த பதிவை ஏப்ரல் மாதம் முதலாம் தேதியில் தான் வெளியிட இருந்தேன். ஆனால் திடீரென்று நம்ம கிங் விஸ்வாவின் நினைவு வந்தது. இன்று அவரது பிறந்த நாள் என்பதால் இதோ அவருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பிளஸ் இந்த பதிவை அவருக்கு டெடிகேட் செய்கிறேன்.
பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.
கிங் விஸ்வாவுக்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteதலைவர்,
அ.கொ.தீ.க.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு, சித்திரைத் திருநாள், அம்பேத்கார் தின, விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteதலைவர்,
அ.கொ.தீ.க.
மக்கள்ஸ்,
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அதே சமயம் அனைவருக்கும் இனிய காமிக்ஸ் மறுமலர்ச்சி தின நல்வாழ்த்துக்கள்.
அதாவது கிங் விஸ்வாவிற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
பை தி வே, மீ தி அஞ்சாவது.
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிஸ்வாவிற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
நானும் ஒரு காமிக்ஸ் பதிவை இடுகிறேன். இன்றே.
பூங்காவனம் அம்மையாரே, இப்படி ஒரு மொக்கை தேவையா?
ReplyDeleteநல்ல நாளில் கூட டாகுடர் விஜய் அவர்களை பார்க்காமல் இருக்கமுடியாதா?
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். கிங் விஸ்வாவிற்கு .... வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவழக்கம் போல விஸ்வாவின் பிறந்த நாளுக்கு ஒரு பதிவை நான் யோசித்து (?) கொண்டிருக்கும் வேளையில் பூங்காவனம் முந்தி கொண்டது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சினி கூத்து அடித்த படக்கதை கூத்து வெறுப்பேற்ற வில்லை. வெறியேற்றியது (!) தமிழர்கள் சோற்றடைத்த பிண்டமாய் இருக்கும் வரை இது போன்ற பிழைப்புநிலை சுரண்டல்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். (அப்பாடி... கருத்தை சொல்லியாச்சு!)
தமிழ் காமிக்ஸ் உலக மாமன்னர் "விஸ்வா" அவர்களுக்கு, என் இனிய பிறந்த நாள் நல வாழ்த்துகள், தமிழ் பேசும் நல உலகிற்கு "இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteவேலாயுதம் படக்கதை என்றதும் நம்ம காமிக்ஸ் வடிவில் புத்தகமாக இருக்கும் என்று எண்ணி ஏமாந்து விட்டேன் சரி நல்லது பதிவுக்கு நன்றி
அன்புடன்
ஹாஜா இஸ்மாயில்.
இது சிவகாசி படத்தோட ரீமேக், மிக்ஸ் மாதிரியில்ல இருக்கு
ReplyDeleteகிங் விஸ்வாவிற்கு ஏற்ற பிறந்த நாள் பரிசுதான்
ReplyDeleteகாமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் (சற்றே தாமதமான) தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிஸ்வாவிற்கு (சற்றே தாமதமான) பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
வாண்டுமாமா அவர்களுக்கு (சற்றே முன்கூட்டிய) பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
நீண்ட நாளைக்கு பிறகு ஒரே நாளில் இரண்டிற்கும் மேற்பட்ட பதிவுகளை ஒருங்கே காண்பதில் மகிழ்ச்சி.
கிங் விஸ்வா அவர்களுக்கு எனது தாமதமான எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! ;-)
ReplyDelete.