
நம்முடைய வலையுலக ரிபோர்ட்டர் கிசு கிசு கோபால் சமீப காலங்களில் வலையுலகில் நடந்து வரும் சுவையான தகவல்களை நம்முடைய வலைப் பூவில் பகிர்ந்து கொள்ள சம்மதித்து இருக்கிறார். இனிமேல் கிசு கிசு கோபால் அவர்களின் காமிக்ஸ் வலையுலக கிசு கிசுக்கள் தொடர்ந்து வெளிவரும் என்று நம்பலாம்.
கிசு கிசு கார்னர் 1:
(1) ஊர் பெயரை இணையதள பெயராக கொண்ட அந்த வலைப்பூ சொந்தக்காராரின் கணினி மூன்று மாதங்களுக்கு பிறகு சரியாகி விட்டதாம். தீவிர போராளி ஆன அவர் B.S.N.L மற்றும் தன்னுடைய கணினி மேற்பார்வையாளர்களை விடாமல் முயற்சி செய்ததின் பலனே இது. இன்று (28-03-2009) ஊருக்கு செல்லும் அவர் திங்கள் கிழமை திரும்பி வந்து பல புதிய இடுகைகளை இட தயாராக உள்ளாராம். அதிலும் குறிப்பாக மினி லயன் சம்பந்தப் பட்ட ஒரு பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று பல வலைப் பதிவர்கள் நம்புகிறார்கள். அடுத்த வாரம் அந்த பதிவு வரும் என்பது திண்ணம். விருந்துண்ண நீங்கள் தயாரா?
(2) முடி சூடிய அந்த மன்னரின் மடிக்கணினி "மறுபடியும்" பிரச்சினை செய்து உள்ளதாம். அதனால் மன்னர் கடுப்பில் இருப்பதாகவும், மீண்டு வந்த அவரால் சொன்ன படி பதிவிட இயலவில்லையே என்ற கோபமும் அவரை விரக்தியின் உச்சதிர்க்கே கொண்டு சென்று உள்ளதாம். கிட்ட தட்ட பதினைந்து பதிவுகளை ரெடி ஆக வைத்து உள்ளாராம் மன்னர். அனைத்தும் ஏப்ரல் மாதத்திலா? அல்லது வாரக் கடைசியில் வரும் என்று நம்பலாமா?
(3) காமிக்ஸ் வலைப் பூக்களுக்கு முன்னோடியாக திகழும் அந்த வலைப்பூவின் சொந்தக்காரர் மூன்று மாதங்களாக பதிவிடாமல் இருக்க காரணம் யாரோ ஒரு பயங்கரவாதி பதிவராம். அவர் எண் கூட ஆறுக்கும் எட்டுக்கும் நடுவில் இருக்குமாம். அவர் பல ஸ்கான்'களை பல மாதங்களாக தாமதப் படுத்தி வருகிறாராம். ஆனால் அந்த ஸ்கான்'கள் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டதால், மிக மிக விரைவில் அந்த பதிவு வரும் என்று நம்பலாம். இந்த தகவலை வலையுலகிற்கு கசிய வைத்தது அவரின் வேண்டப் பட்ட விரோதியாகிய இன்னொரு பதிவர்.
(4) வலைப்பதிவுகளில் பங்கு பங்கு என்று மார்கட் அப்டேட் செய்யும் அந்த பதிவர், உண்மையில் என்ன செய்கிறார் என்பதை உளவு பார்த்ததில் அவர் மார்க்கெட்டுக்கு சென்று "நின்னுக்கோரி வர்ணம், வரணும்" என்று பங்கு போடுவதை பார்த்து மயங்கி விட்டார்களாம் நமது உளவாளி ரிபோர்டர்கள்.
(5) ஒலகமே ஒரு மேடை, நாமெல்லாம் அதிலே காமிக்ஸ் ரசிகர்கள் என்று கூறும் ஒரு வலைப் பதிவர் மிக மிக விரைவில் (இன்னும் ஒரு வாரத்தில்) இடப்போகும் பதிவு தமிழ் காமிக்ஸ்'களில் நடக்கும் பித்தலாட்டங்களை துகிலுரித்து காட்டும் என்று கூறுகிறார். அப்படி என்ன பதிவோ?
இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்திடம் இருந்து ஒரு பெர்சனல் மின் அஞ்சல் வரும்.
கிசு கிசு கோபால்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே.