Wednesday, April 14, 2010

தமிழ் புத்தாண்டு சிறப்பு பதிவு- கிசுகிசு கார்னர் 7

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

தமிழ் காமிக்ஸ் தளத்தில் இன்றைய தினம் ஒரு மறக்க முடியாத தினமாகும். ஆமாம், தமிழ் புத்தாண்டு மற்றும் வேண்டப்பட்ட விரோதி கிங் விஸ்வாவின் பிறந்த தினமாகிய இன்று மொத்தம் பத்து பதிவுகள் இடப்பட்டன. அதன் விவரங்கள் இதோ: @ 10.30 PM

1. ஒலக காமிக்ஸ் ரசிகர் - தலை சிறந்த காமிக்ஸ்கள் -தமிழ் காமிக்ஸ் உலகில் ராஜாக்களும், மன்னர்களும்- 20 Comments

2. புலா சுலாகி-தமிழர் புத்தாண்டு ஸ்பெஷல் - ராஜாளி ராஜாப்பயல் - இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர் – 11 comments

3. முத்து விசிறி -காமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்- ராசா... இன்னைக்கு உனக்கு பிறந்தநாள்-16 comments.

4. காமிக்ஸ் பிரியன்-க.கொ.க.கூ-தங்க ராஜா – 13 comments

5. காமிக்ஸ் காதலன்-பொக்கிஷம்-அரசியல் சூப்பர் கிங்ஸ் – 7 comments.

6. வேதா-ஸ்கிப் காமிக்ஸ்-Tatty Mane – King of the Jungle – 7 Comments.

7. ஸ்பைடர் -மீண்டும் ஸ்பைடர்-கிங் ஆப் குரூக்ஸ் – 3 comments.

8. பயங்கரவாதி டாக்டர் செவன்-அ.கொ.தீ.க-கோடை மலர்-9 comments.

9. லக்கி லுக்-தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்-சிறப்பு பதிவு:மேற்கில் ஒரு மாமன்னர்- 18 comments

10. ஐய்யம்பாளயத்தார்-காமிக்ஸ் பூக்கள்-பூந்தளிர் முதல் இதழ் – 4 comments.  

=======================================================================================================

நம்முடைய வலையுலக ரிபோர்ட்டர் கிசுகிசு கோபால் சமீப காலங்களில் தமிழ் காமிக்ஸ் வலையுலகில் நடந்து வரும் சுவையான தகவல்களை நம்முடைய வலைப் பூவில் பகிர்ந்து கொள்ள சம்மதித்து அவருடைய கைங்கர்யமான கிசுகிசு கார்னர்-1 , கிசுகிசு கார்னர்-2 , கிசுகிசு கார்னர்-3, கிசுகிசு கார்னர்-4, கிசுகிசு கார்னர்-5  மற்றும் கிசுகிசு கார்னர்-6.வாசகர்களிடையே பெற்ற வரவேற்பினால் இதோ அதன் அடுத்த கட்டம்: கிசு கிசு கார்னர் 7.

  • சென்ற வாரத்தில் ஒரு மாலை நேரத்தில் தமிழ் காமிக்ஸின் முடி சூடிய மன்னர் ஒருவர் கடற்கரையோரம் "உய்யலாலா" என்று ஜாலியாக இருந்தாராம், அதனை சிறப்பு நிருபர் மொட்டுக்கடிச்சான் என்பவர் சாட்சிகளுடன் அப்துல் கலாமின் காதலரிடம் நிரூபிக்க, அவரும் அதனை அவரின் தளத்தில் கமெண்ட்டாக இட்டுவிட, அனைவருக்கும் அந்த ஊரறிந்த ரகசியம் தெரிந்து விட்டதாம். இனிமேலாவது அந்த சம்பந்தப்பட்ட பதிவர் ஜாக்கிரதையாக இருப்பாரா?
  •  
  • மிதவாதி நோயாளி சிக்ஸ் என்ற பதிவர் சமீபத்தில் இன்னுமொரு பதிவரை புத்தக செட் ஒன்றை வாங்க விடாமல் தடுத்தாராம். அதாவது ராணி காமிக்ஸ் முதல் நூற்றியிருவது புத்தகங்கள் அட்டகாசமான கண்டிஷனில் ருபாய் ஆறாயிரம் விலையில் வாங்க இருந்தால் நண்பர் ஒருவர். ஆனால், அந்த தகவலை கேள்விப்பட்ட மிதவாதி ராணி காமிக்ஸ் புத்தகங்களின் அதிகபட்ச மார்கெட் விலை ருபாய் ஐந்து என்பதை விளக்கி சொல்ல, உண்மையை அறிந்த அந்த கொழந்தை பதிவர் அந்த ராணி காமிக்ஸ் சேட்டை வாங்கவில்லையாம். இதனால் கணினி துறையில் COBOL படித்த நபர் ஒருவருக்கு பெருத்த நஷ்டமாம்.
  •  
  • நம்முடனே பல பதிவுகளின் மூலம் தம்முடைய கருத்துக்களை அளித்த தென்னம்பாளயத்தார் அவர்கள் திடீரென்று அதிரடியாக அரசியலில் குதித்துள்ளார். கோட்டையை நோக்கி சென்றுக் கொண்டு இருந்த அவரை அண்டவெளி ரசிகர் ஒருவர் பார்த்து விட்டு சிலபல புகைப்படங்களை ஆதாரமாக வேறு எடுத்துவிட, வேறு வழியில்லாத தென்னம்பாளயத்தார் தான் கோட்டையை நோக்கி முன்னேறுவதை ஒப்புக் கொண்டு தன்னுடய அரசியல் பிரவேசத்தினைஉறுதி செய்தார். அதனைப் பற்றிய ஒரு முழுநீள பதிவினை வேறவதாவது தளத்தில் இந்த வாரம் படியுங்கள்.

இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்திடம் இருந்து ஒரு பெர்சனல் மின் அஞ்சல் வரும்.

கிசுகிசு கோபால்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே.


--
சிறப்பான கிசு கிசு'க்களுக்கு நன்றி கோபால்.


பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.

9 comments:

  1. அன்புடையீர்,

    அனைவருக்கும் அம்பேத்கர் தின, தமிழ் புத்தாண்டு, விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்.

    கிசு கிசு கார்னர் 7 வலையேற்றப்பட்டுள்ளது.


    லெட் த கும்மி ஸ்டார்ட்.

    இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

    பூங்காவனம்,
    எப்போதும் பத்தினி.

    ReplyDelete
  2. போட்டுத் தாக்குங்க கோபாலு, விடாதீங்க ஆமா. ஆமா நீங்க ஏங்க மெரீனா பீச்சிற்கு போகாம விட்டீங்க :))

    ReplyDelete
  3. காற்று வாங்கப் போனேன்
    சில போட்டோ வாங்கி வந்தேன்
    அதை நெட்டில் போட்டுச் சென்ற
    அந்தக் கன்னி என்ன ஆனாள்...

    ஓகோ காற்று வாங்கப் போனேன்....

    ReplyDelete
  4. //மிதவாதி நோயாளி சிக்ஸ் என்ற பதிவர் சமீபத்தில் இன்னுமொரு பதிவரை புத்தக செட் ஒன்றை வாங்க விடாமல் தடுத்தாராம்.//

    இந்த மித வாதிகளே இப்படித்தான், குத்துங்க எசமான், குத்துங்க

    ReplyDelete
  5. விஸ்வா வின் புகைப்படத்தை நானும் ஒரு பதிவில் பார்த்தேன்

    ReplyDelete
  6. //விஸ்வா வின் புகைப்படத்தை நானும் ஒரு பதிவில் பார்த்தேன்//

    இந்த பதிவில் விஜய டி ராஜேந்தர் தானே இருக்கிறார்?

    ReplyDelete
  7. அண்டவெளி ரசிகரே,
    அந்த புகைப்படங்களை வெளியிடுங்கள்.

    ReplyDelete
  8. நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் அம்பேத்கார் தின வாழ்த்துக்கள்.

    நண்பர் விஸ்வாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. உங்கள் காமிக்ஸ் உலகத்தை வலைச்சரத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி
    http://blogintamil.blogspot.com/2010/06/comics.html

    எனது தளம் http://thisaikaati.blogspot.com

    ReplyDelete

Related Posts Widget for Blogs by LinkWithin