அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
என்னுடைய அறிமுகத்தை படித்து மகிழ்ந்த அனைவருக்கும் நன்றிகள். கும்மி அடித்த கூட்டம் இருக்கும் வரை இந்த பூங்காவனத்தின் பெயர் நிலைத்து இருக்கும் என்பதற்கு வேறு சாட்சிகளே தேவை இல்லை. எனக்கு தெரிந்த வரையில் ஒரே ஒரு பதிவிற்கு இவ்வளவு கும்மிகள் வேறு எந்த காமிக்ஸ் பதிவிலும் வந்தது இல்லை.
அடுத்த மாதம் முதல் என்னுடைய இளம்பிராயத்து சாகசங்கள் (பூங்காவனத்தின் ஏங்கா மனம்? புஷ்பவதி பூங்காவனத்தின் புல்புல் இரவுகள்?) ஆரம்பம் ஆகின்றன. அதற்க்கு முன்னர் நீங்கள் என்னை உருவாகிய பிரம்மாக்களை தெரிந்து கொள்ள வேண்டாமா? அதனால்தான் இந்த அறிமுகப் பதிவு. முதலில் என்னை உருவாக்கியவர்களின் அறிமுகங்கள் (இவை அனைத்தும் பின்னுட்டங்களின் மூலமே எடுக்கப் பட்டவை ஆகும்).
முதலில் எங்களின் பிரம்மா ஆகிய திரு ஜோஸ் அவர்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு, அவரது பெயில்போர்ட் சைஸ் புகைப் படத்துடன் (பாஸ் போர்ட் சைஸ் புகைப் படம் தான், ஆனால் அவர் பாஸ் ஆகாததால் தான் அது பெயில்போர்ட் சைஸ் புகைப் படம் ஆகி விட்டது).
பதிவகம்: புலா சுலாகி
பதிவர்: தோழர் புலா சுலாகி
பதிவு: இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம் (ராணி காமிக்ஸ-பேய்க்காடு)
Chezhi said...
//கண்ணாடி ஏன் கிங் விஸ்வாவைக் காட்டவில்லை!!!// அப்ப நம்ம ஜோஸ் எல்லாரும் என்ன தலைமறைவாக இருந்தார்களா என்ன?
திரு ஜோஸ் அவர்களின் இன்னும் சில அரிய படங்கள் உங்களின் மேம்பட்ட பார்வைக்கு:
| ஜோஸ்’ம் அவருடைய அல்லக்கையும் | மாயாவி'யிடம் அடி வாங்கும் ஜோஸ் |
| |
அடுத்தபடியாக என்னுடைய இன்னொரு பிரம்மா ஆன திரு வயகரா தாத்தா அவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இவர் தான் வயகரா தாத்தா. இவரின் வயது என்ன என்பதை தெரிந்து கொள்ள பலர் ஆசைப் படுவார்கள். பெண்களிடம் வெய்தும், ஆண்களிடம் சம்பளமும் கேட்கக் கூடாது. அதைப் போலவே வயகரா தாத்தா அவர்களிடம் அவரின் வயதும், ஸ்கோர் என்ன என்பதையும் கேட்கக் கூடாது. அவர் ஒரு "பல களம் கண்ட வீரர்" என்பதால் அவரிடம் ஸ்கோர் கேட்க வேண்டாம் என்று கூறுகிறேன். மேலும் அவருக்கு பத்தாயிரத்துக்கு மேல் எண்ணவும் தெரியாது என்பதும் ஒரு காரணம் ஆகும்.
அவரை பற்றி நான் எதுவும் கூறுவதை விட அவரே, அவரைப் பற்றி லக்கிலூக்கிடம் கூறுவதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
லெட் த கும்மி ஸ்டார்ட்.
--
பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.