இரத்தப்படலம் - சிறப்பு செய்திகள்
அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நேற்று திரு வாண்டுமாமா அவர்களுக்கு பிறந்த நாள். அவருக்கு தாமதமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். இன்று ஓர் அவசர வேலையில் (அட, காத்தவ் உடன் இல்லைங்கோவ்) இருப்பதால் இரண்டே இரண்டு செய்திகளை மட்டுமே வெளியிட இந்த சிறப்பு செய்தி பதிவு. செய்திகள் இரண்டுமே இரத்தப்படலம் இதழுடன் சம்பந்தப்பட்டு இருப்பதால் தலைப்பு இரத்தப்படலம் - சிறப்பு செய்திகள் என்று இருக்கிறது. செய்திகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே பார்ப்போமா?
இரத்தப்படலம் சிறப்பு செய்தி 1: இரத்தப்படலம் புத்தகம் - ஆன்லைனில் வாங்க:
பல அன்பர்கள் இன்றைக்கும் இரத்தப்படலம் இடழ் எங்கே கிடைக்கும் என்று கேட்டுக்கொனே இருக்கிறார்கள். ஆன்லைனில் கிடைக்குமா? சென்னையில் கிடைக்குமா? திண்டிவனம் பக்கத்துல கிடைக்குமா? என்றெல்லாம் பல கேள்விகள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லும் தகவலே இந்த பதிவின் முதல் செய்தி: நீங்கள் இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் இதழை ஆன்லைனில் உடுமலை.காம் தளத்தில் வாங்கலாம். அதற்க்கான லிங்க் இதோ:
http://udumalai.com/?prd=Raththa%20padalam&page=products&id=9013
இங்கே நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் இரண்டு.
ஒன்று: விலை இருநூறு ருபாய் மட்டுமே. ஐநூறோ, நானூறோ இல்லை. இவர்கள் கலைசேவை செய்கிறார்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளவும் இல்லை. தட்ஸ் ஆல்.
இரண்டு: நீங்கள் ஆர்டர் செய்த மூன்று வேலை நாட்களிலேயே உங்கள் விலாசம் தேடி இந்த புத்தகம் வந்துவிடும்.
ஆர்டர் செய்வது எப்படி ?1) புத்தகங்களை எப்படி வாங்குவது |
இரத்தப்படலம் சிறப்பு செய்தி 2: நடிகர் கமல் ஹாசன் நடித்த இரத்தப்படலம் படம் ஆதித்யா சேனலில்
பதிவுலக அன்பர் கருந்தேள் அவர்களின் ஆத்மார்த்த நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பல சிறப்பு வேடங்களில் நடித்தது நமக்கெல்லாம் தெரிந்ததே. அவர் இரத்தப்படலம் முதல் பாகம் கதையில் நடித்தது பலருக்கும் தெரியாது. ஆகையால் இந்த ஞாயிற்று கிழமை காலை பத்து மணிக்கு உங்கள் (ச்சே, இந்த விளம்பரங்களை பார்த்து, பார்த்து அப்படியே எழுத வருகிறது) ஆதித்யா சேனலில் இரத்தப்படலம் கதையினை உள்ளடக்கிய வெற்றி விழா படத்தை பார்க்க தவறாதீர்கள்.
அன்றைய அளவில் படம் எடுக்கப்பட்டு இருந்தாலும்கூட சமீபத்தில் எடுக்கப்பட்ட XIII படம் அளவுக்கு மொக்கையாக இருக்காது என்பதற்கு நான் உத்திரவாதம். நம்பி பார்க்கலாம்.
விரைவில் உங்கள் அனைவருக்கும் பிடித்தமான கிசு கிசு செய்திகளுடன் வந்து உங்களை சந்திக்கிறேன்.
பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.