Friday, April 22, 2011

இரத்தப்படலம் - சிறப்பு செய்திகள்

இரத்தப்படலம் - சிறப்பு செய்திகள் 

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நேற்று திரு வாண்டுமாமா அவர்களுக்கு பிறந்த நாள். அவருக்கு தாமதமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். இன்று ஓர் அவசர வேலையில் (அட, காத்தவ் உடன் இல்லைங்கோவ்) இருப்பதால் இரண்டே இரண்டு செய்திகளை மட்டுமே வெளியிட இந்த சிறப்பு செய்தி பதிவு. செய்திகள் இரண்டுமே இரத்தப்படலம் இதழுடன் சம்பந்தப்பட்டு இருப்பதால் தலைப்பு இரத்தப்படலம் - சிறப்பு செய்திகள் என்று இருக்கிறது. செய்திகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே பார்ப்போமா?

இரத்தப்படலம் சிறப்பு செய்தி 1: இரத்தப்படலம் புத்தகம் - ஆன்லைனில் வாங்க:

bloodpadalamபல அன்பர்கள் இன்றைக்கும் இரத்தப்படலம் இடழ் எங்கே கிடைக்கும் என்று கேட்டுக்கொனே இருக்கிறார்கள். ஆன்லைனில் கிடைக்குமா? சென்னையில் கிடைக்குமா? திண்டிவனம் பக்கத்துல கிடைக்குமா? என்றெல்லாம் பல கேள்விகள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லும் தகவலே இந்த பதிவின் முதல் செய்தி: நீங்கள் இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் இதழை ஆன்லைனில் உடுமலை.காம் தளத்தில் வாங்கலாம். அதற்க்கான லிங்க் இதோ:

   http://udumalai.com/?prd=Raththa%20padalam&page=products&id=9013

இங்கே நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் இரண்டு.

ஒன்று: விலை இருநூறு ருபாய் மட்டுமே. ஐநூறோ, நானூறோ இல்லை. இவர்கள் கலைசேவை செய்கிறார்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளவும் இல்லை. தட்ஸ் ஆல்.

இரண்டு: நீங்கள் ஆர்டர் செய்த மூன்று வேலை நாட்களிலேயே உங்கள் விலாசம் தேடி இந்த புத்தகம் வந்துவிடும்.

ஆர்டர் செய்வது எப்படி ?

1)   புத்தகங்களை எப்படி வாங்குவது
மிகச்சுலபம். முதலில் நமது தளத்தில் பயனர் கணக்கு தொடங்குங்கள். பின்னர் வேண்டிய புத்தகங்களை 'Buy now' பொத்தானை கிளிக் செய்து தேர்வு செய்யுங்கள். இறுதியாக கடன் அட்டை/வங்கிக்கணக்கு மூலம் பணம் செலுத்துங்கள். குறிப்பிட்ட நாட்களுக்குள் புத்தகம் உங்களை வந்தடையும்
2)   என்னிடம் கடன் அட்டை (credit card) / வங்கிக்கணக்கு இல்லை. அப்பறம் எப்படி வாங்குவது?
இன்னும் சுலபம். உங்களுக்கு தேவையான புத்தகங்களின் பட்டியலுடன் +91 99946 80084 என்ற எண்ணுக்கு அழையுங்கள். உங்கள் முகவரியும் தெரிவித்தால் போதும். தபால்காரரிடம் புத்தகம் பெற்றுக்கொண்டு பணம் செலுத்தும் முறையில் (VPP) புத்தகங்களை அனுப்பி வைக்கிறோம். அதுவும் 500 ரூபாய்க்கு மேல் வாங்கினால் தபால் செலவு ஏதும் இல்லாமலேயே அனுப்பி வைக்கிறோம். நீங்கள் வெறும் புத்தகங்களின் விலையை மட்டும் செலுத்தினால் போதுமானது இம்முறை எந்த மாநிலத்திற்கும் இந்தியாவிற்குள் மட்டும் பொருந்தும். அயல் நாட்டிலுள்ள தமிழர்கள் எங்களை அழையுங்கள். வாங்கும் வழிமுறைகள் கூறுகிறோம்
3)   தபால் செலவு எவ்வளவு?
இந்தியாவிற்குள் எங்கும் கிலோவிற்கு 20 ரூபாய் மட்டும். அயல் நாடுகளில் கிலோவிற்கு 500 ரூபாய் மட்டும். அயல் நாடுகளுக்கு மொத்தமாக வாங்கினால் தபால் செலவு குறையும். எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் விபரங்களைத் தருகிறோம்.
4)   வேறு வழிகளில் பணம் செலுத்த முடியுமா?
தாராளமாக. எங்களை தொடர்பு கொண்டு வேண்டிய புத்தகங்களின் பட்டியலைக் கூறுங்கள். நாங்கள் புத்தகத்தின் விலையையும் தபால் செலவையும் கூறுகிறோம். நீங்கள் பணம் செலுத்தியவுடன் எங்களுக்கு தெரிவியுங்கள். நாங்கள் புத்தகத்தை அனுப்பி வைக்கிறோம்.
Our Bank Details:
ICICI Bank Account Number :   6215 050 11095
Branch: Udumalpet
Name: Udumalai Book Centre
IFSC/RTGS/NEFT Code: ICIC0006215
We also have SBI, HDFC bank accounts. Please ask for Details
5)   நேரில் வந்து வாங்கலாமா?
எங்களது புத்தகக்கடை உடுமலைப்பேட்டையில் உள்ளது. எந்த கிழமையும் எந்நேரமும் வந்து வாங்கலாம்.
6)  நேரில் கொண்டுவந்து கொடுத்து பணம் பெற்றுக் கொள்வீர்களா?
சென்னையில் ரூ.1500க்கு மேல் புத்தகங்கள் வாங்கினால் புத்தகங்களை உங்கள் வீடு தேடி வந்து கொடுத்து பணம் பெற்றுக் கொள்கிறோம் அதுவும் தபால் செலவு ஏதும் இல்லாமலே.
குறிப்பு:
1) காசோலைகள் ஏற்றுக்கொள்வதில்லை. 2) சென்னை மற்றும் ஒட்டியுள்ள புறநகர்களில் மட்டுமே டெலிவரி செய்ய இயலும்
மற்றபடி கோயம்புத்தூர் திருப்பூர் தாராபுரம் பழனி ஒட்டன்சத்திரம் பொள்ளாச்சி மூணார் வால்பாறை ஆகிய ஊர்களில் 1000 ரூபாய்க்கு மேல் வாங்கினால் அந்த ஊர்களின் பேருந்து நிலையத்திற்கு வந்து புத்தகங்களை அளித்து பணம் பெற்றுக்கொள்ள முடியும்.
chennai@udumalai.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் புத்தகங்களின் பட்டியல் மற்றும் உங்கள் முகவரியையும் அனுப்பலாம். அல்லது +91 99946 80084 என்ற எண்ணில் அழைத்தும் ஆர்டர் செய்யலாம்.
7) இப்போது சென்னை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களிலும் டெலிவரி செய்ய இயலும்!
நீங்கள் விரும்பும் புத்தகங்களை சென்னை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களிலேயே வந்து கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்கிறோம். வெளிநாடுகளில் வசிப்போர் அல்லது வெளிநாட்டுக்கு செல்வோர்க்கு இத்திட்டம் உதவியாக இருக்கும். குறைந்தப்பட்ச ஆர்டர் மதிப்பு 1000 ரூபாய் மட்டும். வந்து கொடுப்பதற்கு ரூ 50 மட்டும் புத்தகங்களின் விலையை விட அதிகமாக கொடுத்தால் போதுமானாது. உங்களுக்கு தேவையான புத்தகப்பட்டியல் மற்றும் வந்து புத்தகம் கொடுக்கும் நேரத்தை ஒரு நாள் முன்பாகவே +91 91503 01778 என்ற எண்ணிற்கு அழைத்து கூறினால் போதுமானது. விரைவில் திருச்சி விமான நிலையத்திற்கு இச்சேவையை அளிக்கவிருக்கிறோம்
8)   எனக்கு தேவையான புத்தகம் உங்கள் தளத்தில் இல்லை. என்ன செய்வது ?
எங்கள் தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் வேண்டிய புத்தகத்தின் பெயரும் உங்கள் தொலைப்பேசி எண்னையும் கொடுத்து விடுங்கள். கிடைத்ததும் தெரியப்படுத்துகிறோம். அல்லது
இந்த பக்கத்தில் உங்களுக்கு வேண்டிய புத்தகத்தின் விபரங்களை தெரிவியுங்கள். பின்னர் தொடர்பு கொள்கிறோம்.

Vetri Vizhaஇரத்தப்படலம் சிறப்பு செய்தி 2: நடிகர் கமல் ஹாசன் நடித்த இரத்தப்படலம் படம் ஆதித்யா சேனலில்

பதிவுலக அன்பர் கருந்தேள் அவர்களின் ஆத்மார்த்த நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பல சிறப்பு வேடங்களில் நடித்தது நமக்கெல்லாம் தெரிந்ததே. அவர் இரத்தப்படலம் முதல் பாகம் கதையில் நடித்தது பலருக்கும் தெரியாது. ஆகையால் இந்த ஞாயிற்று கிழமை காலை பத்து மணிக்கு உங்கள் (ச்சே, இந்த விளம்பரங்களை பார்த்து, பார்த்து அப்படியே எழுத வருகிறது) ஆதித்யா சேனலில் இரத்தப்படலம் கதையினை உள்ளடக்கிய வெற்றி விழா படத்தை பார்க்க தவறாதீர்கள்.

அன்றைய அளவில் படம் எடுக்கப்பட்டு இருந்தாலும்கூட சமீபத்தில் எடுக்கப்பட்ட XIII படம் அளவுக்கு மொக்கையாக இருக்காது என்பதற்கு நான் உத்திரவாதம். நம்பி பார்க்கலாம்.

விரைவில் உங்கள் அனைவருக்கும் பிடித்தமான கிசு கிசு செய்திகளுடன் வந்து உங்களை சந்திக்கிறேன்.

பூங்காவனம்,  
எப்போதும் பத்தினி.

5 comments:

  1. ச்சே, ஜஸ்ட் மிஸ்ஸு,

    மீ த செகண்டு.

    ஆனாலும், நம்ம சிபி அண்ணன், ஒலக காமிக்ஸ் ரசிகர் ஆகிய இருவருக்கும் முன்னாடி வந்து கமென்ட் போட்டாச்சு. அது போதும்.

    ReplyDelete
  2. ச்சே, ஜஸ்ட் மிஸ்ஸு,

    மீ த தேர்டு.

    ஆனாலும், நம்ம சிபி அண்ணன், ஹாஜா இஸ்மாயில் ஆகிய இருவருக்கும் முன்னாடி வந்து கமென்ட் போட்டாச்சு. அது போதும்.

    ReplyDelete
  3. இரத்தப்படலத்தை ஆன் லைனில் ஆர்டர் செய்ய முடியும் என்பது காமிக்ஸ் உலகிற்கோர் நற்செய்தி! என்னதான் நீங்கள் தைரியம் சொன்னாலும் XIIIன் சாயலை தமிழ் படத்தில் பார்க்க தைரியம் வரவில்லை ஐயா!

    ReplyDelete
  4. அய்யா பூங்காவனம் அவர்களே

    தாங்கள் தங்களின் பதிவு மூலம் தந்த தகவல்களுக்கு , மிக்க நன்றி. இதன் மூலம் வெளிநாடு வாழ் வாசகர்கள் மிகவும் பயனடைவார்கள்

    இரத்தப்படலம் என்றதும் வேறு எதையோ ? எதிர்பார்த்து ஏமாந்தது வேறு விஷயம்

    ReplyDelete
  5. ரத்த படலம் வாங்கிட்டோம்ல ..

    ReplyDelete

Related Posts Widget for Blogs by LinkWithin